Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
சாணக்கியர் தனது அறிவு மற்றும் கொள்கைகளால் சந்திரகுப்த மௌரியரை இந்தியாவின் பேரரசர் ஆக்கினார்.
சாணக்கியர் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிஞர். சாணக்கியர் தனது அறிவு மற்றும் கொள்கைகளால் சந்திரகுப்த மௌரியரை இந்தியாவின் பேரரசர் ஆக்கினார். அவர் ஒரு திறமையான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணராகக் கருதப்படுகிறார். சாணக்யாநிதி என்ற நூலில் ஒருவரின் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி எழுதியுள்ளார்.

பணம் பற்றிய சாணக்கியரின் கருத்துக்கள் இன்றைய வாழ்க்கைக்கும் பொருத்தமானவையாக இருக்கிறது. மக்கள் இன்றும் அவற்றைப் பின்பற்றுகிறார்கள். எந்தவொரு நபரும் நல்வாழ்வுக்கு செல்வம் பெறுவது அவசியம். ஒவ்வொரு நபரும் தனது தேவைகளை நிறைவேற்றவும் ஆடம்பரங்களை அனுபவிக்கவும் பணம் சம்பாதிக்கிறார்கள். சாணக்கியர் பணம் பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். மக்கள் சில வழிகளில் சம்பாதிக்கும் பணம் அவர்களுக்குப் பயன்படாது. இத்தகைய சேமிப்பு நீண்ட காலம் நீடிக்காது என்றும் சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, இந்த 4 வழிகளில் சம்பாதித்த பணம் ஒருபோதும் நிலைக்காது.

சட்டவிரோதமாக சம்பாதித்த பணம்
தவறான வழியில் சம்பாதித்த பணம் உங்களுக்கு சிறிது காலம் மகிழ்ச்சியைத் தரும் என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை வைத்து எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முடியாது. அத்தகைய பணம் எதிர்காலத்தில் உங்களுக்கு வருத்தத்தைத் தரும். திருடி அல்லது ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர் ஏழையாக மாற அதிக நேரம் எடுக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்.

திருடப்பட்ட பணம்
சாணக்கியரின் கூற்றுப்படி, திருடப்பட்ட வருவாயிலிருந்து ஒரு நபர் ஒருபோதும் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்று கூறுகிறார். அவர்கள் சிறிது காலம் மகிழ்ச்சியைப் பெறலாம் ஆனால் அது என்றென்றும் நிலைக்காது. சொந்த ரத்தத்தாலும் வியர்வையாலும் உழைத்து சம்பாதித்த மகிழ்ச்சியே பெரிது. கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் வீட்டிற்கு புண்ணியம் தரும். நீங்கள் ஒருபோதும் நிதி நெருக்கடியை சந்திக்க மாட்டீர்கள். திருடப்பட்ட சம்பாத்தியம் ஒருவருக்குக் கஷ்டங்களைத் தருகிறது, அதன் காரணமாக உங்கள் அழிவும் தொடங்கும். வாழ்க்கையில் சரியான பாதையில் செல்வதன் மூலம் மட்டுமே ஒரு நபர் செழிப்பை அடைய முடியும்.

மோசடி மூலம் கிடைத்த பணம்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய மாட்டார். இவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் எங்கும் யாரும் மதிக்க மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில் அந்த நபரின் வாழ்க்கையும் அழிக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்தில் மக்கள் இடம் கொடுப்பதில்லை. அதனால் அப்படிப்பட்டவர்கள் கடனால் அவதிப்படுகின்றனர். மோசடி மூலம் பெறப்பட்ட செல்வம் உங்கள் குடும்பத்தின் அழிவுக்கு கூட வழிவகுக்கும்.

தீய செயல்களுக்கு கிடைத்த செல்வம்
தவறான செயல்களைச் செய்து பணம் சம்பாதிப்பவர்களின் வீட்டில் லட்சுமி தேவி ஒருபோதும் தங்க மாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏமாற்றி, பிறரைக் கொள்ளையடித்து அல்லது சூதாட்டத்தின் மூலம் சம்பாதித்த பணம் மிகக் குறுகிய கால அளவைக் கொண்டது. அதெல்லாம் விரைவில் உங்கள் கையை விட்டுப் போய்விடும். இந்த தீய செயல்களால் சம்பாதிக்கும் ஒரு நபரின் பணம் அனைத்தும் விபத்து, நோய் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் அழிக்கப்படும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

பணத்தை எப்படி சரியாக பயன்படுத்துவது?
மனிதன் சம்பாதிப்பதில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் பணத்தைச் சேமிக்க விரும்பினால், அதைச் செலவழிப்பதற்கான சரியான வழியை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் தேவைக்கேற்ப பணத்தைத் தொண்டு, முதலீடு போன்றவற்றுக்குப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் சாணக்கியர்.

உங்கள் சொந்த சம்பாத்தியத்தைப் பற்றி பெருமை கொள்ளாதீர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது சம்பாத்தியத்தில் மயங்கவோ அல்லது பெருமைப்படவோ கூடாது. பணத்தின் மீது பேராசை கொண்ட ஒரு மனிதன் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பணம் வரும்போது ஈகோ நிறைந்த ஒருவர் சில நாட்களில் மீண்டும் ஏழையாகிறார்கள்.

உங்கள் சொந்த வருமானத்தில் திருப்தி அடையுங்கள்
ஒருவர் தன்னிடம் உள்ள பணத்தினாலோ வருமானத்தினாலோ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார். வருமானத்தை விட அதிகமாக செலவு செய்பவர் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அவரது வாழ்க்கையில் எப்போதும் நிதி சிக்கல்கள் உள்ளன. இலக்கே இல்லாமல் வாழ்பவர் வெற்றியை அடைய மாட்டார்கள். எனவே உங்கள் இலக்குகளை யாரிடமும் தெரிவிக்காதீர்கள். ஏனென்றால் மற்றவர்கள் உங்கள் வேலையில் குறுக்கிடுவார்கள். நீங்கள் பணம் விரும்பினால், உங்கள் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications
