For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ராசிப்படி எந்த வயசுல கல்யாணம் பண்ணுனா உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடிவரும் தெரியுமா?

|

திருமணம் என்பது அனைவரின் வாழ்கையிலும் முக்கியமான ஒன்றாகும். தவறான நபருடன் ஏற்படும் திருமண உறவானது தற்கொலைக்கு சமமானது. திருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இருவருக்குமே எந்த ஆண்டில் தனக்கு திருமணம் நடக்கும்?, திருமணம் செய்ய சரியான வயது என்ன? தங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார்கள், எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? என்று பல கேள்விகள் அவர்கள் மனதில் இருக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தில் உங்களின் திருமணம் குறித்த இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. குறிப்பாக எந்த வயதில் திருமணம் செய்து கொள்வது உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றும் என்பதையும் மற்றும் உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதையும் சரியாக கணித்து சொல்லும். இந்த பதிவில் உங்கள் ராசிப்படி எந்த வயதில் திருமணம் செய்வது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் விடாமுயற்சி கொண்டவர்கள் அதனால் வாழ்க்கையில் அனைத்தையும் விரைவாக செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள். இதனால் அவர்கள் திருமணத்தையும் விரைவில் செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள். ஆனால் இவர்கள் 25 அல்லது 26 வயதில் திருமணம் செய்து கொள்வது அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்

ரிஷபம்

இவர்களுக்கு ரொமான்ஸில் அதிக ஆர்வம் இருக்கும், ஆனால் அதற்காக இவர்கள் அவசரப்படமாட்டார்கள். இவர்கள் சரியான ஒருவரை தேர்ந்தெடுக்க அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். 20 வயதில் திருமணம் செய்து கொள்வது இவர்களுக்கு இவர்கள் விரும்பும் காதல் வாழ்க்கையை கொடுக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் காதலில் இருப்பதை விரும்புவார்கள் ஆனால் காதலில் அவர்களின் தேவை என்னவென்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. நன்கு முதிர்ச்சியடைந்த பிறகு திருமணம் செய்வதே இவர்களுக்கு நல்லது. 28 அல்லது 30 வயதில் திருமணம் செய்வது இவர்களின் காதல் வாழ்க்கைக்கு நல்லது.

அக்னி நட்சத்திரத்தில் உங்கள் வீட்டை செலவே இல்லாமல் எப்படி கூலாக வைத்திருக்கலாம் தெரியுமா?

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் குடும்பத்தை சார்ந்திருப்பவர்கள், நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உறுதியான உறவை நீங்கள் தேடுகிறீர்கள். நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சிறந்த வயது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்து தொடங்குகிறது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் துணை யார் என்று தேர்ந்தேடுப்பதில் மிகவும் தேடல் உடையவர். இவர்கள் அதைப் பற்றி உறுதியாக இருக்கும்போது மட்டுமே இவர்கள் உறுதிப்பாட்டைச் செய்கிறார்கள். இவர்களை பொறுத்தவரை இவர்கள் 25 வயதில் திருமண உறவில் இணைவது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அனைத்திலும் முழுமையாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். உறவாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி இரண்டிலும் எப்படி சமநிலையாக இருக்க வேண்டும் என்று இவர்கள் அறிவார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டமான திருமண வயது 25-27 ஆகும்.

மே மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

துலாம்

துலாம்

இவர்கள் பொறுமையாகவும், எளிமையாகவும், விஷயங்களைக் கையாளுவதில் சிறந்தவர்களாக உள்ளனர். திருமணத்தைப் பொறுத்தவரை இவர்கள் திருமணம் செய்து கொள்ள சரியான வயது இருபதுகளின் தொடக்கமாகும் இல்லையெனில் 30 வயதில் திருமணம் செய்வது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

விருச்சிகம்

இவர்கள் மிகவும் பொஸசிவ் எண்ணம் கொண்டவர்கள் மற்றும் இவர்கள்கள் பாதுகாப்பின்மை மற்றும் நம்பிக்கை பிரச்சினைகள் காரணமாக, சில நேரங்களில் நீங்கள் தவறான முடிவுகளை எடுப்பார்கள். இவர்கள் 24-26 வயதில் திருமணம் செய்து கொள்வது அழகான காதல் வாழ்க்கையை வழங்கும்.

தனுசு

தனுசு

நீங்கள் சுதந்திரத்திற்காக ஏங்குகிறீர்கள், அர்ப்பணிப்பு சிக்கல்களைக் கொண்டிருக்கிறீர்கள், இதன் காரணமாக எந்த நேரத்திலும் எந்த உறவிலும் பொறுப்புகளிலும் நீங்கள் பிணைக்கப்பட விரும்பவில்லை. 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்வது இவர்களுக்கு அற்புதமான காதல் வாழ்க்கையை வழங்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் ஆபாசப்படங்களுக்கு அடிமையாக இருக்கிறார் என்று அர்த்தம்... உஷாரா இருங்க

மகரம்

மகரம்

வேலையையும் வீட்டையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது இவர்களுக்குத் தெரியும், எனவே உறுதிப்பாட்டின் யோசனை உங்களைப் பயமுறுத்தாது. எந்த வயதிலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் அது இவர்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தது. இவர்கள் 20-25 க்கு இடையில் திருமணம் செய்து கொள்ளலாம்.

கும்பம்

கும்பம்

இவர்கள் தங்களுக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்தேடுப்பதில் இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். இவர்கள் தாமதமாக திருமணம் செய்வதுதான் இவர்களுக்கு நல்லது. 30 வயதிற்கு மேல் இவர்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் திருமணம் செய்துகொள்ளலாம்.

கொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..

மீனம்

மீனம்

தங்கள் வாழ்க்கையில் அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அடைந்த பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான அதிர்ஷ்டமான வயது 26 ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Auspicious Age To Get Married For All Zodiac Signs

Read to know what is the auspicious age to get married according to each zodiac sign.