For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மட்டன் அரைக்கிற மெஷின்ல் தலையை உள்ளே விட்ட இளைஞர்... பரிதாபமா உயிர்போயிடுச்சு... (விடியோ பாருங்க)

|

ஒரு நபருக்கு இறப்பு எப்போது ஏற்படும் என்பது தெரியாது. இன்று இருப்பவர்கள் நாளை இருப்பதில்லை, எல்லோரும் ஒரு நாள் இறந்து போகக் கூடும். சில இறப்புகள் இயற்கையாக இருந்தாலும் சில வழக்குகளில் இறப்பு என்பது மிகுத்த வலி தரக் கூடிய விஷயமாக இருக்கும். சிலர் தூங்கும்போதே இறப்பைத் தழுவுவார்கள்.

Teenager loses his life after getting stuck in a meat grinder

ஆனால் ஒரு சிலரின் இறப்பு நம் அனைவரின் தூக்கத்தையும் தொலைக்கும் விதமாக இருக்கும். இதுவும் அப்படி ஒரு வழக்கு தான். வேலைக்கு சேர்ந்து இரண்டு வாரங்கள் மட்டுமே ஆன ஒரு இளம் வயது ஆண்மகன் வலி மிகுந்த இறப்பைத் தழுவி இருக்கிறான். அவனை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைப் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெஷினில் மாட்டிய இளைஞன்

மெஷினில் மாட்டிய இளைஞன்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சாசேஜ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த ஒரு வாலிபன், இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டு உயிர் துறந்தான். இந்த விபத்து பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

ஜோமர் ஜுன்கோ என்ற 18 வயது வாலிபன் இலோயலோ நகரில் உள்ள ஒரு சாசேஜ் தொழிற்சாலையில் இரண்டு வாரத்திற்கு முன் பணியில் சேர்ந்தான். சேர்ந்த இரண்டே வாரத்தில் இந்த பரிதாபகரமான முடிவு அவனுக்கு நிகழ்ந்துள்ளது. இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் அவனுடைய வலது கரம் மாட்டிக் கொண்டதால் சுழற்சியில் அவனுடைய உடலும் சேர்த்து இழுத்துக் கொள்ளப்பட்டது.

MOST READ: இந்த தானியத்தை சுண்டல் மாதிரி சாப்பிட்டா இவ்ளோ வியாதியும் உங்க நெருங்கவே முடியாதாம்?

கொடுமை

கொடுமை

அந்த வாலிபருக்கு இந்த இயந்திரத்தை எப்படி இயக்குவது என்பது தெரியாது என்றும் இந்த இயந்திரத்தை இயக்குவது இந்த நபரின் வேலை இல்லை என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவருடன் பணிபுரியும் ஒரு மூத்த தொழிலாளி இந்த இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றும் அறியப்படுகிறது.

எதிர்பாராத விபத்து

எதிர்பாராத விபத்து

அந்த நபர் சில நிமிடங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியதால், அந்த நேரத்தில் தனியாக இந்த இயந்திரத்தை இயக்க ஜோமர் முயற்சி செய்திருக்கிறான். வெளியில் சென்ற நபர் திரும்ப வந்து பார்க்கும்போது, ஜோமரின் கால்கள் இயந்திரத்தில் சிக்கி இருந்ததைக் கண்டிருக்கிறார். ஓடிச் சென்று இயந்திரத்தை நிறுத்துவதற்குள் ஜோமரை இயந்திரம் இழுத்துச் சென்றது.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

பிறகு போலீசார் வரவழைக்கப்பட்டு இயந்திரத்தில் இருந்து அந்த வாலிபரின் உடலை பிரித்தெடுக்க முயன்றனர். அந்த நிறுவனத்தின் இயக்குனர் ஆர்டி போர்ராஸ் ஊடகத்திற்கு பதிலளிக்கும்போது, ஜோமர் உண்மையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கக் கூடும் என்று நம்புவதாகக் கூறினார். ஜோமரின் உடல் இயந்திரத்தில் நசுங்கி அரைக்கப்படவில்லை என்றும் கருத்து வெளியிட்டார். துரதிர்ஷ்டவசமாக இயந்திரத்திற்குள் அவர் மாட்டிக் கொண்டதாகக் கூறினார்.

MOST READ: இந்த குழந்தைகளுக்கு இவங்க ரெண்டுபேரும் தான் அப்பா அம்மாவாம்... ரெண்டுபேரும் பால் கொடுக்கலாமா?

சாசேஜ் நிறுவனம்

சாசேஜ் நிறுவனம்

மேலும் தயாரிக்கபட்ட உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வது மட்டுமே ஜோமரின் வேலை என்றும், அந்த நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டதால் அவருக்கு இந்த இயந்திரத்தை இயக்கும் பழக்கம் இல்லை என்றும் அந்த நிறுவன இயக்குனர் கூறினார்.

இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் ஜோமர் எப்படி மாட்டிக் கொண்டார் என்பதைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Teenager loses his life after getting stuck in a meat grinder

Death can be unpredictable and very painful in some cases. While people die in their sleep, there are those whose deaths can disturb us all. This is one such case of the painful death of a youngster who had joined work, just two weeks before his death
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more