Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சீதை இறுதியாக பூமிக்குள் சென்ற இடம் இப்போது இந்தியாவில் எங்கிருக்கிறது தெரியுமா?
சீதை பூமிக்குள் சென்றது நமக்கு தெரியும், ஆனால் அவர் பூமிக்குள் சென்ற இடம் எங்கிருக்கிறது என்று நமக்கு தெறிந்திருக்க வாய்ப்பில்லை.
இராமாயணத்தின் முடிவு நாம் அனைவரும் அறிந்ததுதான். சீதை தன்னுடைய தாயான பூமாதேவியுடன் சேர்ந்து பூமிக்கு அடியில் சென்றுவிட்டார் என்று தெரிந்ததுதான். சீதை பூமிக்குள் சென்றது நமக்கு தெரியும், ஆனால் அவர் பூமிக்குள் சென்ற இடம் எங்கிருக்கிறது என்று நமக்கு தெறிந்திருக்க வாய்ப்பில்லை.

அயோத்தியியில் இருந்து சீதை இராமருடன் திரும்பி வந்த பிறகு சில ஆண்டுகளுக்குள் அவர் வனத்திற்குள் சென்றுவிட்டார். சீதையின் புதல்வர்களும் இந்த வனத்திற்குள்தான் பிறந்தனர். சீதை ஏன் பூமிக்குள் சென்றார் அவர் சென்ற இடம் இந்தியாவில் இப்போது எங்கு இருக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சீதாமர்ஹி, உத்திரப்பிரதேசம்
சீதை பூமிக்குள் சென்ற இடத்திற்கு சீதாமர்ஹி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இடம் அலகாபாத்திற்கும், வாரணாசிக்கும் இடையில் உள்ளது. இந்த இடம் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இது புனிதயாத்திரை செல்லும் இடமாகவும் வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் இருக்கிறது.

சீதை அக்னி பரீட்சைக்கு மறுத்த இடம்
வனத்தில் இருந்த வால்மீகி ஆஸ்ரமத்தில் சீதை அக்னி பரிட்சைக்கு மறுத்து தனது விருப்பப்படி பூமிக்குள் சென்ற இடம் இதுதான். இங்குதான் சீதைக்கு கோவில் எழுப்பப்பட்டது.

இராமாயணம்
இராமாயணத்தை இயற்றியவர் வால்மீஹிதான். இராமர் அயோத்தியின் மன்னராக முடிசூட்டிய பிறகு மாபெரும் யாகமான அசுவமேத யாகத்தை செய்தார். அதற்கான குதிரை அவிழ்த்துவிடப்பட்டது. அந்த குதிரை இறுதியில் வால்மீகியின் ஆசிரமத்தில் வந்து நின்றது.

இராமர் சீதையின் மகன்கள்
தற்போதிருக்கும் பதாகி மாவட்டத்தில் இருக்கும் பரிபூர் கிராமத்தில் இருந்தது வால்மீகி ஆசிரமம். அப்போது அங்கு வந்த சீதையின் மகன்கள் இருவரும் அசுவமேத குதிரையை கைப்பற்றினர்.

மாபெரும் யுத்தம்
இராமரின் புதல்வர்கள் லவா மற்றும் குசா அவரை போலவே மாவீரர்களாக இருந்தார்கள். இராமரின் படையில் இருந்த பரதன், சத்ருக்கனன், சுக்ரீவன் போன்ற மாவீரர்கள் அனைவரும் அவர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

இராமரின் வருகை
தனது மாவீரர்கள் அனைவரும் தோற்ற செய்து கேட்டு அதிர்ச்சியுற்ற அயோத்தியின் மன்னரான இராமர் தனது புதல்வர்கள் என்று தெரியாமலேயே அவர்களுடன் போரிட கிளம்பினார். இப்படித்தான் இராமர் தன் மகன்களை முதன் முதலில் சந்தித்தார்.

யார் அவர்கள்?
வனத்திற்குள் இருக்கும் இந்த இரண்டு பாலகன்கள் யாரென்று எவருக்கும் தெரியவில்லை. அவர்கள் இருவரும் அயோத்தியின் இளவரசர்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

சீதை மற்றும் இராமரின் சந்திப்பு
தனது மகன்களுக்கு எதிராக போரிட வந்தது யார் என்று பார்க்க சீதை போர் நடந்த இடத்திற்ககு வந்தார். தனது மகன்களுக்கு எதிராக போர் புரிய வந்தது அவர்களின் தந்தைதான் என அறிந்த சீதை அவர்களை மன்னிக்கும்படி இராமரிடம் கெஞ்சினார்.

மீண்டும் அக்னி பரீட்சை
சீதை இவ்வளவு ஆண்டுகள் வால்மீகி ஆசிரமத்தில்தான் தங்கியிருந்தார் என்பதையும், அவர்கள் இருவரும் தங்கள் மகன்கள்தான் என்பதையும் இராமர் உணர்ந்தார். சீதையை மீண்டும் தன்னுடன் அரண்மனைக்கு வரும்படி கூறினார் இராமர். ஆனால் அதற்கு முன் மீண்டும் அக்னி பரீட்சை செய்ய வேண்டும் என்று கூறினார்.

சீதையின் மறுப்பு
இதனை கேட்ட சீதை அதற்கு மறுப்பு தெரிவித்தார். இலங்கையில் இருந்து திரும்பி வந்தவுடன் சீதை அயோத்தி மக்களின் திருப்திக்காக ஒருமுறை அக்னி பரீட்சை செய்தார். எனவே மீண்டும் என்னால் அதனை செய்ய முடியாது என்றும் தனது தயார் பூமியிடம் தனக்கு அடைக்கலம் தரும் படியும் கூறினார்.

பூமாதேவி
தனது மகள் சீதையை பூமாதேவி அன்போடு தன் மடியில் சாய்த்துக்கொண்டார். இந்த இடம் அதன் அழகு மற்றும் அமைதிக்காக மட்டுமின்றி சீதையின் புனிதத்திற்கும் அடையாளமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications