Latest Updates
-
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்!
கிரகண சமயத்தில் கோயிலை ஏன் மூடுகிறார்கள்?... கிரகணம் கடவுளையே பாதிக்குமா?
சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது, கோயில்கள் ஏன் மூடப்படுகின்றன. அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி இந்த பகுதியில் விவாதிக்கிறோம்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற கிரகணங்கள் நிகழும் காலத்தில் ஹிந்து ஆலயங்கள் மூடியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கிரகணத்தின்போது ஆலயங்கள் மூடப்படுவதற்கான காரணங்கள் எவை தெரியுமா?
கிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வாகும். விண்ணில் உள்ள கோள் ஒன்று, அதற்கும் பார்ப்பவர்க்கும் இடையே வேறொரு பொருள் அல்லது கோள் வருவதால் தற்காலிகமாக மறைக்கப்படுவதே கிரகணம்.

சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும்
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் உண்டாகிறது. சூரிய கிரகணம் அமாவாசை அன்று நிகழும். சந்திரன், பூமிக்கு பின்னாக கடந்து செல்லும்போது சந்திர கிரகணம் உண்டாகிறது. அது பௌர்ணமி அன்று நிகழும். இப்படி சந்திர கிரகணம், சூரிய கிரகணம் இரண்டும் வெவ்வேறு வானியல் நிகழ்வுகளாகும். இந்த கிரகணங்களின்போது ஆலயங்கள் மூடியிருக்கவேண்டும் என்பது ஹிந்து விதிகளுள் ஒன்றாகும்.

ராகு, கேது என்பவை என்ன?
சூரியனின் வானியல் தோற்றப்பாதையும், சந்திரனின் வானியல் பாதையும் இரண்டு இடங்களில் சந்திக்கின்றன. இந்த சந்திப்புப் புள்ளிகளே ராகு மற்றும் கேது என்று அழைக்கப்படுகின்றன. பலர், இவற்றையும் கிரகங்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். வடக்கு மற்றும் தெற்கு சந்திர முகடு என்று இவை அழைக்கப்படுகின்றன. இந்த முகடுகள் வழியாக சந்திரன் பயணிக்கும்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே செல்கிறது; அப்போது கிரகணம் உண்டாகிறது.

கோயில் கட்டுமான விதிகள்
ஹிந்து ஆலயங்கள் கட்டப்படும்போது சில விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும். ஆலயத்திற்கு வரும் பக்தர், மன சமாதானத்தையும் சாந்தியையும் அங்கு உணரவேண்டும்; தெய்வத்தின் சந்நிதியாகிய ஆலயத்தில் தான் இருப்பதாக உணரக்கூடிய சூழல் உருவாகும்படியாய் கட்டுமானம் இருக்க வேண்டும்.

சூட்சும சக்தி
மனித சரீரமானது சூட்சும சக்தியால் உருவாக்கப்பட்டது என்று ஆன்மீகம் கூறுகிறது. ஜீவனின் சாரம்தான் இந்த சூட்சும சக்தி. அதன் மூலம்தான் ஆவி அல்லது ஆன்மா உருவாக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் இந்த சூட்சும சக்தியை உணர வேண்டும். ஆலயத்திற்குள் வைக்கப்பட்டுள்ள விக்கிரங்களிலிருந்து இந்த சக்தி வெளிப்படும்.

கோயில் சிலைகள்
விக்கிரங்கள், சூட்சும சக்தியின் வடிவில் தெய்வ தன்மைகள் கொண்டிருக்கின்றன என்பது ஐதீகம். சூட்சும சக்தியை விக்கிரகங்களுள் செலுத்துவதற்காகவே மந்திரங்களை ஓதி அவற்றை கோயிலுக்குள் ஸ்தாபிக்கின்றனர். இதன் காரணமாகவே கோயில் விக்கிரகங்கள் தெய்வீகத்தையும் திருப்தியையும் வெளிப்படுத்துகின்றன.கோயிலுக்கு வரும் பக்தர் அதை உணர்கிறார்.

கிரகணத்தின்போது என்ன நிகழ்கிறது?
கிரகணங்களின்போது வானியல் கோள்களான சூரியன், சந்திரன் இவற்றின் சக்தி, எதிர்மறை சக்தியாக மாறுகிறது. ரஜோ குணம், தமோ குணம் ஆகியவை சாத்வீக குணத்தின் அலைகள் மேல் எதிர்மறையாய் செயல்பட்டு சாத்வீக அலைகள் புனித ஸ்தலங்களை சென்றடையாமல் தடுத்து விடுகிறது. எதிர்மறை சக்திகள், ஆலயங்களுக்குள் உள்ள விக்கிரகங்கள் மேல் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி உண்டாக்கிவிடக்கூடும்.

எதிர்மறை சக்திகள்
இதன் மூலம் விக்கிரகங்களுக்குள் உள்ள சூட்சும சக்தி பாதிப்படைந்து அதன் ஆற்றல் குறைவுபடக்கூடும். கிரகண காலங்களில் இதுபோல் நடந்து விடக்கூடாது என்பதற்காக விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருக்கும் பூஜை அறை பூட்டப்படும். துளசி இலைகளால் விக்கிரகங்களை மூடிவைப்பதும் உண்டு. துளசி இலைகள் எதிர்மறை சக்திகளை உறிஞ்சிக் கொண்டு, தமக்குள் வைக்கப்பட்டுள்ள விக்கிரகங்களை அவை அண்டிடாமல் பாதுகாக்கும்.



Click it and Unblock the Notifications
