Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இந்தியர்கள் பசுமாட்டை கடவுளாக வழிபடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?
உலகம் முழுவதும் பசுவை வெறும் விலங்காகவும், உணவுப்பொருளாகவும் மட்டும் பார்க்கும்போது இந்தியாவில் மட்டும்தான் அது கடவுளாக மதிக்கப்படுகிறது.
இந்தியாவில் வினோதமான பழக்கவழக்கங்களும், சடங்குகளும் ஏராளமாக உள்ளது. அதில் வெளிநாட்டினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு வினோத சடங்கு பசு வழிபாடாகும். ஏனெனில் உலகம் முழுவதும் பசுவை வெறும் விலங்காகவும், உணவுப்பொருளாகவும் மட்டும் பார்க்கும்போது இந்தியாவில் மட்டும்தான் அது கடவுளாக மதிக்கப்படுகிறது.

இந்திய மக்கள் ஏன் பசுவை கடவுளாக வழிபடுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? இது இந்து மத நூல்களில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது அதன் பயன்களுக்காக அவற்றை பாதுகாக்க உருவாக்கப்பட்ட மூடநம்பிக்கையா என்று யோசித்துள்ளீர்களா? இந்த பதவில் அதற்கான பதிலை பார்க்கலாம்.

சில ஆழமான உண்மைகள்
இந்தியாவில் மட்டுமின்றி நேபாளம் மற்றும் பூடான் போன்ற நாடுகளிலும் பசு கடவுளாக மதிக்கப்படுகிறது. வேத காலங்களில் இருந்தவர்கள் ஆயர்களாக இருந்தனர். அவர்களின் அடிப்படை தேவையே பால் மற்றும் சாணமாகத்தான் இருந்தது. பசுவின் சாணம்தான் இந்தியாவில் எரிபொருளாகவும், உரமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் இது வீட்டை சுத்தம் செய்யவும், கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசு வேத கால மக்களுக்கு உணவு, எரிபொருள், உரம் , கிருமிநாசினி என அனைத்தையும் அளித்தது.

நெருப்பு வழிபாடு
பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு முக்கிய பொருள் நெய் ஆகும். இது யாகத்திற்கும், கடவுள் வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. நெருப்பு வழிபாடு என்பது அனைத்து வழிபாடுகளை விடவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது பசுவுக்கும், அதன்மூலம் கிடைக்கும் பொருட்களுக்கும் மதரீதியான முக்கியத்துவத்தை கொடுக்கிறது.

அமைதியான விலங்கு
உருவத்தில் பெரியதாக இருந்த போதிலும் பசு எப்பொழுதும் அமைதியான விலங்காகவும், அச்சுறுத்தல் இல்லாத விலங்காகவும் இருக்கிறது. இந்திய சாலைகளில் பசுமாடுகள் அமைதியாக உலா வருவதை நாம் பார்க்கலாம். . பசுவின் சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் அமைதியை இந்தியர்கள் எப்போதும் பாராட்டியுள்ளனர். மேலும் பசுவுக்கு அதன் கன்றுக்குட்டி மீது இருக்கும் பாசம் அன்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வேதகாலத்தில் இருந்து கூறப்படுகிறது.

நிலைத்தன்மை
இந்தியர்கள் நாடோடிகளாக இருந்த போது மாமிசத்தை உண்பவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் ஆற்றுக்கரையில் நிலையான இடத்தை அமைத்த பிறகு அவர்களுக்கு விவசாயத்தின் பலனும், அவசியமும் புரிந்தது. எப்போதும் அவர்களுக்கு பசுக்கள் உதவியாக இருந்தன.

மேற்கத்திய கலாச்சாரம்
மேற்க்கத்திய கலாச்சாரத்தை பொறுத்தவரை பசு மாடு இந்தியர்களுக்கு செல்லப்பிராணி போன்றது என்று நம்பப்படுகிறது. மேற்கு நாடுகளில் நீங்கள் நாய் மாமிசம், பூனை மாமிசம் போன்றவற்றை பார்க்க இயலாது, அதற்கு காரணம் அவை அங்கு செல்லப்பிராணிகள். அதேபோலத்தான் இந்தியர்களுக்கு பசு மாடு செல்லப்பிராணியாகும்.

பயன்கள்
சென்ற தலைமுறை வரை கூட அனைத்து குடும்பங்களும் வீட்டிற்க்கு ஒரு பசுமாடு வைத்திருந்தார்கள். நமக்கு தேவையான உணவுப்பொருட்கள், வழிபாட்டு பொருட்கள், நோய்களில் இருந்து பாதுகாப்பு, எரிபொருள் என அனைத்தையும் பசுமாடுகள் வழங்கியது. அதனால்தான் இந்தியர்கள் பசுவை பாதுகாக்க அவற்றை வழிபட தொடங்கினார்கள்.



Click it and Unblock the Notifications