For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடவுளாகவே இருந்தாலும் இந்த தவறு செய்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்...என்ன தவறு தெரியுமா

|

இந்து மதத்தில் அனைத்து புராணங்களிலும், இதிகாசங்களிலும் வரும் ஒரு பொதுவான சம்பவம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் ஆகும். இதில் தேவர்களின் அதிபதியான இந்திரனுக்கு எப்பொழுதும் கடவுள்கள் துணையிருப்பார்கள். ஆனால் இந்திரன் பலரின் சாபங்களுக்கு ஆலானவர் ஆவார்.

இந்திரன் பொதுவாகவே பொறுப்பற்றவராகவும், சுகபோக வாழ்க்கையை வாழ்பவராகவும் இருப்பார். அவரின் இந்த குணத்தால்தான் அவர் பெரும்பாலும் சாபங்களுக்கு ஆளாவார். அப்படிதான் ஒருமுறை அவர் மகரிஷி துருவாசரின் கடுமையான சாபத்திற்கு ஆளானார். துருவாசர் என் இந்திரனுக்கு சாபமளித்தார் அதிலிருந்து இந்திரன் எப்படி தப்பித்தார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமைதியான காலம்

அமைதியான காலம்

மூவுலகத்திலும் அமைதி நிலவி கொண்டிருந்த காலம் அது. அசுரர்கள் பல ஆண்டுகளாக தேவர்களை தாக்காமல் இருந்தார்கள். அனைவரும் தங்கள் இராஜ்ஜியங்களை நன்றாக கவனித்து கொண்டிருந்தார்கள். இந்த தருணத்தில்தான் மகரிஷி துருவாசர் இந்திரனை காண சொர்க்கத்திற்கு சென்றார்.

துருவாசர்

துருவாசர்

துருவாசர் அவரின் முன்கோபத்தால் மூவுலகத்திலும் நங் அறியப்படுபவர் ஆவார். இவர் ஈசனின் ருத்ர அவதாரமாக அனைவராலும் கருதப்பட்டார். இந்திரனை பார்க்க அவர் சென்றபோது இந்திரன் ரம்பையுடன் அளவளாவி கொண்டிருந்தார். திடீரென அங்கு துருவாசரை பார்த்த இந்திரன் ஆச்சரியப்பட்டாலும் தன்னுடைய மரியாதையை அவருக்கு தெரிவித்தார்.

இந்திரனின் அலட்சியம்

இந்திரனின் அலட்சியம்

இந்திரனின் மரியாதையை ஏற்றுக்கொண்ட துருவாசர் தன்னுடன் எடுத்து வந்திருந்த மலர் மாலையை இந்திரனுக்கு வழங்கினார். திவ்யத்துவம் நிறைந்த மலர்களை கொண்ட அந்த மாலை எளிதில் கிடைத்து விட்டதாலும், அருகில் ரம்பை இருந்ததாலும் கவனம் சிதறிய இந்திரன் அந்த மாலையை வாங்கி தொலைவில் எறிந்து விட்டான்.

MOST READ: சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?

துருவாசரின் சாபம்

துருவாசரின் சாபம்

இந்திரன் தன்னுடைய பரிசை அவமதித்ததை கண்டு துருவாசர் கடும் கோபமுற்றார். இந்திரனை நோக்கி கோபமாக " இந்திரா! நீ உன் அலட்சியத்தால் அனைத்தையும் இழக்க போகிறாய். உனது கவனக்குறைவால் உன்னுடைய மூத்தவர்களை அனைவரையும் அவமதிக்கிறாய். உன்னுடைய செல்வம் அனைத்தையும் நீ இழப்பாய் " என்று சாபம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

இந்திரனின் கவலை

இந்திரனின் கவலை

துருவாசரின் சாபத்தால் அதிர்ச்சியுற்ற இந்திரன் " பிரபு! நான் என்ன தவறு செய்தேன், எனக்கு ஏன் இந்த தண்டனை என்று புலம்பினார் ". திடீரென இந்திரனின் முகத்தில் இருந்த தேஜஸ் காணாமல் போனது, ஒரு வறியவனை போல காட்சியளிக்க தொடங்கினார். அவரின் செல்வங்கள் அனைத்தும் மரக்கட்டைகளாக மாறியது.

