Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இராமர் ஏன் தன் தூதுவனாக இலங்கை செல்லும் பொறுப்பை அனுமனுக்கு தர வேண்டாம் என்று கூறினார் தெரியுமா?
இராமர் வதைத்த வானர வேந்தன் மாவீரன் வாலியின் மகன்தான் இந்த அங்கதன். அவனுக்கு இராமர் தன் படையில் முக்கிய பொறுப்புகளை கொடுத்திருந்தார்.
இராமாயண போர் என்பது இராவணன் செய்த அதர்மங்களை அழிக்க மகாவிஷ்ணு இராமராய் பிறந்து நிகழ்த்திய மாபெரும் போராகும். இராம அவதாரத்தில் இராமர் இராவணனை மட்டும் அழிக்கவில்லை. பூமியில் அதர்மம் புரிந்து கொண்டிருந்த பல அரசர்களும், அரக்கர்களும் இராமரால் அழிக்கப்பட்டனர்.

இராமர் போரில் வெற்றிக்கொள்ள அவருக்கு சுக்ரீவன், அனுமன், விகர்ணன் போன்றோர் உதவி செய்தனர் இவர்கள் தவிர மற்றொருவனும் உதவி புரிந்தான் அவன்தான் அங்கதன். இராமர் வதைத்த வானர வேந்தன் மாவீரன் வாலியின் மகன்தான் இந்த அங்கதன். அவனுக்கு இராமர் தன் படையில் முக்கிய பொறுப்புகளை கொடுத்திருந்தார். இராவணனிடம் தூது செல்லும்போது கூட அனுமனுக்கு அந்த வாய்ப்பை தராமல் அங்கதனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார். அதற்கான காரணம் என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இலங்கைக்கு வந்தடைதல்
இராமர் தன் வானர சேனையின் உதவியுடன் கடல் மேல் பாலத்தை கட்டி இலங்கைக்கு வந்து சேர்ந்தார். இராமர் தன் சார்பாக ஒருவரை இராவணனிடம் தூது போகுமாறு கூறினார். இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர், ஏனெனில் போரிட அனைவரும் தயாராக இருக்கும்போது இராமர் ஏன் தூது அனுப்புகிறார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது.

இராமர் கூறிய காரணம்
நாம் தயாராய் இருப்பது போலவே அவர்களும் போருக்கு தயாராய்த்தான் இருப்பார்கள். ஆனால் போர் நடந்தால் இருபுறமும் வீரர்கள் கொல்லப்படுவது உறுதியாகும். அதனால் இராவணனுக்கு அவனின் பாவத்தை சரி செய்ய ஒரு வாய்ப்பு கொடுப்போம். அதற்குத்தான் தூதுவன் வேண்டும் என்று கூறினார். இராமர் கூறியது அனைவருக்கும் சரியெனவே தோன்றியது.

தூதுவராக யாரை அனுப்பலாம்?
தூது அனுப்புவது முடிவான பின் யாரை தூதுவராக அனுப்பலாம் என்ற கேள்வி எழுந்தது. அனைவரின் மனதிலும் அனுமனின் பெயர்தான் இருந்தது. ஏனெனில் அனுமன் ஏற்கனவே இலங்கைக்குள் சென்று இராவணனை நேருக்கு நேர் சந்தித்தவர், மேலும் அவரின் அளப்பரியா வீரம், ஆற்றல் மற்றும் புத்திகூர்மை பற்றி அனைவரும் அறிவார்கள்.

இராமரின் மறுப்பு
அனைவரும் அனுமனின் பெயரை கூறும்போது இராமர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் இது சரியல்ல என்றும் கூறினார். ஏனெனில் இந்த முறையும் அனுமனையே அனுப்பினால் எதிர்தரப்பினர் நம் படையில் அனுமனை தவிர வேறு பலசாலியே இல்லையோ எனவும் மற்றவர்கள் அவர்களை கண்டு அஞ்சுகிறார்கள் என்றோ நினைத்து கொள்வார்கள். எனவே அனுமனுக்கு பதிலாக வேறு யாரையாவது அனுப்பலாம் என்று கூறினார். அங்கதனின் பெயரையும் அவரே முன்மொழிந்தார்.

தூதுவரின் தரம்
தரமான தூதுவர் என்பவர் சரியானவராகவும், புத்திசாலியாகவும், தனது எஜமானருக்கு விசுவாசம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். அனைத்திற்கும் மேலே தந்து சொந்த விருப்பு மற்றும் வெறுப்புகள் இன்றி கூறப்படும் தகவலை எதிர்தரப்பினர் நன்கு உணர்ந்து கொள்ளும்படி கூறவேண்டும்.

அங்கதன்தான் சிறந்த தேர்வு
இராமர் அங்கதனை சுட்டி காட்டி சிறந்த தூதுவராக இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளும் அங்கதனுக்கு இருக்கிறது என்று கூறினார். அவன் புத்திசாலி, பலசாலி அனைத்திற்கும் மேலாக என் மீது அளவற்ற பக்தி கொண்டவன் எனவே அவன்தான் என் சார்பில் தூதுவனாக செல்ல வேண்டும் என்று கூறினார்.

மற்றொரு காரணம்
இந்த விஷயத்தில் இராமர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இதன் மூலம் அங்கதனுக்கு கிஷ்கிந்தையின் அரசனாக அனைத்து தகுதியும் இருக்கிறது என்று உணர்த்தினார். மேலும் வாலியை கொன்றதால் அங்கதன் இராமர் மீது பகையுடன் இருப்பானோ என்று மற்றவர்களின் மனதில் இருந்த சந்தேகத்தை விரட்டினார். மேலும் அங்கதன் இராவணன் தனக்கு அளித்த வாய்ப்புகளை நிராகரித்து இராமர் மீதான தன் பக்தியை நிரூபித்தான்.

அங்கதனின் ஆற்றல்
அங்கதனின் ஆற்றலையும், பக்தியையும் இராமர் நன்கு அறிவார். ஆனால் அதனை மற்றவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அங்கதனுக்கு இந்த சோதனையை வைத்தார், அங்கதனும் அனைவரின் மனதிலும் இருந்த எண்ணங்களை உடைத்து தன் அர்ப்பணிப்பையும், சக்தியையும் நிரூபித்தான்.



Click it and Unblock the Notifications











