For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மிருகங்களை கூடவா உலகம் முழுவதும் வழிபட்டார்கள்... வியக்கவைக்கும் கலாச்சாரங்களின் தொகுப்பு...!

|

உலகம் முழுவதும் மிருக வழிபாடு என்பது பரவலாக இருக்கும் ஒரு மதச்சடங்கு ஆகும். அனைத்து மதங்களிலும் அவரவர் கலாச்சாரத்தை சார்ந்து சில மிருகங்களை புனிதமானதாக கருதி வழிபடுகின்றனர். இது இப்போது மட்டுமல்ல பண்டைய காலம் முதலே இருந்து வரும் ஒரு வழிபாட்டு முறையாகும். இந்தியா மட்டுமின்றி பெர்ஷியாவிலும் பசுவை புனிதமானதாக நினைத்து வழிபட்டனர்.

Worshipped Animals From Around the World

எகிப்தை பொறுத்தவரையில் மிருக வழிபாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் மிருகங்கள் வெவேறு காரணங்களுக்காக வழிபடப்பட்டு வந்தது. நாம் இங்கு வேண்டாமென ஒதுக்கும் சில மிருகங்கள் சில நாடுகளில் தெய்வமாக இருக்கும் விந்தைகளும் உள்ளது. இந்த பதிவில் உலகம் முழுவதும் அதிகம் வழிபடபட்டு வந்த மிருகங்களின் தரவரிசையை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பன்றி

பன்றி

பழங்கால எகிப்தில் பன்றிகள் கடவுளுக்கும் மிகவும் நெருக்கமான புனிதமான பொருளாக கருதப்பட்டது. அவர்களின் கடவுள் பன்றி உருவத்தில் தோன்றி அவர்களை வெயில், மழை, பஞ்சம், குழப்பம் முதலியவற்றில் இருந்து பாதுகாத்ததாக கூறப்படுகிறது. கிரேக்கர்களும் அவர்களின் கடவுளான டேமேட்டரை பன்றி உருவில் வணங்கினர். விவசாயம், பசுமை, மழை போன்றவற்றிற்கு இவர்தான் கடவுளாக இருந்தார். சீனாவின் பன்னிரண்டு புனித மிருகங்களில் பன்றியும் ஒன்றாகும்.

பாம்பு

பாம்பு

இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்றும் பாம்பை கடவுளாக வழிபடும் பழக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு காரணம் சிவபெருமான் தனது கழுத்தில் பாம்பை அணிந்திருப்பதுதான், மேலும் பல கடவுள்களும் பாம்பை தன்னுடன் வைத்திருக்கின்றனர். பண்டைய பூர்வகுடி அமெரிக்கர்களும், எகிப்தியர்களும் கூட பாம்பை கடவுளாக வணங்கினர்.

புலி

புலி

சீனர்களின் பன்னிரண்டு புனித மிருகங்களில் புலியும் ஒன்றாகும். மேலும் அவர்களின் தற்காப்பு கலைகளில் புலி பூமியின் சின்னமாக இருக்கிறது. கிழக்கு ஆசியாவில் புலி வீரம் மற்றும் கோபத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்தியாவில் சிவன் மற்றும் துர்கையின் சின்னமாக புலி விளங்குகிறது. நேபாளத்தில் புலிகளுக்கென பாக் ஜாத்ரா என்னும் திருவிழாவே உள்ளது. வியட்நாமின் பல கிராமங்களிலும் புலி கோவில்கள் இருக்கிறது. கௌரவம் மற்றும் வீரத்தின் அடையாளமாக இருக்கும் புலி அணைத்து கோவில்களின் வாசல்களிலும் தவறாது இருக்கும்.

யானை

யானை

தாய்லாந்து மக்கள் வெள்ளை யானை இறந்தவர்களின் ஆன்மாவை கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். இந்து மதத்தை பொறுத்தவரையில் முழுமுதற் கடவுள் விநாயகரே யானை முகத்துடன்தான் உள்ளார். சுமத்ரான் கலாச்சாரத்தில் யானை சிலைகள் ஆன்மாக்கள் அமரும் இடமாக கருதி கட்டப்பட்டது. இந்து மக்களின் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் யானைகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. அதனால்தான் பெரும்பாலான கோவில்களில் கோவில் யானைகள் வளர்க்கப்படுகிறது. மேலும் போரிலும் யானைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

MOST READ: விநாயகர் அளித்த சாபத்தால் கிருஷ்ணர் என்னென்ன சோதனைகளை சந்தித்தார் தெரியுமா?

