Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
30 வருஷமா குழந்தைய கடத்தின அமுதா நர்ஸ் இல்லையாமே?... ஆயம்மாவாம்
பிறந்த கைக்குழந்தையை விற்பனை செய்யும் ஓய்வுபெற்ற செவிலியர். அதுபற்றி இந்த கட்டரையில் மிக விளக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான பதிவு தான் இது.
இப்படியெல்லாம் கூட மனுஷங்களால யோசிக்க முடியுமா என்று நம்மை மூக்குமேல விரல வெக்கிற அளவுக்கு நாட்டுல நாளுக்கு நாள் பல பிரச்சினைகள் வன்முறை, கடத்தல், திருட்டு, கொலை என்று விநோதமாக நடந்து கொண்டே இருக்கின்றன.

கொழும்பு குண்டுவெடிப்பின் பக்கம் எல்லோருடைய பார்வையும் இருந்தபோது, திடீரென அதில் ஒருசில தினங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர் ஒரு குழந்தை கடத்தல் சம்பவத்தில் தான் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அப்படி என்ன தான் செய்தார் அவர்? பார்க்கலாம் வாங்க.

அமுதா நர்ஸ்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அமுதா என்பவர் நர்ஸாகப் பணிபுரிந்து வந்தார். அவருடைய சொந்த ஊரும் அதுதான். சில வருடங்களுக்கு முன்பாக அவரே விருப்ப ஓய்வு கேட்டு ஓய்வு பெற்றிருக்கிறார். இப்போதுதான் தெரிந்திருக்கிறது அவர் விருப்ப ஓய்வு வாங்கியதற்கான காரணம். இதுல ஒரு டுவிஸ்ட் என்ன தெரியுமா? இந்த அமுதா நர்ஸ்சும் இல்லையாம். ஆஸ்பத்திரியில ஆயம்மாவா வேலை பார்த்திருக்காங்க. அங்க கிடைச்ச அனுபவத்துல பிரசவம்லாம் பார்க்க கத்துக்கிட்டு வெளியில நர்ஸ்னு சொல்லிக்கிட்டு இருந்திருக்காங்க.

குழந்தை கடத்தல்
விருப்ப ஓய்வு பெற்ற அமுதா ஆரம்பித்த பிசினஸ் என்ன தெரியுமா? குழந்தை கடத்தல். அம். நர்ஸ் வேலை செய்கின்ற பொழுது, குழந்தைகளைத் திருடும் சில நபர்களோடு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அது சிறிய அளவில் அநாதைகளாக விடப்படும் குழந்தைகள், வறுமையால் குப்பைத் தொட்டியில் போடப்படும் குழந்தைகள் என எடுத்து, அதை குழந்தையில்லாமல் இருப்பவர்களைத் தேடிப் பிடித்து காசுக்கு விற்று வந்திருக்கிறார்.

பெரிய நெட்வொர்க்
இதில் லட்சக்கணக்கான பணம் பார்த்த அமுதா விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு வேலையை விட்டுவிட்டார். சிறிய அளவில் செய்து வந்த சின்ன சின்ன கடத்தல் பெரிய நெட்வொர்க்காக வளர்ந்திருக்கிறது. குழந்தை கடத்துகின்ற கும்பல்களுடன் பழக்கம் ஏற்பட்டு, அது வெளி மாநிலங்கள் வரை பெரிய நெட்வொர்க்காக வளர்ந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

வெளிமாநில தொடர்பு
வெளிமாநிலங்களில் அநடத நெட்வொர்க்கை சேர்ந்தவர்களுக்கு அழகான கொழுகொழு குழந்தைகள் கடத்தி வரப்டுகின்றன. புதிதாக குழந்தை வந்து சேர்ந்ததும், குழந்தையில்லாமல் குழந்தை வேண்டுமென்று யார் மூலமாவது அமுதாவை தெரிந்து கொண்டு வருபவர்களுக்கு, அமுதா ஆண் குழந்தை, பெண் குழந்தை, எடை, குழந்தையின் நிறம் ஆகியவற்றைப் பொறுத்து பேரம்பேசி முடித்துக் கொடுக்கிறார்.

