Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
ஏப்ரலில் இருந்து இந்த 6 ராசிக்காரங்களுக்கு சனி பகவானின் சிறப்பான அருள் கிடைக்கப் போகுது...
சனி பகவான் ராசியை மாற்றுவதற்கு முன் 2022 பிப்ரவரி மாதம் அஸ்தமனமானார். பின் 2022 மார்ச் 26 ஆம் தேதி சனி பகவான் உதயமானார். சனி உதயமாகி கும்ப ராசிக்கு செல்வதால், 6 ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சிறப்பான அருள் கிடைக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அது மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கின்றன. 2022 ஆம் ஆண்டில் பல பெரிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இதில் சனி பகவான் கர்மத்திற்கு ஏற்ற பலனை அளிக்கக்கூடியவராக கருதப்படுகிறார். தற்போது சனி பகவான் மகர ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார்.

மகரம் மற்றும் கும்ப ராசி சனி பகவானின் சொந்த ராசிகளாகும். இதில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு செல்லப் போகிறார். மேலும் சனி பகவான் ராசியை மாற்றுவதற்கு முன் 2022 பிப்ரவரி மாதம் அஸ்தமனமானார். பின் 2022 மார்ச் 26 ஆம் தேதி சனி பகவான் உதயமானார். சனி பகவான் உதயமாகி கும்ப ராசிக்கு செல்வதால், 6 ராசிக்காரர்கள் சனி பகவானின் சிறப்பான அருள் கிடைக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
சனி பகவான் மேஷ ராசியின் கர்மா, தொழில், வேலை மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் வீடான 10 ஆவது வீட்டில் உதயமாகிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்தவர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகிறது. இதன் விளைவாக ராஜ வாழ்க்கையை இந்த ராசிக்காரர்கள் வாழ்வார்கள். அரசியலில் இருப்பவர்கள் இப்பெயர்ச்சியால் பெரிய பதவியைப் பெறுவார்கள்.

ரிஷபம்
சனி பகவான் 9 ஆவது வீட்டில் உதயமாகியுள்ளதால், ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜ யோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அதே வேளையில் இக்காலத்தில் எந்த வேலை செய்தாலும், அதில் வெற்றி பெறுவார்கள்.

துலாம்
சனி பகவான் துலாம் ராசியின் 4 ஆவது வீடான இன்பம், வாகனம், தாய் ஆகியவற்றின் வீட்டின் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. ஆகவே இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும் மற்றும் அது பாராட்டப்படும்.

கடகம்
கடக ராசியின் திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் வீடான 7 ஆவது வீட்டில் சனி உதயமாகியுள்ளார். இதனால் இந்த காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதே வேளையில் கூட்டுப் பணிகளில் வெற்றி பெறுவார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மகர ராசியில் சனி உதயமாகும் பலன் கிடைக்கும். சனி பகவான் இக்காலத்தில் கும்ப ராசிக்காரர்களின் செல்வத்தைப் பெருக்குவார். மேலும் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டப்படும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். அதே நேரத்தில், இக்காலத்தில் தேவையற்ற செலவுகள் கட்டுப்படுத்தப்படும்.



Click it and Unblock the Notifications