Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
துரியோதனன் போரில் தோற்க காரணம் இந்த 4 குணங்கள் அவனிடம் இல்லாததுதான் என்கிறார் விதுரர்...!
அறிவு மற்றும் நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய விதுரர் எழுதிய நூல்தான் விதுர நீதி ஆகும்.
மஹாபாரத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர் விதுரர் ஆவார். திருதராஷ்டிரன் மற்றும் பாண்டுவின் சகோதரனாக பிறந்த இவர் அஸ்தினாபுர அரண்மனையின் தலைமை அமைச்சராக பதவி வகித்தார்.

அறிவு, வீரம், ஞானம் என அனைத்தும் இருந்தாலும் அரண்மனை பணிப்பெண்ணுக்கு பிறந்த காரணத்தால் இவர் வாழ்க்கை முழுவதும் பல அவமானங்களுக்கு ஆளானார். இவரை போற்றி பாதுகாத்து உரிய மரியாதையை வழங்கியது கங்கை மைந்தர் பீஷ்மர் மட்டுமே. அறிவு மற்றும் நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய விதுரர் எழுதிய நூல்தான் விதுர நீதி ஆகும். அந்த நூலில் வாழ்க்கையில் சிறந்தவராக மாற இவர் கூறிய வழிகள் என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

விதுரரின் புத்திகூர்மை
மஹாபாரதத்தில் சகுனிக்கு இணையான புத்திக்கூர்மை வாய்நத இவர் துரியோதனனால் குரு வம்சம் அழியும் என்பதை முன்கூட்டியே மன்னர் திருதராஷ்டிரனிடம் கூறினார். அவர்தான் மகன் மீது இருந்த பாசத்தால் விதுரரின் பேச்சை கேட்கவில்லை. இறுதி காலங்களில் திருதராஷ்டிரனுக்கு துணையாக இருந்தது விதுரர்தான். நடக்கப்போவதை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் கொண்டவராய் விதுரர் விளங்கினார்.

விதுர நீதி
விதுர நீதியில் குறிப்பிட்டுள்ள படி அவர் கூறியுள்ள யோசனைகளின் படி எந்த பிரச்சினைக்கும் எளிதில் தீர்வு காணலாம். விதுரரின் வாக்குப்படி இந்த நான்கு முடிவுகள் உங்களை எந்தவொரு வேலையிலும் நிபுணராகுவதுடன் உங்களை வெற்றிப்பாதைக்கும் அழைத்து செல்லும். மகாபாரத போரில் துரியோதனன் தோல்வியடைய காரணம் அவனிடம் இந்த குணங்கள் இல்லாததுதான் என்கிறார் விதுரர்.

உறுதியாக முடிவெடுத்த பின் வேலையை தொடங்கவும்
விதுரர் கூறியுள்ளபடி எந்தவொரு செயலிலும் வெற்றி பெறுவதற்கு முன்னரும், எந்த செயலை செய்வதற்கு தயாராகும் முன்னரும் அதனை பற்றி திட்டம் தீட்ட வேண்டியது அவசியமாகும். ஒரு செயலில் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்று நம்பினால் மட்டுமே அந்த செயலில் இறங்க வேண்டும்.

எந்த காரணத்திற்காகவும் வேலையை நிறுத்தக்கூடாது
காரியத்தில் இறங்கிய பிறகு எந்தவொரு காரணத்திற்காகவும் அதில் இருந்து பின்வாங்கக்கூடாது. ஏனெனில் இதுதான் உங்கள் வெற்றிக்கான மிகப்பெரும் தடையாக இருக்கிறது. எனவே எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி, எந்த நேரமாக இருந்தாலும் சரி இறங்கிய காரியத்தை முடிக்காமல் பின்வாங்கக்கூடாது.

நேரத்தின் மதிப்பை உணரவேண்டும்
நேரத்தை வீணடிப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. எனவே நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால்எந்தவொரு செயலிலும் உங்களின் நேரத்தை வீணடிக்காதீர்கள். மேலே மேலே முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும்.

மனக்கட்டுப்பாடு
தங்களுடைய மனதையும், ஆசைகளையும் கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. வாழ்க்கையில் நினைத்ததை அடைய அர்ப்பணிப்பு மிகவும் அவசியமானதாகும். வேலைக்கு நடுவில் வேறு எந்த ஆசைக்கும் இடம் கொடுக்கக்கூடாது. அப்போதுதான் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும். இந்த நான்கு குணங்களும் இல்லாததால்தான் துரியோதனன் போரில் தோல்வியுற்றதாக விதுரர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications