Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
ஆயுத பூஜை 2023: ஆயுத பூஜையின் முக்கியத்துவமும், வழிபாட்டு முறையும்...
Ayudha Puja 2023: துர்கா தேவியை போற்றி வழிபடும் ஒன்பது நாள் பண்டிகையான நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் 9வது நாளான ஆயுத பூஜையானது தென்னிந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நவராத்திரியின் போது நவமி திதியில் ஆயுத பூஜையானது கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை நன்னாளில், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தும் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் மற்றும் கருவிகளை பூஜித்து வழிபடுகிறார்கள். இந்த புனிதமான தருணத்தில், கைவினைஞர்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெறும் விஸ்வகர்மா பூஜையைப் போலவே தங்கள் கருவிகளை வணங்குகிறார்கள்.

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஆயுத பூஜை வாகனங்களுக்கு பூஜை செய்யக்கூடிய தினமாகவும் மாறிவிட்டது. மக்கள் தங்களது கார், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களை சுத்தம் செய்து அலங்கரித்து வணங்குகிறார்கள். இந்த நாளில், மக்கள் அனைத்து வகையான வாகனங்களையும், மஞ்சள், மாலைகள், மா இலைகள் மற்றும் வாழைக்கன்றுகள் முதலியவற்றால் அலங்கரித்து பூஜிக்கின்றனர்.

நாள் மற்றும் நேரம்
இந்த ஆண்டு ஆயுத பூஜையானது அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. ஆயுத பூஜைக்கான நேரம் சுப முகூர்த்தம் மதியம் 02:47 முதல் மதியம் 03:31 வரை ஆகும்.

ஆயுத பூஜை வரலாறும், முக்கியத்துவமும்
இந்து புராணங்களின் படி, ஒரு பெண்ணால் மட்டுமே தோற்கடிக்கப்பட முடியும் என்ற நிபந்தனையின் பேரில், அசுர மன்னன் மகிஷாசுரனின் அழியா வரத்தை பிரம்மா வழங்கினார். அதாவது, பூமியில் உள்ள எந்த மனிதனும் அல்லது மிருகமும் அவனைக் கொல்ல முடியாது. உச்ச சக்தியால் உற்சாகமடைந்த மகிஷாசுரன் திரிலோக்கை (பூமி, சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய மூன்று உலகங்கள்) தாக்கினான். தேவர்கள் மகிஷாசுரனை எதிர்த்துப் போரைத் தொடங்க முடிவு செய்த போது, பிரம்மாவின் வரத்தை மீறி அவனைத் தோற்கடிக்க முடியாமல் திரும்பினர். பின்னர், பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து, சிங்கத்தின் மீது அமர்ந்த பெண் ரூபமான துர்கா தேவியை படைத்தனர். மகிஷாசுரனுடன் 9 நாட்கள் நடைபெற்ற நீண்ட போருக்குப் பிறகு, மஹாளய நாளில் துர்கா தேவி தனது திரிசூலத்தால் மகிஷனைக் கொன்றாள். மகிஷாசுரனை வதம் செய்த பிறகு, உக்கிரமான தேவி நவமி அன்று ஆயுதங்களைக் கீழே போட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆயுதபூஜை திருநாளானது மகிஷாசுரனை வதம் செய்த ஆயுதங்களைப் போற்றி கொண்டாடும் ஒரு நாளாக கருதப்படுகிறது.

ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள்
எலுமிச்சை, வாழைப்பழம், பழங்கள், கரும்பு துண்டு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, புடலங்காய், வெள்ளை பூசணி, பொடித்த வெல்லம், தேங்காய், வாழை இலைகள், பத்தி, கற்பூரம்.

ஆயுதபூஜை வழிபாட்டு முறை
கருவிகள், ஆயுதங்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு இடையூறு ஏற்படாத பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு மேசையில் ஆயுதங்களை அடுக்கி, அவற்றை மலர்களால் அலங்கரிக்கவும். மஞ்சள் மற்றும் சந்தன கலவையால் ஆயுதங்களை, பொருட்கள் அனைத்திற்கும் திலகமிட்டு, குங்குமம் வைக்கவும். பின்னர், ஊதுபத்தி, கற்பூரம் காட்டி வழிபட்டு, வணங்கவும். ஆயுத பூஜை நாளில், மக்கள் தங்கள் கடை, வாகனங்கள், வீடுகள் ஆகியவை முன்பு வெள்ளைப்பூசணிக்காயை சுற்றி உடைத்து கண் திருஷ்டியை கழிப்பது வழக்கம்.



Click it and Unblock the Notifications