எந்த குழந்தைக்கு?
பெண் குழந்தையை விட ஆண் குழந்தைக்கு கொஞ்சம் கிராக்கி அதிகம். கருப்பாக இருந்தால் ஒரு விலை. கலராக கொழுகொழுவென்று இருக்கும் குழந்தைக்கு ஒரு விலை. குழந்தை இல்லாமல் ஆண், பெண் என எந்த குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்பவர்களுக்கு ஒரு விலையும் இதுவே கொழுகொழுவென்று கலராக அழகாக குழந்தை வேண்டும் என்று கேட்டால் அதற்கேற்ப விலை பேசி, ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

எவ்வளவு விலை?
குழந்தைக்கு அட்வான்ஸ் வாங்கப்பட்ட பின் அந்த குழந்தையை தன்னுடைய வீட்டிலேயே அமுதா வைத்திருக்கிறார். முழு தொகையும் ரெடி பண்ணி கொண்டு வந்து பிறகு, விலை பேசியவர்கள் வந்து குழந்தையை வாங்கிச் செல்கிறார்கள். சுமாரான நிறத்தில் இருக்கும் பெண் குழந்தைக்கு 2.5 லட்சம் முதல் கொஞ்சம் கலராக இருக்கும் பெண் குழந்தையாக இருந்தால் 3.2 லட்சம் வரைக்கும் விற்கப்படுகிறது. இதுவே சுமாரான கலரில் ஆண் குழந்தையாக இருந்தால் 3 லட்சத்திலிருந்து கொழுகொழுவென்று கலராக இருக்கும் குழந்தைக்கு கிட்டதட்ட 4.5 லட்சம் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடியோ வைரல்
குழந்தையை கேட்டு வரும் சிலருடன் அமுதா தன்னைப் பற்றியும் தான் செய்யும் இந்த தொழிலைப் பற்றியும் எந்த மாதிரி குழந்தைக்கு எவ்வளவு பணம், எப்படி குழந்தையை கொண்டு வருகிறோம் என விளக்கம் கொடுக்கும் வகையிலான சில விஷயங்களைப் போனில் பேசும்படியான ஆடியோக்கள் சமூன வலைத்தளங்களில் படு வைரலாக சில நாட்களாகப் பரவி வருகின்றன. அதன் பின் காவல்துறையின் நடிவடிக்கையால் இந்த குழந்தை கடத்தல் நெட்வொர்க்கைக் கண்டுபிடிக்கும் வகையில் 12 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோ அப்பா இப்பவே உங்களுக்கும் கண்ண கட்டுதா?

விரிவடையும் விசாரணை
ஈரோட்டில் உள்ள நர்ஸ் ஒருவரும் கொல்லிமலையில் அரசு ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் அமுதாவிற்கும் தொடர்பு இருந்திருக்கிறது. சமீபத்தில் மதுரையில் 2, திருச்சி, நாமக்கல்லில் தலா ஒரு குழந்தை சமீபத்தில் விற்கப்பட்டிருக்கிறது. கொல்லிமலையில் உள்ள மலைவாழ் மக்களிடம் மட்டும் 10 குழந்தைகளை விற்பனைக்காக வாங்கியிருக்கிறார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அமுதா நர்ஸ் என்றதும் பொய்யாகியிருக்கிறது. அவர் ஆயாவாகவே இருந்திருக்கிறார். வெளியில் நர்ஸ் என்று சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். ராசிபுரம சுற்றியுள்ள பகுதியில் மட்டும் ஏராளமாக குழந்தைகளுக்கு இப்படி கடத்தி தவறான பிறப்புச் சான்றிதழ்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அமுதா.



Click it and Unblock the Notifications