Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இராமரின் மீது தனக்கிருக்கும் பக்தியை நிரூபிக்க அனுமன் செய்த அதிர்ச்சிகரமான செயல் என்ன தெரியுமா?
இராமரின் மீதான அனுமனின் பக்திக்கு எல்லைகளே கிடையாது என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் ஒருமுறை சீதைக்கு இராமரின் மீதான அனுமனின் பக்தி மீது சந்தேகம் எழுந்தது.
சீதையை இராவணனிடம் இருந்து மீட்க இராமர் நடத்திய மாபெரும் போரே இராமாயணம் ஆகும். ஆனால் அந்த போர் மட்டுமே இராமாயணமும் இல்லை, போருடன் இராமாயணம் முடிந்து விடவும் இல்லை. ஏனெனில் போருக்கு பிறகும் பல முக்கியமான நிகழ்ச்சிகள் உள்ளது. இராமரும், சீதையும் அயோத்தியும் திரும்பிய பிறகுதான் அவர்கள் வாழ்க்கையில் பல முக்கிய சம்பவங்கள் நடந்தது.

இராமாயணத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர் அனுமன். இராமரின் மீதான அனுமனின் பக்திக்கு எல்லைகளே கிடையாது என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் ஒருமுறை சீதைக்கு இராமரின் மீதான அனுமனின் பக்தி மீது சந்தேகம் எழுந்தது. சீதையின் சந்தேகத்தை தீர்க்க அனுமன் என்ன செய்தார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முடிசூட்டு விழா
இராமரும், சீதையும் அயோத்தி திரும்பிய பிறகு அயோத்தியின் மன்னராக முடிசூட்டி கொண்டார். இராமரின் முடிசூட்டு விழா மிகவும் கோலாகலமாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற்றது. இராமருக்காக அனுமன் செய்த சேவைகளுக்காக சீதை அனுமனுக்கு விலைமதிப்பில்லாத முத்துக்களால் செய்யப்பட்ட மாலையை அனுமனுக்கு பரிசளித்தார்.

அனுமனுக்கு விருப்பமில்லை
சீதை அன்போடு கொடுத்த அந்த முத்து மாலையை அனுமன் மிகுந்த மரியாதையோடு பெற்றுக்கொண்டார். அதன்பின் அதனை தன் பற்களால் கடித்து உடைக்க ஆரம்பித்தார். அனுமனின் இந்த செயலை பார்த்து சீதையும், அவையில் இருந்த அமைச்சர்களும், மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

சீதையின் கேள்வி
அனுமனின் செயலை பார்த்த சீதை " மாவீரனே! நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏன் இந்த விலைமதிப்பில்லாத முத்து மாலையை உடைக்கிறீர்கள்? " என்று கேட்டார்.

அனுமனின் பதில்
அனுமன் சீதையிடம், " எனது மதிப்பிற்குரிய தாயே! இது மிகவும் விலை மதிப்புள்ள மாலையாகும். இது மிகவும் புனிதமான கையில் இருந்து தனக்கு கிடைத்துள்ளது. ஆனால் இந்த விலைமதிப்பில்லாத முத்தில் என் பிரபு இராமர் இருக்கிறாரா என்பதை பார்க்கிறேன். அவர் இல்லாத எந்த பொருளையும் நான் வைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் எந்த முத்துகளிலும் அவர் இல்லை.

சீதையின் கேள்வி
அனுமனின் பதிலை கேட்ட சீதை " அப்பொழுது உனக்குள் இராமர் இருக்கிறாரா? " என்று கேள்விக்கேட்டார். அதற்கு அனுமனின் பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

அனுமன் செய்த காரியம்
சீதையின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அனுமன் சற்றும் யோசிக்காமல் தன் மார்பை பிளந்து இராமருக்கு, சீதைக்கும் காட்டினார். அனுமனின் இதயத்தில் சீதையும், இராமரும் ஒன்றாக இருந்தை அனைவரும் பார்த்தனர். இதனை பார்த்த அவையில் இருந்த அனைவரும் அதிர்ச்சோ அடைந்தனர்.

இராமரின் அருள்
அனுமனின் இந்த செயலை பார்த்து இராமர் அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைந்தார். அரியணையில் இருந்து கீழே இறங்கி வந்த இராமர் அனுமனை கட்டித்தழுவி கொண்டார். அதற்கு பிறகு இராமரின் மரணம் வரை அனுமன் இராமருடனே இருந்து அவருக்கு சேவை செய்தார்.

இந்த நிகழ்வின் முக்கியத்துவம்
இந்த சம்பவத்தின் மூலம் அனுமன் இராமருக்கு உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் சேவை செய்தார் என்று அனைவரும் புரிந்து கொண்டனர். அனுமனை போல இராமருக்கு சேவை செய்யவும், அன்பு பாராட்டவும் யாருமில்லை என்பதை இந்த உலகம் புரிந்து கொண்டது.

அனைவருக்குமான செய்தி
இந்த சம்பவம் அனைவருக்கும் உணர்த்தும் செய்தி என்னவெனில், கடவுளிடம் இருந்து நாம் அவரின் அருளை மட்டும் எதிர்பார்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் கடவுள் நமக்கு வேண்டியவற்றை வழங்குவார். கடவுளின் மீது ஒருவர் எப்படி பக்தி வைக்க வேண்டும் என்பதற்கு அனுமன்தான் சிறந்த உதாரணம். எல்லா மனிதர்களுக்கும் அனுமன் ஒரு எடுத்துக்காட்டு ஆவார்.



Click it and Unblock the Notifications