Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
ராசிப்படி, இன்னைக்கு இத வாங்குனா செல்வம் அதிகரிக்குமாம்.. உங்க ராசிக்கு என்ன வாங்கணும் தெரியுமா?
தனத்திரயோதசி நாளன்று மாலை நேரத்தில் வீட்டில் யமதீபம் ஏற்றி, அதை வீட்டின் உயரமான இடத்தில் வைப்பார்கள். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி, யமனும் மகிழ்ந்து அருளுவானாம். அதுவும் ராசிக்கேற்ற பொருட்களை வாங்குவது மிகவும் நல்லது.
தென்னிந்தியாவில் தான் தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம். ஆனால் வட இந்தியாவில் அது 5 நாள் கொண்டாட்டம். அதில் முதல் நாள் கொண்டாடப்படுவது தான் தந்தேராஸ் என்னும் தனத்திரயோதசி. இந்நாளில் அட்சய திருதியைப் போன்று தங்கம், வெள்ளி வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பொதுவாக செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பெற குபேரர், லட்சுமி தேவி, தன்வந்திரி மற்றும் எமதர்மர் ஆகியோரை வணங்க வேண்டும்.

அதுவும் தனத்திரயோதசி நாளன்று மாலை நேரத்தில் வீட்டில் யமதீபம் ஏற்றி, அதை வீட்டின் உயரமான இடத்தில் வைப்பார்கள். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி, யமனும் மகிழ்ந்து அருளுவானாம். இத தவிர இந்நாளில் ஒருவது தங்களது ராசிக்கு ஏற்ப பொருட்களை வாங்கினால், லட்சுமி தேவியின் சிறப்பான ஆசீர்வாதத்தைப் பெறலாம். இப்போது ராசிப்படி தனத்திரயோதசி நாளில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை வாங்கலாம் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வெள்ளிக் கிண்ணம், எலக்ட்ரானிக் பொருட்கள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றை தனத்திரயோதசி நாளில் வாங்குவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தீபாவளிக்கு முன் கொண்டாடப்படும் தனத்திரயோதசி நாளன்று ஆடைகள் மற்றும் கலசம் வாங்குவது அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்கள், சில்வர் பாத்திரங்கள் போன்றவற்றை தந்தேராஸ் என்று அழைக்கப்படும் தனத்திரயோதசி நாளில் வாங்குவது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் வெள்ளி ஆபரணங்கள் அல்லது வெள்ளிப் பாத்திரங்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை தனத்திரயோதசி நாளில் வாங்கினால் நல்லது நடக்கும்.

சிம்மம்
தனத்திரயோதசி நாளன்று சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் காப்பர் பாத்திரங்கள் அல்லது காப்பர் கலசம், சிவப்பு நிற ஆடைகளை வாங்குவது அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்கள் அல்லது வெள்ளி ஆபரணங்கள் அல்லது கலசத்தை வாங்குவது மிகவும் நல்லது. இதனால் செல்வ செழிப்போடு சந்தோஷமாக வாழலாம்.

துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் தனத்திரயோதசி நாளன்று ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் அல்லது வீட்டை அலங்கரிக்கும் பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் எலக்ட்ரானிக் பொருட்கள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை வாங்குவது, இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து, சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்கள், காப்பர் பாத்திரங்கள் மற்றும் மண் பாத்திரங்களை தனத்திரயோதசி நாளில் வாங்குவது மிகவும் நல்லது.

மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடைகள், வாகனங்கள், வெள்ளி பாத்திரங்கள் அல்லது வெள்ளி ஆபரணங்களை வாங்குவது, அவர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளன்று அழகு சாதனப் பொருட்கள், தங்கம் மற்றும் காப்பர் பாத்திரங்களை வாங்குவது மிகவும் நல்லது. இது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்க நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை தனத்திரயோதசி நாளில் வாங்கினால், அது அவர்களின் அதிர்ஷ்டம் இன்னும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications