Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த குணங்கள் கண்டிப்பாக இருக்கணுமாம்... உங்ககிட்ட இருக்கா?
இந்திய வரலாற்றின் பிரபல பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆச்சார்யா சாணக்கியர் பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை.
இந்திய வரலாற்றின் பிரபல பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆச்சார்யா சாணக்கியர் பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை. சந்திரகுப்த மௌரியரின் திறமையை அங்கீகரித்து அவருக்கு மன்னனாக முடிசூட்டியவர் சாணக்கியர். சாணக்கியர் பொருளாதாரம் பற்றிய நிதி கிரந்தம் என்ற புத்தகத்தையும் எழுதினார். இதில், சமூக, வணிக, பொருளாதார மற்றும் இராஜதந்திரக் கொள்கைகளைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்துகிறார்.

சாணக்கியரின் நீதியை பின்பற்றும் எவரும் வாழ்க்கையில் தோல்வியடைய மாட்டார்கள். வீட்டின் முன்னேற்றம் அதன் தலைமையைப் பொறுத்தது என்று சாணக்கியர் கூறுகிறார். குடும்பத் தலைவரிடம் சில சிறப்புகளும், குணங்களுக்கும் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் சாணக்கியர். இந்த குணங்கள் இல்லாவிட்டால் அந்த வீட்டில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ இருக்காது.

பணத்தை சேமிப்பது
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, வீட்டின் தலைவர் பணத்தை சேமிப்பவராக இருக்க வேண்டும். வருங்காலத்தில் பணத்தேவை இருக்கும் போது பிறரிடம் உதவி கேட்காத சூழல் உருவாகாமல் இருக்க, பணத்தைச் சேமிப்பது தலைவரின் பொறுப்பாகும்.

வீட்டின் சூழலை ஒழுங்காக வைத்திருப்பது
வீட்டின் தலைவர் எடுக்கும் முடிவில் உறுதியாக இருந்தால்தான் குடும்பம் முன்னேறும் என்கிறார் சாணக்கியர். அவர் வீட்டின் சூழ்நிலையை ஒழுங்காக பராமரிக்க வேண்டும். குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்.

எளிதில் நம்பக்கூடாது
ஆதாரம் இல்லாமல் எல்லோருடைய வார்த்தைகளையும் வீட்டின் தலைவர் நம்பக்கூடாது. வீட்டின் தலைவர் தங்கள் காதுகளில் விழும் அனைத்தையும் உடனடியாக நம்பக்கூடாது. வீட்டில் ஏதேனும் பிரச்சினைகள் நடந்தால், இரு தரப்பையும் நன்றாகக் கேட்டு அதனை தீர்த்து வைக்க வேண்டும்.

செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்
ஆச்சார்ய சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில், வருமானத்திற்கு ஏற்ப வீட்டின் செலவுகளைச் செய்வது வீட்டின் தலைவரின் பொறுப்பு என்று எழுதியுள்ளார். செலவுகளை எப்போதும் கட்டுப்படுத்த வேண்டும். வீட்டின் தலைவரால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், குடும்பம் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டும்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, வீட்டின் தலைவர் எந்த முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். இந்த முடிவினால் குடும்பத்தில் உள்ள எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை அவர் உறுதி செய்ய வேண்டும்.

குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும்
சாணக்கிய நீதியின் படி, குடும்பத்தின் தலைவர் குடும்ப ஒற்றுமையை பராமரிக்க வேண்டும். தங்கள் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி அவர்களின் பிரச்சினைகள் என்ன அவர்களின் தேவைகள் என்னவென்பதை கேட்க நேரம் ஒதுக்க வேண்டும். குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி, அவர்களின் தேவைகளை தீர்க்க வேண்டும்.

உடன்பிறந்தவர்களுடன் சுமூக உறவு வேண்டும்
சாணக்கிய நீதியின் படி, குடும்பத்தில் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை பராமரிக்க தங்கள் உடன்பிறந்தவர்களுடன் சுமூகமான உறவை பராமரிக்க வேண்டும். இல்லையெனில், அது அவர்களின் குடும்பத்தை எதிர்மறையாக பாதிக்கும்.



Click it and Unblock the Notifications











