Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா?
பண்டைய இந்திய வேதங்களின் படி மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிகரமாக வாழ்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது.
பண்டைய இந்திய வேதங்களின் படி மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிகரமாக வாழ்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. இந்த விதிமுறைகள் பிரம்மாவாரதபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.

இந்த விதிமுறைகள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய உதவும். நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்ததராக இருந்தாலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாவிடில் உங்கள் செல்வமும், புகழும் விரைவில் அழிந்து விடும். இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் ஏழ்மை ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.

மனதில் கொள்ள வேண்டிய தேதிகள்
இந்து நாள்காட்டியின் படி ஆண்கள் அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி மற்றும் அஷ்டமி ஆகிய நாட்களில் எண்ணெய் குளியல் எடுத்து கொள்ளக்கூடாது, அதேசமயம் அசைவ உணவும் சாப்பிடக்கூடாது. சாஸ்திரங்களின் படி இது பாவச்செயலாகும்.

தரையில் வைக்கக்கூடாத பொருட்கள்
தெய்வங்களின் சிலைகள் மற்றும் படங்கள், விளக்குகள், சிவலிங்கம், தங்கம், சங்கு போன்ற பொருட்களை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது. ஒருவேளை இவற்றை தரையில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் தரையில் ஒரு துணியை விரித்து அதன்மீது வைத்து வழிபடவும்.

உடலுறவு
பகல் பொழுது மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரம் பிரார்த்தனைக்கு உரிய நேரமாகும். இந்த நேரத்தில் உறவில் ஈடுபடுவது லக்ஷ்மி தேவியை அவமதிக்கும் செயலாகும். மேலும் வேதங்களில் கூறியுள்ள படி இந்த நேரத்தில் உறவில் ஈடுபடுவது ஆண் மற்றும் பெண்களுக்கு கண் மற்றும் காது தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.

ஆண்கள் நினைவிற்கொள்ள வேண்டியது
ஆண்கள் எப்பொழுதும் முன்பின் தெரியாத பெண்கள் மீது காமத்தில் ஈடுபடக்கூடாது. இது அவர்களின் அழிவிற்கு வழிவகுக்கும்.

பெண்கள் நினைவிற்கொள்ள வேண்டியது
கணவனை வெறுக்கும் பெண்கள், அவர்களை தவறான முறையில் நடத்துபவர்கள், காரணமே இல்லாமல் அவர்கள் மீது கோபப்படுவார்கள், அவர்கள் பேச்சை மதிக்காத பெண்கள் அடுத்த பிறவியில் காகமாக பிறப்பார்கள் என்று வேதங்கள் கூறுகிறது.

விலகி இருக்க வேண்டிய நபர்கள்
சுகாதாரம் இல்லாதவர்களிடம் இருந்தும், கடுமையான குணம் கொண்டவர்களிடம் இருந்தும் எப்பொழுதும் விலகி இருக்க வேண்டும். இத்தகையவர்கள் உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதோடு ஏழ்மை மற்றும் அழிவையும் ஏற்படுத்தும்.

சூரிய அஸ்தமனம்
சூரியனும், சந்திரனும் மறையும் போது கண்டிப்பாக பார்க்கக்கூடாது. இது புனிதமற்றதாக கருதப்டுவதுடன் கண் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

இவர்களை அவமதிக்கக்கூடாது
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் வயதில் மூத்தவர்களை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. இவர்களை அவமதிப்பவர்கள் தனகுபேரரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

வாக்குறுதி அளித்த நாளில் தானம் செய்யவும்
ஒரு குறிப்பிட்ட நாளில் தானம் செய்ய முடிவெடுத்தல் கண்டிப்பாக அந்த நாளில் தானம் செய்துவிட வேண்டும். தாமதமாக தானம் செய்வதால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.

பாதத்தை சுத்தம் செய்யவும்
வீட்டிற்குள் நுழையும் முன் எப்பொழுதும் பாதத்தை சுத்தமாக கழுவிட வேண்டும், இது உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன் லக்ஷ்மியின் அருளையும் உங்களுக்கு பெற்றுத்தரும்.

வெண்கல பாத்திரம்
வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வெண்கல பாத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் குடிக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது. இது உங்கள் தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications