Latest Updates
-
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்? இதோ அந்த பட்டியல்...
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கச் சென்ற பிரபலங்களின் பட்டியலைத் தான் இந்த கட்டுரையில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சின்னாலே உலக அளவில் புகழ்பெற்று விளங்குவது பட்டு தான். அதற்கு அடுத்தபடியாக, கடந்த 48 நாட்களாக தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும் உச்சரிக்கிற பேராக இருப்பது அத்தி வரதர் தான். காஞ்சி மாநகருக்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்புலம் இருப்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம். அந்த புண்ணிய ஸ்தலமாகக் கூறப்படுகின்ற காஞ்சிபுரம் ஆன்மீக பூமி என்பது நமக்குத் தெரிந்ததே.

அதில் இந்த ஆண்டு இன்னும் கூடுதல் பெருமையும் புகழும் புண்ணியமும் சேர்த்தது அத்திவரதர் தான்.

ஏன் அத்திமரம்
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாளின் சிறப்பே மற்ற கோவில்களைப் போல சுதை அல்லது கல் சிற்பமாக இல்லாமல் மரத்தால் செய்யப்பட்டிருப்பது தான் அவருடைய மிகப்பெரிய சிறப்பு.
பொதுவாக மரத்தால் கடவுள் சிலைகள் செயய்பப்டாததற்குக் காரணமே அது மிக விரைவாக சிதலமடைந்து விடும். அபிஷேகம் ஆகியவை செய்யப்படும் போது தண்ணீரில் ஊறி சிலைகள் வீணாகிப் போய்விடும் என்பதற்காகத் தான். ஆனால் இந்த காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாளின் சிறப்பே அத்தி மரத்தினால் செய்யப்பட்டது தான்.

அத்திமரச் சிறப்பு
அத்தி மரத்திற்கு புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல, நீரை அதிகப்படியாக உடனடியாக ஈர்த்துக் கொள்ளும் சக்தி உண்டு. அதனால் தான் சிற்பத்தை அத்தி மரத்தில் செதுக்கி இருக்கிறார்கள். அத்தி மரத்தில் என்ன மாதிரியான அபிஜேகம் செய்தாலும் அது பெரிதாக ஊறிப்போகாது.

அடுத்த தரிசனம்?
1979 ஆம் வருடத்துக்குப் பிறகு, 40 ஆண்டுக்கு ஒருமுறை தான் அத்தி வரதர் அங்கிருக்கும் அனந்தரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து மக்களுக்கு தரிசனம் தருவார். இந்த வகையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி வெளியே வந்து கடந்த 48 நாட்களாக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். இதில் கோடிக்கணக்கான மக்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து தரிசனம் மேற்கொண்டனர். அதில் நாம் விரும்பும் பல பிரபலங்களும் உண்டு. இந்த முறை விட்டுவிட்டால் அடுத்து 2059 இல் தான் மீண்டும் அத்திவரதரைப் பார்க்க முடியும் என்பதால், பார்த்து அருள்பெற்ற பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அத்தி வரதரை தரிசித்த பிரபலங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, த்ரிஷா உட்பட பல திரைப்பிரபலங்களும் அதேபோல முதல்வர்? ஆளுநர் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் தரிசித்துச் சென்றார்கள். அதில் மிக முக்கியமான பற்றிய விரிவான பட்டியல் இதோ உங்களுக்காக...
நடிகர் ரஜினிகாந்த்
நடிகை நயன்தாரா& விக்னேஷ் சிவன்
நடிகர் பிரபு
நடிகை திரிஷா (நண்பர்களுடன்)
நடிகை ரோஜா
விஜயகாந்த் (குடும்பத்துடன்)
பன்வாரிலால் புரோஹித் ( தமிழக ஆளுநர்)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
ராம்நாத் கோவிந்த் (இந்தியக் குடியரசுத் தலைவர்)
ஓ.பன்னீர் செல்வம் (துணை முதலமைச்சர்)
மோகன் பகவத் (ஆர் எஸ்எஸ் தலைவர்)
தம்பிதுரை (மக்களவை முன்னாள் துணைத்தலைவர்)
அன்புமணி ராமதாஸ் (முன்னாள் மக்களவை உறுப்பினர்)
சந்திரசேகர ராவ் - தெலங்கானா முதலமைச்சர்
சுப்பிரமணிய சுவாமி
ஸ்ரீகாந்த் (கிரிக்கெட் வீரர்)
பங்கஜ் மோடி (நரேந்திர மோடியின் சகோதரர்)
துர்கா ஸ்டாலின்
ரவிசங்கர் பிரசாத் (மத்திய அமைச்சர்)
தமிழிசை சௌந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்)
இருபது பேர் மட்டுமல்ல. மிக முக்கிய பிரபலங்கள் தவிர, டைரக்டர் அட்லி, ஆர்ஜே பாலாஜி, பிரேமலதா விஜயகாந்த் என இன்னும் ஏராளமான பிரபலங்கள் அத்திவரதரை தரிசனத்தை மேற்கொண்டு ஆசிபெற்றிருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications