For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனுமன் ஏன் வேண்டுமென்றே தன் சகோதரன் பீமனிடம் வம்புக்கு சென்றார் தெரியுமா?

|

மகாபாரதத்திற்கும், இராமாயணத்திற்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளது. இரண்டிலுமே விஷ்ணுதான் இராமராகவும், கிருஷ்ணராகவும் பிறந்து அதர்மத்தை அழித்தார். இரண்டு இதிகாசங்களிலும் போர் தொடங்க காரணமாக இருந்தது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதான்.

மகாபாரதத்திற்கும், இராமாயணத்திற்கும் இடையே உள்ள வேறு சில ஒற்றுமைகள் அதில் வரும் கதாபாத்திரங்கள். துருவாசர், ஜம்பவான் போன்றவர்கள் இரண்டு இதிகாசங்களிலும் வருவார்கள். அதில் மிகவும் முக்கியமானவர் அனுமன் ஆவார். அனுமனுக்கும், பீமனுக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான சந்திப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வனவாசம்

வனவாசம்

சூதாட்ட மண்டபத்தில் நடந்த சம்பவங்களுக்கு பிறகு பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். பாண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமைகள் ஒதுக்கப்பட திரௌபதி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.

வாசனை மலர்

வாசனை மலர்

ஒருநாள் தென்றலுடன் சேர்ந்து மென்மையான வாசனை ஒன்று வந்தது. அதன் வாசனையால் ஈர்க்கப்பட்ட திரௌபதி அந்த சுகந்திகா மலரை தன் வசப்படுத்த எண்ணினார். எனவே அதனை பறித்து தரும்படி பீமனிடம் கேட்டார். அனால் பீமன் தனக்கு நேரமில்லை எனவும் மலரின் வாசனையின் பின்னால் தன்னால் ஓடிக்கொண்டிருக்க முடியாது எனவும் கூறிவிட்டார்.

திரௌபதியின் ஏமாற்றம்

திரௌபதியின் ஏமாற்றம்

பீமன் பதிலால் திரௌபதி மிகவும் ஏமாற்றமடைந்தார். " பீமனே உங்களால் எனக்கு ஒரு மலரை கூட பறித்து தர முடியவில்லை. நான் உங்களிடம் கேட்டதை மறந்து விடுங்கள் " என்று கூறிவிட்டு குடிலுக்குள் அழுதுகொண்டே சென்றுவிட்டார்.

MOST READ: இந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...!

பீமனின் கவலை

பீமனின் கவலை

திரௌபதியின் துயரத்தை பார்த்த பீமன் கவலையுற்றார். எனவே அடுத்தநாள் அந்த மலரை தேடி சென்றார். அடர்ந்த வனத்திற்குள் செல்ல நேரிட்டது, பாதை இல்லாததால் தனக்கான பாதையை தானே உருவாக்கி கொண்டார். அவர் எழுப்பிய கடுமையான ஒலியில் காட்டில் இருந்த மிருகங்கள் அனைத்தும் பயந்து ஓடியது. விரைவில் அவர் சுகந்திகா மலர்கள் இருந்த இடத்தை பார்த்தார்.

குரங்கின் கேள்வி

குரங்கின் கேள்வி

அவர் மலர்கள் இருந்த இடத்திற்குள் நுழைய முற்பட்டபோது அங்கே ஒரு குரங்கு படுத்திருந்ததது. அதனை பார்த்து கோபமுற்ற பீமன் " சோம்பேறி குரங்கே இங்கிருந்து செல். நீ யாருடைய பாதையை மறைத்து படுத்திருக்கிறாய் தெரியுமா? நான் இந்த உலகத்தின் சிறந்த போர்வீரன். என்னை ஆயுதத்தை உபயோகபடுத்த வைக்காதே. இங்கிருந்து செல் " என்று கூறினார். மெதுவாக ஒரு கண்ணை திறந்து பீமனை பார்த்தது. " நீ நிச்சயம் பீமனாகத்தான் இருக்க வேண்டும். நான் உன்னை பெரிய போர்வீரனாக கருதவில்லை. உங்கள் உறவினர்கள் உங்கள் மனைவியை அவமதித்து துஷ்பிரயோகம் செய்தபோது இந்த வலிமையும் துணிச்சலும் எங்கே போனது? " என்று கேட்டது.

பீமனின் கோபம்

பீமனின் கோபம்

குரங்கின் இந்த கேள்வி பீமனின் கோபத்தை அதிகரித்தது. " இங்கே பார், நான் நேர்பாதையில் நடப்பவன் எனது பாதையில் எது வந்தாலும் கொல்வேன். ஆனால் உன்னை நான் கொல்ல விரும்பவில்லை. ஏனெனில் நீ ஒரு வயதான குரங்கு. பீமன் இரு வயதான குரங்கை கொன்றான் என்று தெரிந்தால் இந்த உலகம் என்னை பார்த்து சிரிக்கும் " என்று கூறினார்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களை தொந்தரவு செய்வதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள்...!

குரங்கின் சவால்

குரங்கின் சவால்

இதனை கேட்ட குரங்கு " நான் மிகவும் வயதானவன், மேலும் பலவீனமாக இருக்கிறேன். நீ ஏன் என் வாலை நகரத்தி வைத்து விட்டு செல்லக்கூடாது " என்று கூறியது.

பீமனின் தோல்வி

பீமனின் தோல்வி

பீமன் தயங்கினாலும் இதற்கு ஒப்புக்கொண்டார். அந்த வாலை தூக்க முயற்சித்தார் ஆனால் அது மிகவும் கனமாக இருந்தது. தனது அனைத்து வலிமையையும் திரட்டி வாலை தூக்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. குரங்கு சிரித்துக்கொண்டே பீமனை பார்த்தது. இறுதியில் பீமன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

குரங்கின் உண்மை முகம்

குரங்கின் உண்மை முகம்

பீமன் அந்த குரங்கிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு " நீ சாதாரண குரங்காக இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் நீ யார்? உனக்கு நான் செய்ய வேண்டும்? " என்று வினவினார். அதன் பின்னர் அந்த குரங்கு அனுமனாக மாறியது.

சகோதரர்களின் சந்திப்பு

சகோதரர்களின் சந்திப்பு

அனுமன் பீமனிடம் " நான் என் சகோதரனை பார்க்க விரும்பினேன். அதேசமயம் உனக்குள் இருக்கும் ஆணவத்தை அழிக்க எண்ணினேன். நீ திரௌபதி கேட்ட மலர்களை தேடுவதை உணர்ந்தேன். அவை இங்குதான் இருக்கிறது, எடுத்துச்செல் நான் உன்னை நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டேன் " என்று கூறினார்.

MOST READ: மகாபாரதத்தை வீட்டில் வைத்திருப்பது குடும்பத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை?

பீமன் கேட்ட உதவி

பீமன் கேட்ட உதவி

போரில் தங்களுக்கு உதவுமாறு பீமன் அனுமனிடம் கேட்டார். அதற்கு இது தான் போர் புரிவதற்கான நேரம் அல்ல. அதனால் நான் உங்கள் கோடியில் இருப்பேன் என்று கூறினார். மலருடனும் தன் சகோதரனின் ஆசியுடனும் பீமன் குடிலை நோக்கி சென்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Hanuman stopped Bheem on his way?

Read to know the interesting meeting between Hanuman and Bheem.
Story first published: Tuesday, July 9, 2019, 12:05 [IST]