Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்
கணவன்-மனைவிக்கு இடையே 'நெருக்கம்' குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..!
கணவன், மனைவி இருவரும் அவர்களுக்குள் இருக்கும் உறவை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினாலும் அவர்களின் புறசூழல்கள் அதனை தடுத்துவிடும்.
திருணம் ஆன புதிதில் அனைத்து தம்பதியினருமே மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவர்களின் மணவாழ்க்கை அவர்களுக்கு போரடித்துவிடும். இதை ஏற்கமறுத்தாலும் இதுதான் உண்மை. காதல் குறைந்து அவரவர் தங்கள் சொந்த வேலைகளை பார்க்க தொடங்கி விடுவார்கள். திருமண வாழ்க்கையின் அடிப்படையே ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலும், நம்பிக்கையும்தான்.

தம்பதிகளுக்கிடையே காதல் என்றும் குறையாமல் இருக்க தாம்பத்யம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். கணவன், மனைவி இருவரும் அவர்களுக்குள் இருக்கும் உறவை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினாலும் அவர்களின் புறசூழல்கள் அதனை தடுத்துவிடும். கணவன், மனைவிக்கிடையே விரிசல் ஏற்பட அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்கள் கூட காரணமாக இருக்கலாம். தம்பதிகளுக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையாமல் இருக்க சாஸ்திரங்களின் படி என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

குறிப்பு 1
கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் அன்பும், நெருக்கமும் எப்போதும் குறையாமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால் இறந்த உங்கள் முன்னோர்களின் படங்களையோ அல்லது கடவுள்களின் படங்களையோ உங்கள் படுக்கையறையில் மாட்டி வைப்பதை தவிர்க்கவும். இவை உங்களுக்குள் எழும் காதல் அதிர்வுகளை விரட்டக்கூடியவை ஆகும்.

குறிப்பு 2
தம்பதியினர் எப்பொழுதும் அவர்களின் படுக்கையை அறையின் மத்தியில் போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தவறான பழக்கம் பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது. எப்போதும் படுக்கையை இரண்டு சுவர்களின் மீது படும்படி மட்டுமே போடவேண்டும்.

குறிப்பு 3
படுக்கையின் தலைப்பகுதியானது எப்பொழுதும் அறையின் தெற்கு புறம் பார்த்துதான் இருக்க வேண்டும். இது உங்கள் துணையின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதுடன் நல்ல தூக்கத்தையும் வழங்குகிறது. வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக தலைவைத்து தூங்குவது தம்பதிகளுக்கு ஒருவர் மீது ஒருவருக்கு எரிச்சலை ஏற்படுத்துவத்துவதுடன் தேவையில்லாத பிரச்சினைகளையும் உருவாக்கும்.

குறிப்பு 4
இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி டிரஸ்ஸிங் டேபிள் எப்பொழுதும் உங்கள் படுக்கையறைக்குள் இருக்கக்கூடாது. ஏனெனில் இது உங்கள் அறைக்குள் தொடர்ந்து எதிர்மறை சக்திகளை பரவச்செய்யும்.

குறிப்பு 5
தம்பதியினர் ஒன்றாக படுக்கும் அறையை எப்பொழுதும் வெளிர் நிறங்களில் பெயிண்ட் அடிக்கக்கூடாது. குறிப்பாக வெள்ளை நிறத்தில் அடிக்கக்கூடாது. பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் பெயிண்ட் அடிப்பது கணவன், மனைவிக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.

குறிப்பு 6
படுக்கையறைக்குள் கண்ணாடி வைப்பதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. அப்படியே வைத்தாலும் அவர்களின் உருவம் தூங்கும்போது கண்ணாடியில் பிரதிபலிக்காத வண்ணம் பார்த்துசரியான திசையில் வைக்க வேண்டும்.

குறிப்பு 7
தேவையில்லாத சாமான்களிடம் இருந்து தள்ளியே இருங்கள் உங்கள் அறையை அலங்கரிக்க தேவையில்லாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்கள் அறைக்குள் இருக்கும் இடைஞ்சல் உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை சிதைக்கக்கூடியதாகும். இதனால் உங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் எழும்.

குறிப்பு 8
சாஸ்திரங்களின் படி தம்பதிகள் ஒன்றாக படுக்கும் கட்டில் உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. மரக்கட்டில் தவிர மற்ற அனைத்து உலோகக்கட்டில்களும் தமபதிகளுக்குள் சண்டையை ஏற்படுத்தக்கூடும். இதனால் நிரந்தர பிரிவு கூட ஏற்படலாம்.

குறிப்பு 9
வீட்டில் இருக்கும் ஜன்னல்களும் சரி, கதவுகளும் சரி எப்பொழுதும் இரட்டைப்படையில்தான் இருக்க வேண்டும். மேலும் அவை உட்புறமாக திறக்க கூடியதாக இருக்க வேண்டுமே தவிர வெளிப்புறம் திறப்பதாக இருக்கக்கூடாது. இது உங்கள் இல்லத்திற்குள் நேர்மறை சக்திகளை அழைத்துவரும்.

குறிப்பு 10
உங்கள் உறவில் ஏற்படும் விரிசல்களை தவிர்க்க வீட்டில் ஒரு சாமி படத்திற்கு மேல் வைக்காமல் இருப்பதில் உறுதியாக இருங்கள். அப்படியே வைத்தாலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருக்கும்படி வைக்கவேகூடாது. அவ்வாறு வைப்பது தமபதிகளுக்கிடையே நிரந்தர பிரிவை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications