Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த ராசிக்காரர் பெண்களை பொய் கூறி ஏமாற்றுவதில் பலே கில்லாடியாம்... எச்சரிக்கையாக இருங்கள்...!
பொய் கூறுவது உங்களின் நிம்மதியை மட்டும் கெடுப்பதில்லை மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பையும் குறைக்கும்.
பொய் கூறுவது என்பது அமைதியான நம் வாழ்க்கைக்கும் நாமே வைத்து கொள்ளும் சூனியமாகும். ஏனெனில் பொய் எப்பொழுதும் தனியாக வராது. ஒரு சாதாரண விஷயத்தை மறைக்க நாம் கூறும் பொய் அதை மறைக்க பல எண்ணற்ற பொய்களை கூற வேண்டிய நிலைக்கு நம்மை தள்ளிவிடும். பொய் எப்பொழுதுமே நிரந்தர மகிழ்ச்சியை தராது.

பொய் கூறுவது உங்களின் நிம்மதியை மட்டும் கெடுப்பதில்லை மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பையும் குறைக்கும். பொய் கூறியது கண்டுபிடிக்கப்படும் போது அது உங்களுக்கு நிறைய அவமானங்களை ஏற்படுத்தும். சிலரோ இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொய் கூறுவதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். இந்த பொய் கூறும் பழக்கம் அவர்களின் ராசியால் கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகம் பொய் பேசுவார்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்கார்கள் எப்பொழுதும் தாங்கள் கூறியதை உடனுக்குடன் மாற்றிக் கொள்பவராக இருப்பார்கள். முதலில் ஒரு விஷயத்தை கூறுவார்கள், பின்னர் அது தவறென்று தெரிந்து விட்டால் உடனடியாக அதை மாற்றிக்கூறுவார்கள். இவர்களுக்கு பொய் கூறுவது மிகவும் பிடித்தமான ஒன்றாகும், ஆனால் அவை மென்மையான பொய்யாகவே இருக்கும், இது யாரையும் காயப்படுத்தும் பொய்யாக இருக்காது. இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது அவர்கள் தங்களை காத்துக்கொள்ள என்ன பொய் வேண்டுமென்றாலும் கூறுவார்கள்.

கடகம்
இவர்கள் தங்களை பெருமைப்படுத்தி கொள்வதற்காக பொய் கூற விரும்புவார்கள். தங்கள் பாலியல் திறமை பற்றியும், அந்தரங்க வாழ்க்கை பற்றியும் இவர்கள் எப்பொழுதும் உண்மையை கூறமாட்டார்கள். எப்பொழுதும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தவே இவர்கள் விரும்புவார்கள், இவர்களின் பொய்கள் மற்றவர்களை காயப்படுத்தாது, ஆனால் இவர்கள் கூறும் பொய்கள் இவர்களை மற்றவர்கள் முன் தவறானவர்களாக காட்டும். பொய் சொல்வதற்கு இவர்கள் எப்பொழுதும் தயங்கவே மாட்டார்கள்.

சிம்மம்
இவர்கள் அதிக நாடகமாட கூடியவர்கள். இவர்கள் எப்பொழுதும் தாம் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்று எண்ணி கொள்வார்கள் அதனால் தன்னை மற்றவர்கள் எப்போதும் பாராட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, இவர்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொய்யாகத்தான் இருக்கும். இவர்கள் பெண்கள் விஷயத்தில் பொய் கூறுவதில் வல்லவர்கள். தாங்கள் நினைத்ததை அடையும் வரை அதற்காக எத்தனை பொய் வேண்டுமென்றாலும் கூறுவார்கள். ஆனால் இவர்களின் பெயரை இவர்களே கெடுத்து கொள்வதை இவர்களே உணரமாட்டார்கள்.

துலாம்
இவர்களிடம் பேசுவதற்கு முன் நன்கு யோசித்து கொள்ளுங்கள் ஏனெனில் இவர்கள் பொய் கூறுவதில் அனைவரையும் மிஞ்சியவர்கள். அவர்களின் பொழுதுபோக்கு பற்றி அதிகம் பொய் கூறுவார்கள், மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது என்பதற்காக இவர்கள் அதிகம் பொய் கூறுவார்கள். ஆனால் அவர்களே விரும்பாவிட்டாலும் சிலசமயம் இவர்கள் மற்றவர்களை காயப்படுத்தி விடுவார்கள். குழந்தைகளிடம் கூட இவர்கள் பொய் சொல்ல தயங்க மாட்டார்கள். இதனாலேயே இவர்களுடன் பழக மற்றவர்கள் தயங்குவார்கள். ரகசியத்தை பாதுகாப்பதிலும் இவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்வார்கள்.

மகரம்
தனக்கு பிடிக்காத விஷயங்களிடம் இருந்து தப்பிக்க இவர்கள் எப்பொழுதும் பொய்யை ஆயுதமாக பயன்படுத்துவார்கள். அவர்கள் உங்களுடன் வர விரும்பவில்லை என்றால் ஏதாவது பொய் கூறி அதிலிருந்து தப்பித்து கொள்வார்கள். தினமும் எத்தனை பொய் கூறவேண்டும் என்று கணக்கு வைத்து கொள்ளும் பழக்கம் கூட இவர்களுக்கு இருக்கலாம். மற்றவர்களை பொய் கூறி காயப்படுத்த இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்களுக்கான சொந்த உலகத்தில் வாழ்வார்கள், மற்றவர்கள் பொய் என நினைப்பது இவர்களுக்கு பொய்யாகவே தெரியாது. நேரடியாக எதிரில் இருப்பவர்களின் கண்ணை பார்த்து துளியும் பயமில்லாமல் பொய் சொல்ல கூடியவர்கள் இவர்கள். உண்மையான குற்றசாட்டை கூட இவர்கள் தயங்காமல் பொய் மூலம் மறுப்பார்கள். இவர்கள் பொய் எப்போதாவது கூறினாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications