இராமாவதாரத்தில் கொடுத்த வாக்கிற்காக கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணர் மணந்து கொண்ட பெண் யார் தெரியுமா?

எண்ணற்ற மனைவிகள் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் விட கிருஷ்ணர் இரண்டு பேரை மட்டுமே அதிக காதலித்தார். அது ருக்மிணியையும், சத்யபாமாவையும்தான்.

மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி நாம் நன்கு அறிவோம். பூமியின் பாரத்தை குறைத்து தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணு எடுத்த அவதாரமான கிருஷ்ணர் பெரும்பாலான மக்களுக்கு பிடித்த அவதாரமாக இருக்கிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள், கௌரவர்களின் பகையை பற்றி மட்டும் கூறவில்லை, கிருஷ்ணரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பல தகவல்கள் உள்ளது.

Why Krishna loved Rukmini and Satyabhama more than his other wives

தனிப்பட்ட வாழ்க்கை எனும்போது அவரின் பிறப்பு மற்றும் இளமைப்பருவம் மட்டுமின்றி அவரின் திருமண வாழ்க்கையை பற்றியும் பல தகவல்கள் உள்ளது. எண்ணற்ற மனைவிகள் அவருக்கு இருந்தாலும் அவர்கள் அனைவரையும் விட கிருஷ்ணர் இரண்டு பேரை மட்டுமே அதிக காதலித்தார். அது ருக்மிணியையும், சத்யபாமாவையும்தான். அதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிருஷ்ணரின் மனைவிகள்

கிருஷ்ணரின் மனைவிகள்

புராண குறிப்புகளின் படி கிருஷ்ணருக்கு மொத்தம் 8 மனைவிகள் இருந்தார்கள். அவர்களின் பெயர்கள் ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, களின்டி, மித்ரவிந்தா, நாகனஜிதி, பத்ரா மற்றும் லக்ஷ்மண ஆவார்கள். மேலும் அவர் மேல அதிக ஈடுபாடு கொண்ட கோபியர் 16000 பேரையும் திருமணம் செய்து கொண்டார். மொத்தத்தில் கிருஷ்ணருக்கு 16008 மனைவிகள் இருந்தனர்.

கிருஷ்ணர் மீதான ருக்மிணியின் காதல்

கிருஷ்ணர் மீதான ருக்மிணியின் காதல்

ருக்மிணி விதர்பாவை ஆண்ட பீஷ்மகனின் மகள் ஆவார். கிருஷ்ணரை நேரில் காண்பதற்கு முன்னரே அவர் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார் ருக்மிணி. அதற்கு காரணம் எட்டுத்திக்கும் பரவியிருந்த கிருஷ்ணரின் வீரம், வசீகரம் மற்றும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிய செய்திகள்தான்.

காதலுக்கு பிரச்சினை

காதலுக்கு பிரச்சினை

ருக்மிணி கிருஷ்ணர் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தாலும் அவரது சகோதரன் ருக்மிக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்க்கு காரணம் கிருஷ்ணரின் எதிரியான ஜராசந்தனுடன் ருக்மிக்கு இருந்த நட்புதான். எனவே ஜராசந்தனுக்கு பிடிக்காத கிருஷ்ணருக்கு தன் தங்கையை கட்டி வைக்க ருக்மி விரும்பவில்லை.

ருக்மிணியின் குழப்பம்

ருக்மிணியின் குழப்பம்

ருக்மி தனக்கும், ஜராசந்தனுக்கும் பொதுவான நண்பனான சிசுபாலனுக்கு ருக்மிணியை மணம் முடித்து வைக்க திட்டம் தீட்டினான். ருக்மிணி கிருஷ்ணரை மனது கொள்ள வேண்டிய தனது விருப்பத்தை பெற்றோர்களிடம் கூறி சம்மதம் வாங்கிவிட்டார். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர்களால் தங்கள் மகன் ருக்மிக்கு எதிராக பேச இயலவில்லை.

ருக்மிணியின் திட்டம்

ருக்மிணியின் திட்டம்

ருக்மிணி கிருஷ்ணருக்கும் தனக்கும் ஏற்கனவே ஒரு தெய்வீக பிணைப்பு ஏற்பட்டிருந்ததை அவர் உணர்ந்தார் அதனால் தன்னால் வேறுயாரையும் திருமணம் செய்து கொள்ள இயலாது என்று முடிவெடுத்திருந்தார். எனவே கிருஷ்ணருக்கு தன காதலை வெளிப்படுத்தியும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கடிதமொன்று எழுதினார். தனக்கு நம்பகமான தூதன் மூலம் அதனை கிருஷ்ணருக்கு அனுப்பினார்.

ருக்மிணியின் கடத்தல்

ருக்மிணியின் கடத்தல்

ருக்மிணியின் கடிதத்தை படித்த கிருஷ்ணர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இதற்கிடையில் ருக்மிணிக்கும், சிசுபாலனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. ஆனால் நான் வந்து உன்னை அழைத்துச்செல்வேன் என்று கிருஷ்ணர் ருக்மிணிக்கு சொல்லி அனுப்பினார். இதனை கேள்வியுற்ற ஜராசந்தன் தனது படையுடன் கோவிலின் வாசலில் காத்திருந்தான். எதிர்புறம் கிருஷ்ணரும், பலராமனும் தங்கள் படைகளுடன் வந்தனர்.

கிருஷ்ணருடன் ருக்மிணிக்கு திருமணம்

கிருஷ்ணருடன் ருக்மிணிக்கு திருமணம்

ஆனால் அனைத்து தடைகளையும் மீறி கிருஷ்ணர் ருக்மிணியை தூக்கினார். அவரை பின்தொடர்ந்து வந்த சிசுபாலன் மற்றும் ஜராசந்தனின் படைகள் பலராமனால் தோற்கடிக்கப்பட்டது. துவாரகையை அடைந்த பின் ருக்மிணி கிருஷ்ணரை மணந்து கொண்டு பட்டத்துராணியாக மாறினார்.

சத்யபாமாவுடன் திருமணம்

சத்யபாமாவுடன் திருமணம்

சத்யபாமாவின் தந்தை சத்ரஜித் துவாரகையில் மிகப்பெரும் செல்வந்ததராக இருந்தார் அவரிடம் சியாமந்தகம் என்னும் திவ்ய இரத்தினம் ஒன்று இருந்தது. இந்த இரத்தினத்தை உக்கிரசேனனிடம் கொடுத்து பாதுகாக்கும் படி கூறினார். ஆனால் சத்ரஜித் அதனை மறுத்து தனது சகோதரன் ப்ரசஞ்சித்திடம் கொடுத்தார். அதனை எடுத்துக்கொண்டு வேட்டைக்கு சென்ற சத்ரஜித்தின் சகோதரன் சிங்கத்தால் கொல்லப்பட்டார்.

ஜம்பவான்

ஜம்பவான்

சிங்கத்திடம் இருந்து அந்த இரத்தினம் ஜம்பவானிடம் சென்றது, அதனை அவர் தன் மகள் ஜாம்பவதிக்கு பரிசாக கொடுத்தார். அதன்பின்னர் சியாமந்தகம் காணாமல் போனதற்கான பழி கிருஷ்ணர் மீது விழுந்தது. அதனை போக்க வனத்திற்கு சென்ற கிருஷ்ணர் அங்கு ஜம்பவானுடன் போர் புரிய தொடங்கினார். கிருஷ்ணர் யார் என்பதை அறிந்து கொண்ட ஜம்பவான் அவரிடம் சியாமந்தகத்தை ஒப்படைத்ததுடன் தன் மகள் ஜாம்பவதியையும் மணம் முடித்து வைத்தார்.

சத்யபாமாவுடன் திருமணம்

சத்யபாமாவுடன் திருமணம்

வனத்திலிருந்து திரும்பி வந்த கிருஷ்ணர் இரத்தினத்தை சத்ரஜித்திடம் ஒப்படைத்து நடந்தவற்றை பற்றி கூறினார். உண்மைகளை தெரிந்து கொண்ட சத்ரஜித் கிருஷ்ணரிடம் மன்னிப்பு வேண்டினார். மேலும் தன் மகள் சத்யபாமாவையும், சியாமந்தக இரத்தினத்தையும் கிருஷ்ணருக்கே வழங்கினார். அதன்பின் கிருஷ்ணருக்கும், சதயபாமாவிற்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

கிருஷ்ணர், ருக்மிணி மற்றும் சத்யபாமா

கிருஷ்ணர், ருக்மிணி மற்றும் சத்யபாமா

ருக்மிணி, சத்தியபாமா தவிர்த்து கிருஷ்ணருக்கு ஆறு ராணிகளும், 16000 மனைவிகளும் இருந்தனர். ஆனால் கிருஷ்ணர் இவர்கள் மீது மட்டும் அதிக அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். ருக்மிணி மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலக்ஷ்மியின் அவதாரம் ஆவார். இராம அவதாரத்தில் சீதையாக பிறந்ததும் இவர்தான். அவர் விஷ்ணுவை விட்டு எப்போதும் பிரிந்திருக்க மாட்டார்.

ஏன் கிருஷ்ணர் ருக்மிணியை அதிகம் விரும்பினார்?

ஏன் கிருஷ்ணர் ருக்மிணியை அதிகம் விரும்பினார்?

ஒவ்வொரு முறை விஷ்ணு பூமிக்கு வரும்போதும் லஷ்மி தேவியும் அவரை பின்தொடர்ந்து பூமிக்கி வந்துவிடுவார். விஷ்ணு இன்றி அவரால் எப்பொழுதும் இருக்க முடியாது, அதேபோல ருக்மிணியால் கிருஷ்ணர் இல்லாமல் இருக்க முடியாது. அவர்கள் இருவருமே ஒன்றாகவே இருந்தார்கள் எப்போதும் பிரியவில்லை.

சத்யபாமாவின் கதை

சத்யபாமாவின் கதை

தனது முற்பிறவியில் சத்தியபாமா சந்திர காந்தா என்னும் நாக கன்னிகையாக பிறந்தார். விஷ்ணுவின் தீவிர பக்தையாக இருந்த அவர் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார். விஷ்ணுதான் இராமராக அவதாரம் எடுத்திருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட அவர் இராமரையே திருமணம் செய்துகொள்ள எண்ணினார்.

இராமர் மீதான ஆர்வம்

இராமர் மீதான ஆர்வம்

இதற்கிடையில் சந்திர காந்தவின் அழகில் மயங்கிய அக்கிராவன் என்னும் அசுரன் அவளை கடைதிக்கொண்டு பாதாள உலகத்திற்கு சென்றார். சந்திர காந்தாவை இராமர் பாதாள உலகத்தில் சந்திக்க வேண்டுமென்று முன்கூட்டியே என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இராமர் அவளை சந்தித்தபோது தன்னால் ஏன் சந்திரகாந்தாவை திருமணம் செய்து கொள்ள இயலாது என்பதற்கு இராமர் கூறிய எந்த காரணத்தையும் அவள் கேட்க தயாராக இல்லை. மரியாதை புருஷோத்தமனாக இருந்த இராமர் ஏகபத்தினி விரதன் எனவும் ஒருவரை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் எனவும் கூறினார்.

இராமர் செய்த சத்தியம்

இராமர் செய்த சத்தியம்

தன் எண்ணம் நிறைவேறாததால் வருத்தமுற்ற சந்திர காந்தா சாபமிட விரும்பினால். ஆனால் இராமர் இந்த அவதாரத்தில் என்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது ஆனால் அடுத்த அவதாரத்தில் உன்னை என் இரண்டாவது ராணியாக ஏற்றுக்கொள்வேன் என்று வாக்களித்தார். எனவே துவாபர யுகத்தில் விஷ்ணுவின் மனைவியாக வர சந்திர காந்தா ஒப்புக்கொண்டார். கிருஷ்ணருக்கும், சதயபாமாவுக்குமான உறவு என்பது யுகங்கள் கடந்தும் தொடர்ந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion