Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
அட! இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு எப்பவுமே பிரச்சினைதாம்பா... நீங்களும் அதுதானே!
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
அடுத்தவர்களை விமர்சனம் செய்யும் பழக்கம் இருந்தால் அதைக் குறைத்துக் கொள்வது உங்களுக்கு நல்லது. வெளியூரக்குத் தொழில் சம்பந்தமாக செல்லும் வாய்ப்புகள் உருவாகும். பயணங்களின் மூலம் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். முக்கியப் பணிகளில் உள்ளவர்கள் உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. மனதுக்குள் தொழில் ரீதியாக புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். தேவையில்லாத விவாதங்களைத் தவிர்த்துவிடுவது கூடுதல் பலன்களைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழில் புரிகின்றவரும் கடல்வழிப் பயண்ஙகள் வழியாகத் தொழில் செய்பவர்களுக்கும் பெரும் தன வரவு ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி புரிகின்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கி நிற்கும். அது மற்றவர்களிடத்தில் பெரும் புகழை உங்களுக்கு ஏற்படுத்தும். நல்ல செய்திகள் வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
எதிர்காலம் பற்றிய சிந்தனைகளும் திட்டங்களும் பற்றி சிந்திப்பீர்கள். அதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள். மிகவும் புத்துணர்ச்சியாகக் காணப்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்திருந்த கடனுதவிகள் உங்க்ள கைக்கு வந்து சேருவதற்கு கொஞ்சம் காலதாமதமாகும். முக்கியப் பணிகளில் உள்ளவர்களுக்கு இருந்த சின்ன சின்ன தடைகள் அகல ஆரம்பிக்கும். உங்களுடைய எதிர்பாலினத்தவரிடம் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

கடகம்
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் உங்களுக்கு அதிகரிக்கும். அஞ்ஞானங்கள் சம்பந்தப்பட்ட சிந்தனைகள் உங்களுக்கு அவ்வப்போது வந்து போகும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு சாதகமான அணுக்கங்கள் ஏற்படும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
நீங்கள் எதிர்பார்த்த தனவரவு வர வேண்டிய இடங்களில் இருந்து கைக்கு வந்துசேர கொஞ்சம் கால தாமதங்கள் உண்டாகும். அடுத்தவருக்கு உதவுகின்ற பொழுது, கொஞ்சம் நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது. உங்களுடைய நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வைக் காண முயற்சி செய்வீர்கள். கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில்நீல நிறமாகவும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் ஈடுபடுவீர்கள். குதூகலமும் உண்டாகும். சுயதொழில் புரிகின்றவர்கள் தங்களுடைய வேலையாட்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. பெற்றோர்களுடைய ஆதரவினால் உங்களுக்குச் சுப விரயச் செலவுகள் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். நீங்கள் உங்களுடைய அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமாகவும் இருக்கும்.

துலாம்
குடும்ப உறுப்பினர்களின் மூலமாக உங்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். விவசாயம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் செய்கின்றவர்கள் லாபம் அடைவார்கள். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உண்டாகும். வெளிநாட்டு சம்பந்தப்பட்ட வேலைகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உடன் பிறப்புகள் மூலமாக உங்களுக்கு நீங்கள் சாதகமான பலன்களை அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். வர்த்தகத் துறை சம்பந்தப்பட்ட பணிகளில் இருக்கின்றவர்களுக்கு லாபம் பெருகும் வாய்ப்புண்டு. நீங்கள் எதிர்பார்த்த பயணங்களின் வாயிலாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகுமு். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் சம்பந்தமான புதிய நட்புகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் நீங்கள் நினைத்தபடி எண்ணங்கள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கும்.

தனுசு
பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் ரீதியாக உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட தேடல்கள் உருவாகும். உங்களுடைய உறவினர்களால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமாகவும் இருக்கும்.

மகரம்
நிர்வுாகத் Jறையில் இருபு்பவர்குளுக்கு சில மாற்றங்களைச் செய்வதன் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாகவே அமையும். மனதில் உள்ள கவலைகள் குறைந்து மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
நண்பர்கள் மூலமாக அரவாங்கம் சம்பந்தப்பட்ட பெரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆன்மீக தலங்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். தேவையற்ற விவாங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்க்ள நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் நினைத்த முயற்சிகள் ஈடேற ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

மீனம்
வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பொன் பொருள் சேர்க்கைகள் உண்டாகுமு். தொழிலில் பல புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். லாபம் ஏற்படும். பயணங்களால் தொழில் துறைியல் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications