For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாஞ்சாலியின் கற்பு மீது பீமனுக்கு சந்தேகம் ஏற்பட காரணம் என்ன தெரியுமா?

மகாபாரதம் தர்மத்தை நிலைநாட்டுவதாக இருந்தாலும் அதில் பல முரண்கள் இருக்கத்தான் செய்தது. அதில் பலரும் ஒப்புக்கொள்ளாத ஒரு விஷயம் திரௌபதி பாண்டவர்கள் ஐவரையும் திருமணம் செய்து கொண்டதுதான்.

|

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். அஸ்தினாபுரத்தின் அரியணைக்காக நடத்தப்பட்ட குருஷேத்திர போரில் கிருஷ்ணரின் உதவியுடன் கௌரவர்களை வீழ்த்தி பாண்டவர்கள் வெற்றிபெற்றனர். இந்த போரில் தர்மம் நிலைநாட்ட பட்டதுடன் பூமியின் மக்கள் தொகையும் சமநிலைபடுத்தப்பட்டது.

The secret of Draupadi and Pandavas relationship

மகாபாரதம் தர்மத்தை நிலைநாட்டுவதாக இருந்தாலும் அதில் பல முரண்கள் இருக்கத்தான் செய்தது. அதில் பலரும் ஒப்புக்கொள்ளாத ஒரு விஷயம் திரௌபதி பாண்டவர்கள் ஐவரையும் திருமணம் செய்து கொண்டதுதான். ஏனெனில் ஐந்து கணவர்களை திருமணம் செய்த பெண்ணை எப்படி பவித்திரமானவள் என்று கூறமுடியும் என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால் அதற்கு பின் பெரிய ரகசியம் ஒன்று உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திரௌபதியின் திருமணம்

திரௌபதியின் திருமணம்

பாஞ்சால மன்னன் துருபதன் நடத்திய வேள்வியில் இருந்து பிறந்தவர்கள்தான் திரௌபதியும், திருஷ்டத்துய்மனும் ஆவர். திரௌபதியின் திருமணத்திற்காக நடத்தப்பட்ட சுயம்வரத்தில் அனைத்து நாட்டு மன்னர்களும் தோற்ற நிலையில் அங்கு முனிவர் வேடத்தில் இருந்த அர்ஜுனன் அந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று திரௌபதியை அடைந்தான்.

ஐந்து கணவர்கள்

ஐந்து கணவர்கள்

திரௌபதியும், பாண்டவர்களும் அவர்களின் குடிசைக்கு சென்றபோது நாங்கள் கொண்டு வந்த தானத்தை பாருங்கள் என்று குந்தியிடம் கூறியபோது அவர் தானம் என்னவென்றே தெரியாமல் அதனை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று விபரீதமாக கூறிவிட்டார். அதனை கேட்டு பாண்டவர்களும், திரௌபதியும் அதிர்ச்சியடைந்தனர்.

திரௌபதியின் முன்ஜென்மம்

திரௌபதியின் முன்ஜென்மம்

அப்போது அங்கு வந்த வேதவியாசர் திரௌபதியின் முன்ஜென்மத்தை பற்றி கூறினார். திரௌபதி தன்னுடைய முன்ஜென்மத்தில் சிறந்த கணவர் வேண்டுமென்று சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். ஐந்து சிறந்த குணங்கள் இருக்கும் கணவருக்கு பதிலாக ஐந்து கணவர்கள் வேண்டுமென்று வரம் கேட்டுவிட்டார். சிவபெருமானும் தவறுதலாக அவர் கேட்ட வரத்தை வாங்கிவிட்டார். அதனால்தான் இந்த ஜென்மத்தில் இவ்வாறு நிகழ்ந்ததாக வேத வியாசர் கூறினார்.

MOST READ: தூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...!

விதிமுறைகள்

விதிமுறைகள்

ஐந்து கணவர்களுடன் வாழ்வது என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பதால் வேதவியாசர் அவர்களுக்குள் சில விதிமுறைகளை விதித்து கொள்ளும்படி கூறினார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவர் திரௌபதியிடன் வாழ வேண்டுமென்று கூறினார். மேலும் ஒருவரின் ஆண்டு காலத்தில் இருக்கும்போது அவர்கள் இருவரும் தனிமையில் இருக்கும்போது மற்றவர்கள் எக்காரணம் கொண்டும் அவர்களை பார்க்கக்கூடாது என்றும் விதிமுறை நிறுவப்பட்டது.

