Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க... நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்
உங்களுடைய விரல் அமைப்பு மற்றும் அதன்படி உங்களுடைய ஆளுமை எப்படிப்பட்டது என்பது பற்றி விளக்கமாக விவரிக்கப்படுகிறது. அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இந்த கட்டுரை.
நம்முடைய உடல் அங்கங்களை வைத்து நம்முடைய ஆளுமையைக் கணிப்பதும் கூட ஒருவகையான ஜோதிடம். ஆளுமைத் திறனை நம்முடைய விரல் மற்றும் நகங்களை மட்டுமே வைத்தும்கூட நம்முடைய பழக்க வழக்கம், குணநலன்கள் மற்றும் அனைத்து விதமான விஷயங்களையும் கணிக்க முடியும்.

உங்கடைய விரல்களின் அமைப்பு நீங்கள் எப்பேர்ப்பட்ட ஆளாக இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதோ உங்களுக்காக...

விரல்கள்
ஒவ்வொருவருடைய விரல்களும் வெவ்வேறு மாதிரியாகத் தான் இருக்கும். சிலருக்கு சிறியதாகவும், பெரியதாகவும் மெலிதாக, திக்கான என வெவ்வேறு வடிவத்தில் தான் இருக்கும். அப்படி நீண்டிருக்கும் விரல்களின் நகங்களை ஒட்டி இருக்கின்ற நுனிப் பகுதியில் வெவ்வேறு வகையில் வளைந்திருக்கும். அந்த வளைவு நெளிவை வைத்தும் உங்களுடைய ஆளுமையைக் கண்டுபிடிக்க முடியும். அப்படி எந்தெந்த மாதிரி வளைவுகள் இருக்கிறதோ அதைப் பொறுத்து உங்களுடைய ஆளுமைத் ிறன் வேறுபடும்.
பொதுவாக விரலின் நுனிப்பகுதி வளைவுகள் மூன்று வகைகளில் வெவ்வேறு வடிவங்களாக இருக்கும்.

முதல் வகை
உங்களுடைய சொந்த விஷயங்களை நீங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். உங்களுடைய உண்மையான முகத்தைப் மற்றவர்கள் புரிந்து கொள்வதும் தெரிந்து கொள்வதும் மிகக் கடினமான விஷயம். ஏனென்றால் உங்களுடைய விஷயங்களை அடுத்தவர்களுக்குத் தெரியாமல் உங்களைச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கி வைத்திருப்பீர்கள்.
நீங்கள் விலங்குகளை நேசிக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். மிகவும் அன்பானவராகவும் உணர்ச்சிகரமான ஆளாகவும் இருப்பீர்கள். மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கின்ற உஙகளுடைய நகைச்சுவை உணர்வு பற்றியும் உங்களுடைய இறக்க குணம் பற்றியும் உங்களுடைய நண்பர்கள் நன்கு அறிவார்கள்.

இரண்டாம் வகை
இந்த இரண்டாம் வகை விரல் அமைப்பு உடையவர்கள் மிகவும் நேர்மையான ஆளாக இருப்பார்கள். அபாண்டமான விஷயங்களுக்கு ஒருபோதும் துணை போக மாட்டார்கள். மிக எளிதாகக் காதல் வயப்படுகிறவராக இருப்பீர்கள். அதனாலேயே யார் உங்களைக் காயப்படுத்துகிறாரோ அவர் மீது அதிகமாக காதல் கொண்டிருப்பீர்கள். அதனாலேயே உங்களுடைய தன்னம்பிக்கையை இழக்க காரணமாகிவிடும்.
உங்களை யாராவது துன்பப்படுத்தினால் அதை நினைத்து தேவையில்லாமல் கவலைப்பட மாட்டீர்கள். எப்போதும் வெற்றியை நோக்கி உழைத்துக் கொண்டே இருப்பீர்கள்.

மூன்றாம் வகை
உங்களுடைய உணர்ச்சிகளோடு விளையாடக் கூடியவர்கள் உங்களைச் சுற்றி இருப்பீர்கள். அவர்களைச் சமாளித்து மேலே வருவீர்கள். நீங்கள் ஒரு திறந்த புத்தகம். ஆனால் உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்குளாக இருப்பீர்கள். விலங்குகளுடனும் மற்றவர்களுடனும் எளிதாக நெருங்குகிறவர்களாக இருப்பீர்கள். எல்லோருடனும் சாந்தமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களை யார் நன்றாக கவனித்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்களும் நன்றாகப் பார்த்துக் கொள்வீர்கள்.



Click it and Unblock the Notifications