குரங்கு

குரங்கு

சீனர்களின் புனித மிருகங்களில் குரங்கு ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்து மதத்தில் குரங்கு ஆஞ்சநேயரின் உருவமாக வணங்கப்படுகிறது. வட ஆப்பிரிக்காவில் கூட குரங்குகள் கடவுளாக வழிபடப்பட்டு வந்தது. புத்த மதத்தில் குரங்கு புத்தரின் மறுபிறவியென நினைக்கிறார்கள். சீன புத்த மதத்தினர் குரங்கை நிலையில்லாத மனித மனதுடன் ஒப்பிடுகின்றனர்.

ஓநாய்

ஓநாய்

யூரேசியா மற்றும் வட அமெரிக்காவின் அடிப்படை புராணங்களில் ஒநாய்க்கென ஒரு தனிப்பட்ட இடமுள்ளது. இதன் ஆபத்தான கொல்லும் குணமும், வீரமும் இதனை ஒரு போர்வீரனாக உருவாக்கப்படுத்துகிறது ஆனால் அதேசமயம் இது தீயசக்தியின் உருவமாகவும் இருக்கிறது. பல கலாச்சாரங்களில் ஓநாய்கள் மாவீரனின் அடையாளமாக கருதப்பட்டு வந்தது. டிலிங்கிட் சமுதாய கடவுளின் பெயர் "ஓநாய்" என்பதாகும், மேலும் அவர்கள் ஓநாயின் தலையை வணங்கினர். கிரேக்க கடவுள்களான ஜீயஸ் மற்றும் அப்பல்லோ இருவருக்குமே ஒநாயுடன் தொடர்பு இருந்தது.

நாய்

நாய்

நேபாளம் மற்றும் இந்தியாவில் நாய்க்கென தனி ஆன்மீக அடையாளம் இருக்கிறது. நேபாளத்தில் நாய்களுக்கென டொய்ஹர் என்னும் ஐந்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் நாய் கடவுளின் தூதனாக கருதப்படுகிறது. வடக்கு ஆசியாவை சேர்ந்தவர்களும் நாயை கடவுளாக வணங்குகின்றனர்.

ஆடு

ஆடு

பண்டையகால சிரியாவில் மன்னரின் திருமணத்தன்று ஆடுகள் கழுத்தில் வெள்ளி நகை அணிந்து அவை நகரத்திற்குள் அவிழ்த்துவிடப்படும். இதன்மூலம் அவை தீயசக்திகளை தன்னுடன் அழைத்து செல்வதாக மக்கள் கருதினர். சைலினஸ் மற்றும் ஃபூன்ஸ் போன்ற சில சமுதாயங்கள் ஆடு போன்ற வடிவத்தில் இருந்தனர். வடக்கு ஐரோப்பாவின் சில சமுதாயங்களை சேர்ந்தவர்களாக ஆடுகளின் கொம்புகள் மற்றும் காதுகளுடன் இருந்தனர். சீனர்களின் ஜோதிடத்தின் படி ஆடு ராசி உள்ளவர்கள் கூச்சம் மிக்கவர்களாகவும், அதிக கற்பனைத்திறன் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

MOST READ: இந்த குறைபாட்டில் ஒன்று இருந்தாலும் பெண்களுக்கு உடலுறவிற்கு பிறகு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும்

குதிரை

குதிரை

துருக்கி மற்றும் ஐரோப்பிய மக்கள் குதிரையை வழிபட்டு கொண்டிருந்தனர். பொசைடன் என்னும் தண்ணீர் கடவுள் குதிரை வடிவத்தில்தான் தோன்றியதாக அந்த மக்கள் நம்புகின்றனர். இது ரோமானியர்களின் புனிதமான கடவுள்களில் ஒன்றாகும். இந்து மற்றும் புத்த மதத்தில் குதிரை ஹயக்ரீவர் என்னும் பெயரில் வழிபடப்படுகிறது. பால்கன் கலாச்சாரத்தில் திருமணமாகாத ஆண்களை குதிரைகளுடன் கட்டிப்போடும் பழக்கம் இருந்தது, இதன்மூலம் குதிரையின் பாலியல் திறன் ஆணிற்கு கிடைக்கும் என்று நம்பப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: god animals world
English summary

Worshipped Animals From Around the World

Did you know Worshipping Animals is a religious ritual where animals are considered as deities.
Story first published: Wednesday, March 20, 2019, 18:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more