அர்ஜுனன் வனவாசம்

அர்ஜுனன் வனவாசம்

யுதிஷ்டிரன் பாண்டவர்களில் மூத்தவராக இருந்ததால் முதல் வருடம் அவருடன் திரௌபதி இருக்கும்படி கூறப்பட்டது. ஒருமுறை திரௌபதியும், யுதிஷ்டிரனும் தனியறையில் இருந்தபோது நாகர்களுடன் போரிட தனது காண்டீவத்தை எடுக்க அர்ஜுனன் அவர்கள் அறைக்குள் செல்லும்படி நேர்ந்து விட்டது. அதனால் அர்ஜுனன் ஒரு வருடம் வனவாசம் செல்ல நேரிட்டது.

பீமனின் சந்தேகம்

பீமனின் சந்தேகம்

இந்த விதிமுறைகளில் பீமனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஆண்டுக்கு ஒரு கணவருடன் இருக்கும் போது திரௌபதி எப்படி பவித்ரமானவளாக இருக்க முடியுமென்று அவனுக்குள் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. பீமனின் மனதிற்குள் இருந்த சந்தேகத்தை கிருஷ்ணர் நன்கு அறிந்தார்.

MOST READ: உங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...!

கிருஷ்ணரின் யோசனை

கிருஷ்ணரின் யோசனை

பீமன் இந்த சந்தேகத்தை கிருஷ்ணரிடம் கேட்டபோது அவர் சிரித்து கொண்டே ஒரு யோசனையை கூறினார். ஒரு ஆண்டின் இறுதி நாளன்று இரவு திரௌபதி எங்கு செல்கிறாள் என்று பின்னாடியே சென்று அவள் என்ன செய்கிறாள் என்று பார் என்று கூறினார்.

பீமனின் அதிர்ச்சி

பீமனின் அதிர்ச்சி

கிருஷ்ணர் கூறிய படியே பீமன் ஒரு ஆண்டின் இறுதி நாளன்று இரவு திரௌபதி தனியாக வனத்திற்குள் செல்வதை பார்த்தார். திரௌபதியை பின் தொடர்ந்து பீமனும் வனத்திற்குள் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி பீமனை அதிர்ச்சியில் உறையவைத்தது.

திரௌபதியின் செயல்

திரௌபதியின் செயல்

வனத்திற்குள் திரௌபதி நெருப்பு குண்டம் எழுப்பி அதில் தீக்குளிக்க தயாரானார். இதனை கண்டு பீமன் அதிர்ச்சியுற்றார். ஆனால் திரௌபதி நெருப்பிற்குள் புகுந்து எந்தவித சேதாரமும் இன்றி வெளியே வந்தார். அவரின் உடல் முழுவதும் பிரகாசமாக இருந்தது.

MOST READ: சீதை இறுதியாக பூமிக்குள் சென்ற இடம் இப்போது இந்தியாவில் எங்கிருக்கிறது தெரியுமா?

கிருஷ்ணரின் அறிவுரை

கிருஷ்ணரின் அறிவுரை

இந்த செயலுக்கான காரணம் என்னவென்று கிருஷ்ணரிடம்பீமன் கேட்டபோது இதுதான் திரௌபதி ஒவ்வொரு ஆண்டும் செய்யும் செயல்தான். திரௌபதியின் பிறப்பு மகத்துவம் வாய்ந்தது. பவித்திரத்தின் உச்சமான திரௌபதி ஒவ்வொரு ஆண்டு முடியும்போதும் திரௌபதி நெருப்பில் புகுந்து தன்னை புனிதப்படுத்தி கொள்கிறாள். இந்த ஒவ்வொரு ஆண்டும் அவள் மறுபிறவி எடுப்பது போல தன்னை புனிதப்படுத்தி கொண்டு தன் கற்பொழுக்கத்தை பாதுகாத்து கொள்கிறாள். திரௌபதியின் கற்பை அனைத்தையும் விட புனிதமானதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The secret of Draupadi and her relationship with the Pandavas

Do you know the secrets of Draupadi and how draupadi managed five husbands?
Story first published: Friday, June 21, 2019, 12:32 [IST]
Desktop Bottom Promotion