ஆஞ்சநேயருக்கு சிவபெருமான் வழங்கிய மகிமை வாய்ந்த வரம் என்ன தெரியுமா?

அனுமன் அனைத்து கடவுள்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர். சிவபெருமானின் அவதாரமாகவே இவர் கருதப்பட்டாலும் இவருக்கு சிவபெருமான் ஒரு மகிமை வாய்ந்த வரத்தையும் கொடுத்தார்.

இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள்களில் ஒருவர் அனுமன் ஆவார். இராமாயணத்தில் தஇவரின் பங்கானது அளப்பரியதாகும். பூமியில் பிறந்திருந்தாலும் இவர் கடவுளாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டதற்கான காரணம் அவரின் சிறப்புகளும் அவர் வாங்கிய சிரஞ்சீவி வரமும்தான்.

What boon Lord Shiva gave to Hanuman

அனுமன் அனைத்து கடவுள்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர். சிவபெருமானின் அவதாரமாகவே இவர் கருதப்பட்டாலும் இவருக்கு சிவபெருமான் ஒரு மகிமை வாய்ந்த வரத்தையும் கொடுத்தார். அனைத்து கடவுள்களும் ஏன் அனுமனை ஆசீர்வதித்தார்கள்,சிவபெருமான் அவருக்கு வழங்கிய வரம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனுமன்

அனுமன்

இராமரின் மிகச்சிறந்த பக்தரான அனுமன் அறிவு, பலம் மற்றும் ஞானத்தின் கடவுளாக கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின் படி அரக்கர்களை அழிக்கவும், பூமியில் தர்மத்தை நிலைநாட்டவும் சிவபெருமான்தான் ஆஞ்சநேயராக அவதரித்ததாக கூறப்படுகிறது.

அனுமனின் குழந்தைப்பருவம்

அனுமனின் குழந்தைப்பருவம்

அனுமன் சிவபெருமானின் அவதாரமாகவே கருதப்படுகிறார். இந்த அவதாரத்தில் சிவபெருமான் குரங்கு உருவத்தில் பிறந்தார். அனுமன் குழந்தை பருவம் முதலே அதிக சக்திசாலியாக இதை போதிலும் ஒரு சம்பவம் அவரை அனைவரையும் விட சிறந்தவராக மாற்றியது. இதன் மூலம் கிடைத்த சக்தியின் விளைவாகத்தான் அனுமன் ஈடு இணையில்லாத பலசாலியாக மாறினார்.

கடவுள்களின் ஆசீர்வாதம்

கடவுள்களின் ஆசீர்வாதம்

அனுமன் குழந்தை பருவத்தில் இருக்கும்போது சூரியனை அழகிய பழம் என்று நினைத்து அதனை பறிக்க முயல இதனால் ஆத்திரமுற்ற இந்திரன் அனுமனை தன்னுடைய வஜ்ராயுதத்தால் தாக்கினார். இதனால் அனுமன் மூர்ச்சையுற்றார், இதனால் கோபமுற்ற வாயுபகவான் தனது அனைத்து செயல்பாடுகளை நிறுத்தி கொண்டார். அந்த தருணத்தில் பிரம்மா வந்து அனுமனின் தலையை தடவி அவரை எழுப்பினார், அதன்பின் அனைத்து கடவுள்களும் வந்தது அவரை ஆசீர்வதித்தனர், இதனால் அனுமன் மாபெரும் பலம் பெற்றார்.

சூரியபகவானின் ஆசீர்வாதம்

சூரியபகவானின் ஆசீர்வாதம்

தன்னால்தான் அனுமன் தாக்கப்பட்டதாக உணர்ந்த சூரியதேவர் தனது புனிதன்மையின் ஒரு பகுதியை அனுமனுக்கு வழங்கினார் மேலும் அவரை தன்னுடைய சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு அனைத்து சாஸ்திரங்களையும் பயிற்றுவித்தார்.

எமதர்மனின் ஆசீர்வாதம்

எமதர்மனின் ஆசீர்வாதம்

எமதர்மன் எந்த நோயும் தாக்காத எப்பொழுதும் ஆரோக்கியம் குறையாத வரத்தை அனுமனுக்கு வழங்கினார். குபேரர் எந்த போரிலும் எவராலும் தோற்கடிக்க முடியாது என்னும் வரத்தை அனுமனுக்கு வழங்கினார்.

சிவபெருமானின் வரம்

சிவபெருமானின் வரம்

சிவபெருமான் அனுமனுக்கு வழங்கிய வரம்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டதனால்தான் அனுமன் மூர்ச்சையுற்றார். எனவே அனுமனை எவராலும் கொல்ல முடியாது கடவுளின் ஆயுதங்கள் நினைத்தால் கூட கொல்ல முடியாது என்னும் வரத்தை அனுமனுக்கு வழங்கினார் ஈசன்.

 இந்திரன்

இந்திரன்

ஒரு பாலகனை வஜ்ராயுதத்தால் தாக்கியதால் வெட்கமுற்ற இந்திர தேவன் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மரணமே இல்லாத வாழ்க்கையை அனுமனுக்கு இந்திரன் வரமாக வழங்கினார். இதனால்தான் அனுமன் சிரஞ்சீவியாக மாறினார்.

பிரம்மாவின் வரம்

பிரம்மாவின் வரம்

பிரம்மதேவர் எவருடைய உருவத்தையும் எளிதில் எடுத்துக்கொள்ளும் வரத்தை அனுமனுக்கு வழங்கினார். அவரால் எங்கும் செல்ல முடியும் எனவும் அவரின் தேவையை பொறுத்து அவர் செல்லும் வேகம் இருக்கும் என்றும் வரம் கொடுத்தார். அதனாலதான் சஞ்சீவினி மூலிகைக்காக செல்லும்போது அனுமன் காற்றை விட வேகமாக சென்றார்.

போருக்கு பின்

போருக்கு பின்

இராமாயண போரின் வெற்றிக்கு பிறகு அனுமன் சுக்ரீவனின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். சுக்ரீவனுக்கு, இராமருக்கு இடையில் நட்பு ஏற்பட காரணமாக இருந்ததே அனுமன்தான். சுக்ரீவனும் இராமருக்காக போரில் ஈடுபட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, May 14, 2019, 15:25 [IST]
Desktop Bottom Promotion