Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
Rahu Moon Conjunction On 23 September 2026: ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதால் மற்ற கிரகங்களுடன் அடிக்கடி ஒன்றிணைந்து பல வகையான சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகி, மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுவது தான் ராகு. இந்த ராகு சனி பகவானுக்கு அடுத்தப்படியாக ஒரு ராசியில் நீண்ட காலமாக பயணிக்கக்கூடியவர். அதாவது ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருக்கும்.

தற்போது ராகு கும்ப ராசியில் உள்ளது. இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதால், மற்ற கிரகங்களுடன் அடிக்கடி சேர்ந்து யோகங்களை உருவாக்கும். அப்படி சந்திரன் செப்டம்பர் 23 ஆம் தேதி கும்ப ராசியில் நுழையவுள்ளார். இதனால் இந்த ராசியில் உள்ள ராகுவுடன் சேர்ந்து அசுப யோகமான கிரகண யோகத்தை உருவாக்கவுள்ளார்.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் சில ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இப்போது செப்டம்பர் 23-ல் ராகு சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அடுத்த 2 நாட்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செலவுகள் திடீரென்று எதிர்பாராத அளவில் அதிகரிக்கும். நற்பெயர் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. தொழில் செய்து வருபவர்கள் தங்கள் தொழிலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் எந்த வேலையையும் கவனமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வேலையை இழக்கும் சூழல் கூட ஏற்படலாம். பண விஷயங்களில் அசால்ட்டாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்மூடித்தனமாக யாரையும் நம்புவதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் பண பரிவர்த்தனைகளின் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், பண விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். செய்யும் தொழிலில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிரச்சனை தலைக்கு மேல் சென்று, பெரிய இழப்பை சந்திக்க வைத்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