நாரதரின் ஆலோசனை

நாரதரின் ஆலோசனை

தன்னுடைய இக்கட்டான நிலையை போக்க இந்திரன் நாரதமுனியை தேடி ஓடினார். ஆனால் நடந்தவற்றையே அறிந்த நாரதர் அவரும் கோபமுற்றார். " எப்படி உங்களால் இப்படி நடந்து கொள்ள முடிந்தது? என்னால் உங்களுக்கு இதில் எந்த உதவியும் சேயா இயலாது. விஷ்ணு பகவனால் மட்டுமே உதவ முடியும். பிரம்மாவிடம் செல்லுங்கள் அவர் உங்களை திருமாலிடம் அழைத்து செல்வார் " என்று கூறினார். பிரம்மாவின் உதவியுடன் திருமாலை சென்று சந்தித்தார் இந்திரன்.

MOST READ: ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த மூன்று குணங்களுக்காகத்தான் சீதை இராமரை மணக்க சம்மதித்தார்...

திருமாலின் கோபம்

திருமாலின் கோபம்

இந்திரன் கூறியவற்றை கேட்டு திருமால் கோபமுற்றார். மேலும் தன்னாலும் இந்த விஷயத்தில் உதவ முடியாது என்று கூறினார். தன்னை விட வயதில் மூத்தவர்களை அவமதிப்பதும், தன் வீட்டிற்க்கு வரும் விருந்தாளிகளை அலட்சியமாக நடத்துவுதும் மிகப்பெரிய பாவமாகும். அதனை செய்பவர்கள் வாழ்க்கையில் அனைத்தையும் இழப்பார்கள் என்று கூறினார்.

திருமாலின் யோசனை

திருமாலின் யோசனை

விஷ்ணு கூறியதை கேட்டு கண்ணீர் விட்ட இந்திரன் தன் தவறை மன்னித்து இதிலிருந்து தன்னை காப்பாற்றும்படி கெஞ்சினார். உடனே விஷ்ணு லக்ஷ்மி தேவியை வணங்கும்படி கூறினார். உனது விருந்தினரை நீ அவமதித்ததால் அவர் உன் இடம் விட்டு சென்றுவிட்டார். ஒழுக்கமான இடத்தில் மட்டுமே லக்ஷ்மி தங்குவதோடு செல்வத்தையும் வழங்குவார் என்று கூறினார்.

இந்திரனின் தவம்

இந்திரனின் தவம்

திருமாலின் அறிவுரைப்படி லக்ஷ்மி தேவியை வழிபட தொடங்கினார் இந்திரன். கடவுளை வழிபடும் பீஜா மந்திரத்தை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். அவரின் தவத்தை மெச்சி லக்ஷ்மி தேவி அவருக்கு காட்சியளித்தார். லக்ஷ்மி தேவியை பார்த்து கண்ணீர் விட்ட இந்திரன் தன்னுடைய இந்த நிலைக்கு தான்தன் காரணம் என்றும் தன்னை மன்னிக்கும்படியும் கூறினார். உனக்கு என்ன கஷ்டம் நேர்ந்தாலும் அங்கு உன்னை வழிநடத்தவும், காப்பாற்றவும் நான் இருப்பபேன் என்று லக்ஷ்மி கூறினார்.

MOST READ: வாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா?

சாப விமோட்சனம்

சாப விமோட்சனம்

லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதத்தால் மகிழ்ந்த இந்திரன் அன்று முதல் நாள்தோறும் தவறாது லக்ஷ்மியை வழிபட தொடங்கினார். இந்திரனின் இந்த மனமாற்றத்தை கண்ட துருவாசர் மகிழ்ந்து தனது சாபத்தை திரும்ப பெற்றுக்கொண்டு இந்திரன் இழந்த அனைத்தும் திரும்ப கிடைக்கும்படி ஆசீர்வதித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: wealth lakshmi money
English summary

Why sage Durvasa cursed Indra?

Check out the interesting story of why duruvasa cursed indra and how goddess lakshmi helped him.
Story first published: Wednesday, June 12, 2019, 11:43 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more