For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ணன் அனைத்திலும் சிறந்தவராக இருந்தபோதும் கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?

கிருஷ்ணர் பாரத மகாயுத்தத்தை அர்ஜுனனை முன்னிலைப்படுத்தி நிகழ்த்தினார். ஆனால் அர்ஜுனனுக்கு இணையாக வீரம் கொண்டவர்களும் இருந்தார்கள்.

|

இந்தியாவின் இதிகாசங்களில் முக்கியமான ஒன்று மகாபாரதம் ஆகும். மகாபாரதம் என்பது விஷ்ணுவின் கிருஷ்ணர் அவதாரம் பூமியில் நிலவிய அதர்மத்தையும், பூமியின் மக்கள்தொகையை பாதியாக குறைக்கவும் நடத்திய மாபெரும் யுத்த சரித்திரமாகும். யுத்தம் மட்டுமின்றி மகாபாரதத்தில் பல வாழ்க்கை நெறிகளும் உள்ளது.

Why did Krishna choose Arjuna instead of Karna

கிருஷ்ணர் பாரத மகாயுத்தத்தை அர்ஜுனனை முன்னிலைப்படுத்தி நிகழ்த்தினார். ஆனால் அர்ஜுனனுக்கு இணையாக வீரம் கொண்டவர்களும் இருந்தார்கள். அதில் கர்ணன், பீஷமர், துரோணர் போனறோர் முக்கியமானவர்கள். ஆனால் அவர்களை தவிர்த்து அர்ஜுனனை கிருஷ்ணர் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீஷ்மர்

பீஷ்மர்

பீஷமர் தன்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் சுயநலமாக நடந்து கொண்டதில்லை. ஞானம், வீரம், வலிமை, திவ்ய அஸ்திரங்கள் என அனைத்தும் நிரம்பியவராக பீஷ்மர் விளங்கினார். அவரின் மரணம் கூட அவரின் அனுமதி இன்றி நெருங்க முடியாத வரத்தை பெற்றிருந்தார். ஆனால் அவர் அதர்மத்தின் பக்கம் இருந்து போரிட வேண்டியதாயிற்று. அவரால் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இராஜ்ஜியத்தை உருவாக்கி இருக்க முடியும். ஆனால் அவரின் சத்தியம் அதை தடுத்துவிட்டது.

பீஷ்மரின் சத்தியம்

பீஷ்மரின் சத்தியம்

பீஷ்மர் செய்த சத்தியம் என்னவெனில் அஸ்தினாபுர அரியணையில் யார் அமர்ந்தாலும் அவருக்கு பாதுகாப்பாக தான் இருப்பேன் என்று கூறியதுதான். இந்த சத்தியத்தை அவர் ஒருநாளும் மீறவில்லை, தன் அன்பிற்குரிய சொந்தங்களுடன் போரிடும் நிலையிலும் அதனை மீறாமல் இருந்தார்.

பீஷ்மரின் தவறு

பீஷ்மரின் தவறு

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது முக்கியமானது. ஆனால் மகாபாரதம் கூறும் தர்மத்தின் படி தன்னுடைய தனிப்பட்ட சத்தியத்திற்காக தர்மத்தை கைவிட்டுவிட்டு, அதர்மத்தின் பக்கம் நிற்பது என்பது மிகப்பெரிய பாவமாகும். அப்படிப்பட்ட சபதத்தை கைவிடுவதில் எந்த தவறும் இல்லை. பீஷ்மா தனது தனிப்பட்ட சபதத்தை எல்லாவற்றிற்கும் மேலாக நினைத்தார், அந்த சபதம் தீமைக்கான கருவியாக மாறியபோதும் அவர் அதை உணரவில்லை. இதனால்தான் க்ரிஷ்னர் பீஷ்மரை தவிர்த்தார்.

MOST READ: மனுநீதியின் படி கணவன்-மனைவி உறவில் அவர்கள் மீறும் இந்த சத்தியங்கள் அவர்கள் வாழ்க்கையை சிதைக்கும்...!

துரோணர்

துரோணர்

துரோணர் அஸ்தினாபுர மன்னரும், துரியோதனின் தந்தையுமான திருதராஷ்டிரனுக்கு ஊழியராக இருந்தார். அவர் அனைத்து இளவரசர்களுக்கும் குருவாக நியமிக்கப்பட்டார். மிகசிறந்த குருவாக விளங்கியா இவர் அனைத்து இளவரசர்களையும் மாவீரர்களாக மாற்றினார். துரியோதனன் தவறான காரியங்களை செய்தபோது அதனை பற்றி அவர் அறிந்திருந்தாலும் தன் மகன் மீதிருந்த பாசத்தாலும், அஸ்தினாபுரத்தின் மீதிருந்த விசுவாசத்தால் அதனை தடுக்காமல் விட்டுவிட்டார்.

இறுதி யுத்தம்

இறுதி யுத்தம்

மகாபாரத யுத்தத்தின் போது துரோணர் துரியோதனின் தரப்பில் இருந்து போரிட்டார். இறுதியில் கிருஷ்ணரின் திட்டத்தின் மூலம் திருஷ்டதுய்மனால் கொல்லப்பட்டார். துரோணர், ஒரு சிறந்த போர்வீரராக இருந்தபோதிலும், ஒழுக்கநெறியை நன்கு அறிந்தவராக இருந்தபோதிலும் தர்மத்தை காட்டிலும் விசுவாசத்திற்கும், பாசத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இது தர்மத்தை நிலைநாட்டுவதற்கு உதவாது. எந்த சூழ்நிலையிலும், யாராக இருந்தாலும் அதர்ம வழியில் சென்றால் அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும்.

