இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் இளிச்சவாயர்களாகவே இருப்பார்கள்

ஒவ்வொருவரும் பிறக்கும் போதே தங்களுக்கென சில தனிப்பட்ட குணங்களுடன் தான் பிறக்கிறார்கள். ஆனால் ஒருவர் பிறந்த நேரம் மற்றும் ராசியை பொறுத்து அவர்களுக்கு சில பொதுவான குணங்களையும் இருக்கும்.

ஒவ்வொருவரும் பிறக்கும் போதே தங்களுக்கென சில தனிப்பட்ட குணங்களுடன் தான் பிறக்கிறார்கள். ஆனால் ஒருவர் பிறந்த நேரம் மற்றும் ராசியை பொறுத்து அவர்களுக்கு சில பொதுவான குணங்களையும் இருக்கும். அந்த குணங்கள் நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும். ஆனால் நல்ல குணமா அல்லது கெட்ட குணமா என்று கணிக்க இயலாத ஒரு பொதுவான குணமும் உள்ளது. அதுதான் இல்லை என்று சொல்லும் குணம்.

zodiac signs who dont know how to say no according astrology

இந்த குணம் இப்படி விவரிக்கப்பட காரணம் இது சில சமயங்களில் நமக்கு நல்லதை ஏற்படுத்தினாலும் பல சமயங்களில் கெட்டதையும், இளிச்சவாயன் என்ற பெயரையுமே பெற்றுத்தரும். ஆனால் அடிப்படையில் இது பலரிடம் இல்லாத ஒரு சிறந்த குணமாகும். இந்த குணம் உங்களுக்கு பல உறவுகளையும், நண்பர்களையும் பெற்றுத்தரும். நீங்கள் கவனமாக இருக்க வேண்டியதெல்லாம் யாரிடம் இல்லை என்று சொல்கிறோம் என்பதில்தான். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே இந்த குணம் இருக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அனைவரும் விரும்பும் ஒருவராக இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும், அனைத்திற்கும் இல்லை என்றே சொல்லமாட்டார்கள், சொல்லவும் விரும்ப மாட்டார்கள். இவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு நேர்மறை ஆற்றல் இருக்கும்.இவர்கள் எப்பொழுது தங்களை தாங்களே கஷ்டப்படுத்தி கொள்வார்கள் என்றால் மற்றவர்களுக்கு இல்லை என்று கூற யோசிக்கும் போதுதான். அவர்கள் கேட்பதற்கு பதில் இல்லைதான் என்றாலும் இவர்களால் அதை கூற இயலாது. இல்லை என்று கூறினாலும் அது மற்றவர்களை சிரமப்படுத்தாமல் இருக்க பெரிதும் முயலுவார்கள்.

மகரம்

மகரம்

மகர ராசியில் பிறந்த ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களிடம் ஒப்படைக்கும் வேலைக்கு எப்போதும் இல்லை என்று கூறவே மாட்டார்கள். அவர்களின் ஒரே நம்பிக்கை அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதுதான். மற்றவர்களுக்கு மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் முட்டாள்களாகவே தெரிவார்கள், ஆனால் அவர்களுக்கு வேலை தேவைப்படும் போது மட்டும் நல்லவர்களாக தெரிவார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இவர்களால் இல்லை என்று கூற இயலாது.

கடகம்

கடகம்

கடக ராசிக்கார்கள் இல்லை என்று கூறமாட்டார்கள் காரணம் அவர்களுக்கு இல்லை என்ற வார்த்தையில் நம்பிக்கையில்லை. அவர்கள் தங்களால் நேர்மையாக என்ன செய்ய முடியும் என்பதை நன்றாக உணர்ந்தவர்கள். இவர்கள் பேசுவதிலோ,குறை சொல்வதிலோ கவனம் செலுத்துவதை விட செய்து காட்டுவதில் கவனம் செலுத்துபவர்கள். கடக ராசிக்காரர்களிடம் ஏதாவது கேள்வியோ, உதவியோ கேட்டால் எளிதில் சரி என்று சொல்லிவிடுவார்கள். அசாதரணமான சூழ்நிலைகளில் மட்டுமே இவர்களிடம் இருந்து இல்லை என்ற வார்த்தை வரும்.

மீனம்

மீனம்

நட்பை விரும்பும் இந்த ராசிக்காரர்கள் 24 மணி நேரமும் மற்றவர்களுக்கு உதவ காத்திருப்பார்கள். இதையேத்தான் அவர்கள் வேலையாகவே கொண்டிருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய இவர்கள் கடினமாக உழைப்பார்கள், நண்பர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது இவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிலசமயம் நண்பர்கள் உதவி கேட்பதற்கு முன்பாகவே அவர்களுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்திவிடுவார்கள். உனக்காக என்னல் இதை செய்ய முடியாது என்ரு கோருவது இவர்கள் இரத்ததிலேயே இருக்காது.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அவர்கள் போட்டு வைத்திருக்கும் கோட்டை விட்டு வெளியே வந்து விட்டால் மற்றவர்கள் கேட்கும் எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் செய்து முடிப்பார்கள், அது எவ்வளவு ஆபத்தான உதவியாக இருந்தாலும் சரி இவர்கள் தயங்க மாட்டார்கள். அவர்கள் மனதில் 100 சதவீதம் உங்களை பிடிக்காமல் இருந்தாலும் நீங்கள் கேட்ட உதவிக்காக 100 சதவீதம் முயற்சி செய்வார்கள். இவர்கள் அடிக்கடி பொய் பேசுவார்கள், மற்றவர்களின் கவனம் தங்கள் மீது விழுவதை தவிர்ப்பார்கள். ஏனெனில் இவர்கள் செய்யும் உதவி மற்றவர்களுக்கு தெரிவதை இவர்கள் விரும்பமாட்டார்கள்.

சிம்மம்

சிம்மம்

மற்ற ராசிக்காரர்களை காட்டிலும் சிம்ம ராசிக்காரர்களிடம் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு உதவி கேட்க செல்லலாம், ஏனெனில் அவர்கள் ஒருபோதும் இல்லை என்ற சொல்லை கூறமாட்டார்கள். மற்றவர்கள் தன்னிடம் உதவி கேட்பதை பெருமையாக நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் அந்த பெருமைக்காக எந்த உதவியும் செய்ய தயங்க மாட்டார்கள். நீங்கள் அவர்களை மதிக்கும் வரை அவர்களின் உதவி உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

MOST READ:இந்த 3 ராசிக்காரங்களுக்கும் எங்கயோ மச்சம் இருக்குப்பா... இல்லாட்டி இதெல்லாம் நடக்குமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, January 18, 2019, 10:23 [IST]
Desktop Bottom Promotion