Latest Updates
-
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க...
சாணக்கிய நீதி படி இந்த 4 குணங்கள் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாதாம்... உங்ககிட்ட இருக்கா?
ஆச்சார்ய சாணக்கியரின் புத்திக்கூர்மை மற்றும் அரசியல் ஞானம் பற்றி அனவைருமே அறிவார்கள். ஒருவரின் வாழக்கையில் வெற்றியை அடைவதற்கான அனைத்து வழிகளையும் சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.
ஆச்சார்யா சாணக்கியரின் புத்திக்கூர்மை மற்றும் அரசியல் ஞானம் பற்றி அனவைருமே அறிவார்கள். ஒருவரின் வாழ்க்கையில் வெற்றியை அடைவதற்கான அனைத்து வழிகளையும் சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். அவற்றை பின்பற்றுவது இப்போதும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒவ்வொரு நபருக்கும் சில நல்ல குணங்கள் மற்றும் சில கெட்ட குணங்கள் உள்ளன, அவை அவரது வெற்றி மற்றும் தோல்விக்கு வழிவகுக்கும்.

சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், உங்கள் நடத்தையில் 4 சிறப்புக் குணங்களைச் சேர்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கையிலும், நடத்தையிலும் இந்த குணங்கள் இருந்தால், நீங்கள் எந்த வேலையிலும் தோல்வியடைய மாட்டீர்கள். சாணக்கியர் கூறும் அந்த 4 குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அனைவரிடமும் நல்ல உறவை பேணுவது
வெற்றிக்கான முதல் திறவுகோல் மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளும் விதம்தான் என்று சாணக்கியர் கூறுகிறார். உங்கள் நடத்தை எல்லோரிடமும் அன்பாக இருந்தால், எல்லோரும் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள், உங்கள் வேலையில் எந்த இடையூறும் இருக்காது. உங்களின் நல்ல குணத்தால் உங்களுக்கு ஏற்படும் தடங்கல்களைத் தாண்டுவதற்கு உதவிகள் எப்போதும் கிடைக்கும். எதிர்மறை குணத்துடன் இருப்பவர்களுக்கு உதவிகள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.

எப்போதும் கோபம் கொள்ளக்கூடாது
கோபம் எப்போதும் இருபக்கம் கூர்மையுள்ள ஆயுதம் போன்றது. அதனால் நன்மைகளை விட தீமைகளே அதிகமா. சாணக்கியர் சில சமயங்களில் கோபத்தால் நாம் செய்யும் வேலையை கெடுத்து விடுகிறோம் என்று கூறியுள்ளார். கோபம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மற்றவர்களுடனான உறவையும் கெடுத்துவிடும். கோபம் கொண்டவர் மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதன் மூலம் மகிழ்ச்சியைப் பெறுவார் என்று உணர்கிறார், ஆனால் உண்மையில் அவர் கோபத்தால் தனக்குத்தானே தீங்கு செய்கிறார். கோபத்தைக் கட்டுப்படுத்துபவர்களே வாழ்க்கையில் விரைவில் வெற்றிப்பெறுவார்கள்.

முட்டாளுடன் வாக்குவாதம் செய்யக்கூடாது
சாணக்கிய நீதியின் படி, முட்டாள்தனமான ஒருவருடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யக்கூடாது. இதைச் செய்வதால் உங்கள் சக்தியும், நேரமும் வீணாகும் அது மட்டுமின்றி இது உங்களுக்கு முட்டாள் போன்ற தோற்றத்தை பிறரிடம் கொடுக்கும். சாணக்கிய நீதியின் படி, சில குணங்கள் ஒரு நபருக்கு இயல்பாகவே உள்ளன, அதைக் கற்பிக்க முடியாது, ஆனால் அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய குணங்கள் எப்போதும் மேம்படுத்தப்பட வேண்டும்.

ஏழைகளுக்கு உதவுங்கள்
சாணக்கிய நீதியின் படி, ஒருவருடைய சக்திக்கு ஏற்ப ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். ஆச்சார்ய சாணக்கியர், தர்மம் செய்வது எந்த ஒரு நபரின் இயல்பிலும் உள்ளது, அதை எந்த மனிதருக்கும் கற்பிக்க முடியாது என்று கூறியுள்ளார். தானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கும் ஆத்ம திருப்தி கிடைக்கும். இதைத் தவிர ஒவ்வொரு வேலையையும் அவசரப்பட்டு செய்யக்கூடாது. பொறுமை மனிதனின் சிறந்த குணமாக கருதப்படுகிறது. கடினமான சூழ்நிலைகளில் பொறுமை காக்க வேண்டும்.
இந்த அடிப்படை நல்ல குணங்கள் இருக்கும் எவரும் வாழ்க்கையில் விரைவில் வெற்றியையும், நிம்மதியையும் அடைவார்கள்.



Click it and Unblock the Notifications
