Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மோசமான மனநிலையால் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!
ஒருவருக்கு தற்கொலை எண்ணமானது மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
உலகளவில் மரணத்திற்கான முக்கிய காரணிகளுள் ஒன்று தற்கொலை மற்றும் உலகளாவில தற்கொலை வழக்குகளில் இந்தியாவின் பங்கு ஆபத்தான முறையில் அதிகரித்து வருகிறது. தி லான்செட் பப்ளிக் ஹீல்தோப்செர்வ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் உலகளாவிய பெண் தற்கொலை விகிதத்தில் இந்தியா 6 ஆவது இடத்தில் உள்ளது. மேலும் உலகெங்கிலும் உள்ள ஆண் தற்கொலைகளில் நான்கில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒருவருக்கு தற்கொலை எண்ணமானது மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து உருவாகின்றன. சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு மனநிலைக் கோளாறு ஆகும். சோக உணர்வுகள் மற்றும் எதிலும் ஆர்வமில்லாமை போன்ற அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் போது, அவற்றை மனச்சோர்வு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த மனநல சவாலின் மற்ற சில பண்புகளில் எரிச்சலுணர்வு, அமைதியின்மை, பாலியல் ஆசையின்மை, சோர்வு, தசைவலி, தனிமையாக இருப்பது போன்ற உணர்வு, சூழலில் இருந்து விலகுதல், பதற்றம், பசியின்மை போன்றவை அடங்கும். பல தசாப்தங்களாக இவ்வுலகம் பல தற்கொலைகளைக் கண்டிருக்கிறது மற்றும் பாலிவுட் ஒரு விதிவிலக்கல்ல. குணால் சிங் முதல் சுஷாந்த் சிங் ராஜ்புத் வரை பல பாலிவுட் பிரபலங்கள் மோசமான மனநிலையால் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

குணால் சிங்
இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் நடித்தவர் தான் குணால் சிங். இவர் தமிழில் காதலர் தினம் என்ற திரைப்படத்தில் சோனாலி பிந்த்ரே ஜோடியாக நடித்தவர். இவர் 2008 ஆம் ஆண்டு ஃபேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவியுடனான உறவில் உள்ள பிரச்சனையால், குழந்தைகளைப் பார்க்க அவர் அனுமதிக்கப்படவில்லை என்பதே அவரது தற்கொலைக்கு காரணம் என்று வதந்திகள் பரவின.

ஜியா கான்
நடிகை ஜியா கான் தனது முதல் திரைப்படமான நிஷாப்ட் மூலம் பார்வையாளர்களை திகைக்க வைத்தவர். இவர் 2013 ஆம் ஆண்டு தனது ஜுஹு குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இந்த நடிகை தனது உறவில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட மனச்சோர்வினால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

பிரத்யுஷா பானர்ஜி
பிரபல தொலைக்காட்சி தொடரில் 'ஆனந்தி' என்ற வேடத்தில் நடித்த பிரத்யுஷா, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தனது மும்பை குடியிருப்பில் இறந்து கிடந்தார். இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக, மனரீதியாக மிகவும் கடினமான காலங்களை கடந்து கொண்டிருந்தால், இந்த முடிவை எடுத்துள்ளார்.

குஷால் பஞ்சாபி
"கால்" மற்றும் "லக்ஷ்யா" போன்ற திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றிய நடிகர் தான் குஷால் பஞ்சாபி. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாந்த்ரா குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மேலும் இவர் தற்கொலை செய்வதற்கு முன், தனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்ற குறிப்பையும் விட்டுச் சென்றார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
சமீபத்தில் பாலிவுட்டில் தற்கொண்ட செய்து வழக்கு தான் இது. மும்பையில் உள்ள பாந்த்ரா இல்லத்தில் சுஷாந்த் இறந்து கிடந்தார். ஆதாரங்களின் படி, இவர் கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையில் இருந்தது தெரிய வந்தது.



Click it and Unblock the Notifications