For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா? அதைக் கட்டுப்படுத்த தினமும் இத செய்யுங்க போதும்...

ஜோதிடத்தின் படி, கோபம் என்பது நடத்தை மற்றும் மனதுடன் தொடர்புடையது மட்டுமல்ல. ராகு மற்றும் செவ்வாய் தோஷத்தாலும் ஒருவர் அதிகம் கோபம் கொள்வார். ஜோதிடத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க சில பரிகாரங்கள் உள்ளன.

|

தற்போதைய பரபரப்பான உலகில் அதிகரித்து வரும் பொறுப்புக்களால் பலரும் எளிதில் கோபமும் எரிச்சலும் அடைகிறார்கள். கோபம் கொள்வது ஒரு மனிதனின் குணங்களுள் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவில் கோபம் வரும். இப்படிப்பட்ட கோபம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அதிகம் கோபம் கொள்பவர்கள் சிறு தவறான பேச்சின் மூலமாகவும் கோபம் கொள்வார்கள். இத்தகையவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக அவர்களை சுற்றியிருப்பவர்கள் கருதுவார்கள். மேலும் இவர்களுடன் பேசவும் அச்சம் கொள்வார்கள்.

Astrology Remedies To Control Anger In Tamil

நீங்களும் இப்படி அதிகம் கோபம் கொள்பவரா? உங்களிடம் பேச மற்றவர்கள் அச்சம் கொள்கிறார்களா? அனைவரும் உங்களை ஒதுக்குவது போன்று உணர்கிறீர்களா? அப்படியானால் முதலில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். ஜோதிடத்தின் படி, கோபம் என்பது நடத்தை மற்றும் மனதுடன் தொடர்புடையது மட்டுமல்ல. ராகு மற்றும் செவ்வாய் தோஷத்தாலும் ஒருவர் அதிகம் கோபம் கொள்வார். ஜோதிடத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க சில பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்கள் செய்வதனால் கிரக தோஷங்களைக் குறைத்து கோபத்தைக் குறைக்கலாம். இப்போது கோபத்தைக் குறைக்க உதவும் பரிகாரங்கள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்தனம்

சந்தனம்

பொதுவாக சந்தனம் குளிர்ச்சியான பண்பைக் கொண்டது. ஜோதிட சாஸ்திப்படி, அதிகம் கோபப்படுபவர்கள் சந்தனத்தைப் பயன்படுத்துவது நல்லது. கோபம் கொள்பவர்கள் தினமும் சந்தனத்தை நெற்றியில் வைப்பதால், மனம் அமைதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ராகு தோஷத்தில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

வெள்ளி

வெள்ளி

ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவர் பேசும் போது உங்களுக்கு கோபம் வந்தால், அந்த கோபத்தைக் கட்டுப்படுத்த கையில் வெள்ளி மோதிரத்தை அல்லது கழுத்தில் வெள்ளி செயினை அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில் வெள்ளி மனதை அமைதிப்படுத்தும். அதோடு, ஒருவருக்கு சந்திர தோஷம் இருந்தால், அவருக்கு கோபம் அதிகம் வரும். எனவே சந்திர தோஷத்தின் தாக்கத்தைக் குறைக்க வெள்ளி ஆபரணங்களை அணிவது நல்லது.

சூரிய பகவானை வணங்கவும்

சூரிய பகவானை வணங்கவும்

கோபம் அதிகம் கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த, தினமும் காலையில் குளித்த பின்னர் சூரிய பகவானை வணங்க வேண்டும். அதுவும் அதிகாலையில் குளித்ததும் மனதில் சூரிய பகவானை நினைத்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள்.

சிவப்பு நிறத்தை தவிர்க்கவும்

சிவப்பு நிறத்தை தவிர்க்கவும்

உங்களுக்கு சிவப்பு நிறம் பிடித்த நிறமாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கோபம் அதிகம் வருமாயின் சிவப்பு நிற ஆடைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் சிவப்பு நிறம் உமிழும் இயற்கையின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆகவே உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த நினைத்தால், வெள்ளை அல்லது க்ரீம் நிற ஆடைகளை அதிகம் அணியுங்கள்.

அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யவும்

அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யவும்

அனுமன் தைரியசாலி மட்டுமின்றி, பொறுமைசாலியும் கூட. அதிகம் கோபம் கொள்பவர்கள் அனுமனை நினைத்து அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். இதனால் செவ்வாய் தோஷம் குறைவதோடு, கோபமும் குறையும். இது தவிர, வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் கிழக்கு திசையில் தீபத்தை ஏற்றுங்கள். இச்செயலால் ஒருவரின் கோபம் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Astrology Remedies To Control Anger In Tamil

Here are some astrological remedies to control anger in tamil. Read on to know more...
Story first published: Wednesday, June 22, 2022, 14:37 [IST]
Desktop Bottom Promotion