Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சாஸ்திரங்களின் படி தம்பதியினர் இந்த இடங்களில் கலவியில் ஈடுபடுவது மிகப்பெரிய பாவமாகும்...!
பண்டைய காலங்களில் இந்த புனித பிணைப்பை நிறுவுவதற்கு சில நேரங்களையும், விதிமுறைகளையும் நிறுவியிருக்கிறார்கள்.
காதல் பற்றியும் பாலியல் உறவுகள் பற்றியும் நமது வேத காலங்களில் முதலே குறிப்புகள் உள்ளது. குறிப்பாக இந்து மதத்தில் இதற்கான வேர்களை கடவுள்களிடமே செல்கிறது. மனிதகுலத்தை விரிவுப்படுத்துவதில் இருந்து அவர்களுக்கிடையே மனித நேயத்தை வளர்ப்பது வரை அனைத்தும் காதலுடன் தொடர்புடையது.

முறையான வழிகளில் பாலியல் உறவை வைத்துக்கொண்டால் அது ஒருவருக்கு வாழ்க்கையில் மேன்மையை வழங்கும். பண்டைய காலங்களில் இந்த புனித பிணைப்பை நிறுவுவதற்கு சில நேரங்களையும், விதிமுறைகளையும் நிறுவியிருக்கிறார்கள். சாஸ்திரங்களின் படி எந்தெந்த இடங்களில் தம்பதியினர் கலவியில் ஈடுபடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நெருப்பு முன்னிலையில்
மதரீதியாக வளர்க்கப்பட்ட நெருப்பிற்கு முன்னால் தம்பதிகள் ஒருபோதும் புணர்தலில் ஈடுபடக்கூடாது. இது அவர்களுக்கு கடவுளின் சாபத்தை பெற்றுத்தரும்.

மரியாதைக்குரிய நபர்
வயதில் மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்பது அனைத்து சாஸ்திரங்களும் கூறும் ஒன்று. அதன்படி வயதானவர்கள் அருகில் இருக்கும்போதோ அல்லது அவர்கள் அறியும்படியோ ஒருபோதும் உறவில் ஈடுபடக்கூடாது.

நோயாளிகள் அருகில்
நோய்வாய்ப்பட்டவர்கள் அருகில் இருக்கும்போது அந்த இடத்திற்கு அருகில் உறவில் ஈடுபடக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. மரணத்தின் வாசலில் இருக்கும் ஒருவருடன் ஒரே கூரையை பகிர்ந்து கொள்ளும்போது அங்கே உறவில் ஈடுபடக்கூடாது என்று கூறப்படுகிறது.

குழந்தையின் முன்னிலையில்
சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி குழந்தைகளின் முன்னிலையிலோ அல்லது குழந்தைகள் இருக்கும் அறையிலோ ஒருபோதும் கலவியில் ஈடுபடக்கூடாது. இது மிகப்பெரிய பாவமாகும்.

ஆற்றுப்புறம்
நதி அல்லது நீரோடை அருகே ஒருபோதும் உறவில் ஈடுபடக்கூடாது. தண்ணீர் ஓடும் சத்தம் தம்பதிகளின் காதில் விழாத தூரத்தில் தம்பதிகள் உறவில் ஈடுபடக்கூடாது. இது மிகவும் புனிதமற்ற செயலாக கருதப்படுகிறது.

கோவில் அல்லது கோவிலுக்கு முன்
கோவிலின் வளாகத்தினுள் அல்லது அதற்கு முன்னால் எந்த வீடும் கட்டப்படக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக படுக்கையறை கோவிலை நோக்கி இருக்கக்கூடாது. கோவிலுக்கு அருகில் இருக்கும் இடத்தில் உறவில் ஈடுபடக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

மற்றொருவரின் வீடு
ஒருவரின் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் போது அங்கு அவர்கள் நல்லுறவை வளர்க்க வேண்டும் மாறாக உறவில் ஈடுபடவதை தவிர்க்க வேண்டும்.

இறந்த உடலுக்கு அருகில்
சாஸ்திரங்களின் படி ஒருவர் இறந்து அவர்கள் ஒரே கூரைக்கு கீழே இருந்தால் அவர்கள் உங்களுக்கு வேண்டியவர்களாக இல்லாவிட்டாலும் தம்பதியினர் கலவியில் ஈடுபடக்கூடாது.



Click it and Unblock the Notifications