கர்ணன்

கர்ணன்

கர்ணன் சிறந்த வீரன் என்பதில் சந்தேகம் இல்லை, சொல்லப்போனால் அர்ஜுனனை விட பல விஷயங்களில் கர்ணன் சிறந்தவராக இருந்தார். வில்லாற்றலில் இருவரும் சமமாக இருந்தாலும் உடல் வலிமையில் கர்ணன் மேலோங்கியவராக இருந்தார். தானத்திலும், தர்மத்திலும் அனைவரையும் விடவே கர்ணன் சிறந்தவராக இருந்தார். இதனை நிறைகள் இருந்தும் கர்ணனிடம் ஒரு பெரிய குறைபாடு இருந்தது. துரியோதனன் மீது அவர் வைத்திருந்த நட்பும், விசுவாசமும் அனைத்தையும் விட உயர்ந்ததாக இருந்தது. தர்மத்தை காட்டிலும் தவறான இடத்தில் காட்டப்படும் விசுவாசம் ஆபத்தானதாகும்.

MOST READ: டயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...!

கர்ணனின் தவறு

கர்ணனின் தவறு

கர்ணன் தன்னுடைய அனைத்து வலிமையையும் தன்னுடைய நலனுக்காக கூட இல்லாமல் துரியோதனன் நலனுக்காக பயன்படுத்தினார். தனது நண்பன் சுயநலமாக பிறருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை செய்யும்போது அவனுக்கு தன்னுடைய விசுவாசத்தை கொடுத்ததுதான் கர்ணனின் மிகப்பெரிய தவறாகும். தவறான நண்பனுக்கு ஒருவர் காட்டும் விசுவாசம் தர்மத்திற்கு எதிராக செயல்படுவதற்கு சமமாகும். அதனால்தான் பல சிறப்புகள் இருந்தும் கிருஷ்ணர் கர்ணனை தேர்ந்தேடுக்கவில்லை,

அர்ஜுனன்

அர்ஜுனன்

அர்ஜுனனின் வீரத்தின் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது. ஆனால் கர்ணன், பீஷ்மர், துரோணரிடம் இல்லாத சில பலவீனங்கள் அர்ஜுனனிடம் இருந்தது. சில விஷயங்களில் முட்டாள்தனமாக நடக்கவும், செய்யவும் செய்தார் அர்ஜுனன். இதனால் அவரின் சகோதரர்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாகினர்.

அர்ஜுனனின் சபதம்

அர்ஜுனனின் சபதம்

அர்ஜுனன் தந்தது காண்டீவத்தின் மீது அதிக கர்வம் கொண்டிருந்தார். அதனை யார் அவமதித்தாலும் அவரின் உயிரை பறிப்பேன் என்று சபதம் எடுத்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக யுதிஷ்டிரன் போரின்போது காண்டீவத்தை அவமதித்தார். உடனே தன்னுடைய வாலை எடுத்துக்கொண்டு தனது சகோதரனை கொள்ள சென்றார், ஆனால் கிருஷ்ணர் தடுத்து விட்டதால் அவரை கொல்வதற்கு பதிலாக அனைவரின் முன்னிலையிலும் அவமதித்தார்.

அர்ஜுனனின் வருத்தம்

அர்ஜுனனின் வருத்தம்

தனது சகோதரனை அவமதித்ததை பிறகு உணர்ந்த அர்ஜுனன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தார். அப்போதும் கிருஷ்ணர் வந்து தடுத்தார்.தான் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று கூறிய அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஒரு யோசனை கூறினார். தர்மசாஸ்திரத்தின் படி எவர் ஒருவர் தன்னை தானே அனைவரின் முன்னும் புகழ்ந்து கொள்கிறானோ அவன் அவனையே கொல்வதற்கு சமம் என்று கூறினார். எனவே அர்ஜுனனை அனைவரின் முன்னிலையிலும் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும்படி கூறினார். அர்ஜுனனும் அவ்வாறே செய்தார். இவ்வாறாக இருவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது.

MOST READ: வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்

ஏன் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார்?

ஏன் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார்?

அர்ஜுனன் பரிபூரணமானவராக இல்லாத போதிலும் தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ளும் குணம் அவரை மற்றவர்களை விட மேலானவராக மாற்றியது. கிருஷ்ணரின் வார்த்தை எப்பொழுதும் சரியாகத்தான் இருக்கும் என்பது அர்ஜுனனின் நம்பிக்கை. தான் அறிந்த தர்மம் கிருஷ்ணரின் வாக்குதான் என்று நினைத்தார் அர்ஜுனன், அதனாலேயே வாழ்க்கை முழுவதும் கிருஷ்ணரின் வழிகாட்டுதலை பெற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why did Krishna choose Arjuna instead of Karna,Drona or Bhishma

Read to know why did Krishna choose Arjuna instead of Karna,Drona or Bhishma.
Story first published: Thursday, July 18, 2019, 15:43 [IST]
Desktop Bottom Promotion