Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
நீங்க அடுத்த ஜென்மத்துல ஆணா பிறப்பீங்களா இல்ல பொண்ணா பிறப்பீங்களானு தெரிஞ்சிக்கிறது எப்படி?
மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பது இன்றுவரை ரகசியமாகவே உள்ளது, ஆனால் அனைத்து வேதங்களின் படியும், மத நம்பிக்கைகளின் படியும் மரணத்திற்கு பிறகும் கண்டிப்பாக வாழ்க்கை இருக்கிறது.
மறுஜென்மம் பற்றிய விவாதங்களும், ஆராய்ச்சிகளும் பல நூற்றாண்டுகளாகவே நடந்து வருகிறது. மறுஜென்மம் பற்றியோ அல்லது மறுபிறப்பு பற்றியோ விஞ்ஞானரீதியாக இதுவரை எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மறுஜென்மம் மீதான நம்பிக்கை பெரும்பாலான மக்களிடம் உள்ளது.

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பது இன்றுவரை ரகசியமாகவே உள்ளது, ஆனால் அனைத்து வேதங்களின் படியும், மத நம்பிக்கைகளின் படியும் மரணத்திற்கு பிறகும் கண்டிப்பாக வாழ்க்கை இருக்கிறது. உடல் அழிகிறதே தவிர ஆன்மா ஒருபோதும் அழியாது இது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த பதிவில் மறுஜென்மம் பற்றிய ரகசியங்களை பற்றி பார்க்கலாம்.

புதிய உடல்
ஒருவர் இறந்த பிறகு உடனே அவரது ஆன்மா வேறு உடலை தேடிப்போகாது, ஒரு புது உடல் பூமியில் பிறக்கும் வரை காத்திருக்கும். ஒருவேளை இயற்கைக்கு முரணான மரணமாக இருந்தாலோ அல்லது தற்கொலையாக இருந்தாலோ அவர்களின் ஆன்மா சில கேள்விகளுக்கு விடைதேடி அலைந்து கொண்டே இருக்கும்.

கிருஷ்ணர்
பகவத்கீதையில் கிருஷ்ணர் மரணம் என்பது முடிவல்ல என்று கூறியுள்ளார். அவர் கூறியுள்ளபடி இந்த உலகம் முழுவதும் மறுபிறப்பு, மறுஜென்மம் என்னும் வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். இந்த பயணம் ஒருபோதும் முடியாது என்று கூறியுள்ளார்.

ஆழமான ஆசைகள்
எதிர்பாராத விதமாக இறந்து போனவருக்கு மனதில் ஆழமான ஆசைகள் இருந்தால் அவர்கள் நிச்சயம் மீண்டும் மறுபிறப்பு எடுப்பார்கள் என்று கூறுகிறார். இந்த பூமியில் அவர்கள் மீண்டும் பிறந்து தன்னுடைய ஆசைகளை நிச்சயம் நிறைவேற்றி கொள்வார்கள்.

மறுபிறவி
பகவத் கீதையில் கூறியுள்ளபடி நீங்கள் மறுபிறவியில் என்னவாக பிறக்க வேண்டும் என்பதை உங்களால் முடிவு செய்ய இயலாது. உண்மையில் நீங்கள் ஒரு விஷயத்திற்காக தீவிரமாக ஆசைப்பட்டு, உழைத்து அது கிடைக்கவில்லை என்றால் அடுத்த பிறவியில் அதனை அடையலாம் என்று கூறுகிறது.

மனிதன் மற்றும் மிருகங்கள்
நீங்கள் நாயாக பிறந்திருக்கலாம் என்று ஆசைப்பட்டால் அடுத்த பிறவியில் நாயாக பிறப்பீர்கள், அதேபோலத்தான் மற்ற மிருகங்களும். மனிதர்களை பொறுத்த வரையில் கூட நீங்கள் எந்த பாலினத்தின் மீது அதிக ஆசைப்படுகிறீர்களோ அதுவாகவே அடுத்த பிறவியில் பிறக்க வாய்ப்புள்ளது.

நிறைவேறாத ஆசைகள்
முன்னரே கூறியுள்ள படி நிறைவேறாத ஆசைகளுடன் இறப்பவர்கள் ஆவியாக மறுஉலகத்தில் சுற்றிவருவார்கள். முக்தி அடையும் வரை அவர்கள் இப்படித்தான் இருந்தாக வேண்டும். இறந்த உடலை எரிக்கும் போது அதன் தலையில் பலமாக அடிப்பார்கள். இதன்மூலம் அந்த ஆன்மா இந்த ஜென்ம நியாபகங்களை மறந்துவிட்டு புதுவாழ்வை தொடங்கும் என்று சில கலாச்சாரங்களில் நம்பப்படுகிறது.

ஏழு ஜென்மங்கள்
மனிதர்களிடையே நிலவும் நம்பிக்கையின் படி ஒவ்வொரு ஆன்மாவிற்கும் மொத்தம் ஏழு ஜென்மம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஜென்மமும் முடிந்த பிறகு அந்த ஆன்மா வேறு உடலில் தன் பயணத்தை தொடங்கும் என்று கூறப்படுகிறது.ஆன்மாவின் எழு ஜென்மம் முடிந்த பிறகு தானாக அது உலகத்தில் இருந்து விடுவிக்கப்படும்.

கர்மா
நமது அடுத்த ஜென்மத்தை நிர்ணயிப்பது நமது கர்மா என்று அழைக்கப்படும் பாவபுண்ணியங்கள்தான். ஒருவேளை நமது கர்மா நல்லதாக இருந்தால் நம்முடைய அடுத்த ஜென்மம் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கும். அதுவே கெட்ட கர்மாவாக இருந்தால் நமது அடுத்த ஜென்ம வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும்.

உடனடியாக நடக்காது
ஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்த பிறகு உடனடியாக அடுத்த உடலுக்குள் நுழையாது. அதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த காலக்கட்டம் நமது கர்மாவை பொறுத்துதான் தீர்மானிக்கப்படும்.

நினைவுகள்
என்னதான் நம்முடைய நினைவுகள் மறைக்கப்படுமே தவிர அழிக்கப்படாது. அவை நம்முடைய ஆன்மாவுடன் கலந்தவை. வெகுசிலருக்கு அந்த பழைய நினைவுகள் திரும்பலாம். ஆனால் அவை விரைவில் மீண்டும் மறந்துவிடும்.

பாடங்கள்
மனிதர்கள் மட்டுமல்ல ஆன்மாக்களும் பாடங்களை கற்றுக்கொள்ளும். ஒரு வாழ்க்கை முடியும்போது அந்த ஆன்மா முடிந்த வாழ்க்கையிலிருந்து சில பாடங்களை கற்றுக்கொள்ளும். இந்த பாடங்களை அடுத்த ஜென்மத்தில் பயன்படுத்தி கொள்ளும். இந்த பிறவியில் செய்த தவறுகளை அடுத்த பிறவியில் ஆன்மா மீண்டும் செய்யாது.

பாலினங்கள்
நாம் ஆணாகவும், பெண்ணாகவும் சமமான எண்ணிக்கையில் மீண்டும் மீண்டும் பிறப்போம் என்று கூறப்படுகிறது. இதுதான் இந்த பிரபஞ்சத்தின் சமநிலையை பராமரிக்கிறது. ஆன்மாவிற்கு எந்த பாலினமும் கிடையாது. இந்த பிறவியில் நீங்கள் எந்த பாலினமாக இருக்கிறீர்களோ அடுத்த பிறவியில் அதற்கு எதிர்பாலினமாக பிறக்க அதிக வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications