Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
பணக்காரராக ஆசைப்படுறீங்களா? அட்சய திரிதியை நாளில் இந்த பொருட்களை தானமாக கொடுங்க...
கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த கால கட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். உணவு தானம் செய்து பசியாற்றுவதன் மூலம் இறைவனின் ஆசியை பெறலாம்.
நமக்கு நிறைய பணம் வேண்டும் இறைவனின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீங்களா? நீங்க செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் இல்லாத ஏழைகளுக்கு தானம் கொடுங்க. அந்த ஏழைகளின் மகிழ்ச்சியில் இறைவனை காணலாம். கொரோனா வைரஸ் நோய் உலகத்தையே முடக்கி போட்டுள்ளது. உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. பணக்காரர்கள் கூட பலர் ஏழைகளாக மாறி விட்டனர். ஏழைகளின் நிலை கேட்கவே வேண்டாம் ஒரு நேரத்திற்கு கூட உணவு கிடைக்காமல் பசியோடு வீதிகளில் சோர்வோடு இருக்கிறார்கள் ஏழைகளின் பசியை போக்குவதாலும், இல்லாதவர்களுக்கு தானம் கொடுப்பதாலும் இறைவனின் ஆசியை பெறலாம்.

அட்சய திருதியை சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் தங்கம், வெள்ளி, வைரம் என்று வாங்கி குவிப்பதை விட உணவு தானம் கொடுப்பதன் மூலம் செல்வ வளம் தேடி வரும் என்பது ஐதீகம். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் கூட உணவு இன்றி தவிக்கின்றன, இந்த கால கட்டத்தில் பசு, நாய்களுக்கும் கூட உணவு தானமாக கொடுக்கலாம்.
அட்சய திருதியை நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் எந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம். இந்த பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலம் பணம் வருவதில் உள்ள தடைகள் நீங்கும் செல்வ வளம் பெருகும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும். ஏழைகளுக்கு உணவு சமைக்க பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இந்த அட்சய திருதியை நாளில் சாம்பார் சாதம் தானம் பண்ணுங்க. கடலை பருப்பு, மஞ்சள், கடலை மாவு தானமாக கொடுக்கலாம். குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு போகும் போது வாசலில் அமர்ந்திருக்கும் ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். சிவப்பு நிற பொருட்களையும் துவரம் பருப்பையும் தானமாக கொடுங்க. கோதுமையை தானமாக கொடுங்க.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தயிர்சாதம் செய்வதன் மூலம் செல்வம் பெருகும். கோவிலில் அபிஷேகத்திற்கு தேன் வாங்கிக் கொடுக்கலாம். ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் உங்களுக்கு செல்வ வளம் பெரும். பணம் வருவதில் உள்ள தடைகள் விலகும். வெள்ளை நிற பசுவிற்கு சாப்பிட வாழைப்பழம் வாங்கி கொடுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது. பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து துளசி மாலை போட்டு வணங்க வேண்டும். இல்லாதவர்களுக்கு நெய், பழங்கள் தானமாக வாங்கிக் கொடுக்க எல்லாவித செல்வமும் தேடி வரும். பச்சை நிற பொருட்களை தானமாக கொடுங்க. பச்சை நிற ஆடைகள், பாசிப்பருப்பு தானமாக கொடுக்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும். தயிர்சாதம் சமைத்து தானமாக கொடுக்கலாம். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும் செல்வம் உங்க வீடு தேடி வரும். வெள்ளை நிற ஆடைகள், தயிர், சர்க்கரை, நெய் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்றைய கால கட்டத்தில் உணவு இல்லாதவர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம், சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். செல்வம் மட்டுமல்ல புண்ணியமும் சேர வேண்டுமா கோதுமை தானமாக கொடுங்க. சிவப்பு நிற ஆடைகளை ஏழைகளுக்கு தானமாக கொடுங்க. கோவிலுக்கு சிவப்பு நிற பூக்களும் கொடுக்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். பச்சை நிற பொருட்களை தானமாக கொடுங்க.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல் தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பதற்கு பணம் தானமாக கொடுங்க உங்கள் வாரிசுகளுக்கு நல்லது. விநாயகரை வழிபட்டு தயிர்சாதம் தானம் கொடுங்க. சந்தன நிற ஆடைகளை தானமாக கொடுங்க. சர்க்கரை தானமாக தரலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம் கடன்கள் தீரும். இந்த வெயிலுக்கு குளுமையாக நீர் மோர் தானமாக கொடுக்கலாம். சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாம்பார் சாதம் தானம் செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்தால் நல்லது. வீட்டிலேயே குருபகவானுக்கு கொண்டை கடலை படைத்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். நல்லெண்ணெய், பயறு, பருப்புகள் தானமாக வாங்கிக் கொடுக்க வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுக்கலாம். செருப்பு, குடை கறுப்பு நிற வஸ்திரங்களை வாங்கி கொடுக்கலாம். குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும்.

மீனம்
மீனம் ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் ஆதரவற்ற ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். மஞ்சள், சர்க்கரை, தேன் தானமாக கொடுக்கலாம். பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications