Latest Updates
-
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
எச்சரிக்கை! இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகிலேயே பேய் இருக்கிறது என்று அர்த்தம்...!
கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள் நிச்சயம் பேயையும் நம்புவார்கள். ஏனென்றால் நல்ல சக்தி இருந்தால், தீயசக்தியும் நிச்சயம் இருக்கும்.
பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது பல நூற்றாண்டுகளாய் மனிதர்களிடையே நிலவி வரும் சந்தேகம் ஆகும். ஏனெனில் நம்மை சுற்றி நடக்கும் பல நிகழ்வுகளும், நமக்கு ஏற்படும் சொந்த அனுபவங்களும் நமக்கு இந்த சந்தேகத்தை எப்போதும் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட பேயை நினைத்து பயப்படாமல் இருக்கமாட்டார்கள். கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள் நிச்சயம் பேயையும் நம்புவார்கள். ஏனென்றால் நல்ல சக்தி இருந்தால், தீயசக்தியும் நிச்சயம் இருக்கும்.

இப்போது குழப்பமே என்னவென்றால் பேய் எங்கிருக்கும் என்பதுதான். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறுவார்கள் அதுபோலத்தான் பேயும் எங்கிருக்கும் என்று யாரும் கூற இயலாது. பொதுவாக தீய ஆவிகள் என்றால் பேய் என்றும், நல்ல ஆவிகள் என்றால் ஆத்மாக்கள் என்றும் கூறுவார்கள். அனைத்து ஆவிகளும் நமக்கு தீங்கை ஏற்படுத்துவத்தில்லை. பேய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் படங்களில் கூறுவது போல மல்லிகைப்பூவின் மணம் வருவதோ, சலங்கை ஒலி வருவதோ இல்லை. அமானுஸ்ய ஆராய்ச்சியாளர்கள் பேய் இருப்பதற்கான அறிகுறிகளாக கூறும் அறிகுறிகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

நிழல்கள்
இது பேய் படங்களில் அதிகம் காட்டப்படும் ஒன்று. நன்கு விளக்குள் எரியும் ஒரு அறையில் நீங்கள் நிலைகளை திடீரென பார்த்தால் உங்களை சுற்றி ஆவிகள் இருக்க வாய்ப்புள்ளது.

புள்ளிகள்
நீங்கள் புகைப்படம் எடுப்பது மிகவும் சாதரணமான ஒன்று. ஆனால் நீங்கள் புகைப்படம் எடுத்து அதனை சோதித்து பார்த்தால் அதில் சில புள்ளிகள் உங்கள் முகத்தை தெளிவில்லமால் காட்டும். அவ்வாறு இருந்தால் உங்களை சுற்றி நிச்சயம் பேய் இருக்க வாய்ப்புள்ளது.

முணுமுணுப்புகள்
உங்கள் காதுகளுக்கு அருகே யாராவது தொடர்ந்து முணுமுணுப்பது போல உணர்வு ஏற்படுகிறதா? பல சமயங்களில் இது உங்கள் கற்பனையாக இருக்கலாம், ஆனால் இது பேய் இருப்பதற்கான முக்கியமான ஒரு அறிகுறி என்று அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கண்காணிக்கப்படுவது
உங்களை தொடர்ந்து யாரோ பார்த்துக்கொண்டே இருப்பது போல உணர்கிறீர்களா? அவ்வாறு உணர்ந்தால் உங்களை பிடித்த இறந்த ஒருவரின் ஆன்மா உங்களை பார்த்து கொண்டே இருக்கிறது என்று அர்த்தம்.

சார்ஜ் குறைதல்
இது உங்களுக்குவிசித்திரமாக தோன்றலாம், பேய் இருக்கும் இடங்களில் மின்னணு கருவிகளில் தொடர்ந்து சார்ஜ் இறங்கிக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. இது உங்களுக்கு நேர்ந்தால் நிச்சயம் உங்களை சுற்றி பேய் இருக்கலாம்.

விளக்கமுடியாத அசௌகரியங்கள்
தினமும் சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உங்கள் வீட்டில் அசௌகரியமாக உணர்கிறீர்களா? அப்படி உணர்ந்தால் உங்களை சுற்றி பேய் இருக்க வாய்ப்புள்ளது.

உடலில் சோர்வு
ஆன்மாக்கள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால் சில ஆன்மாக்கள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறு செய்யும்போது கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உங்களின் ஆற்றல்களை தொடர்ந்து உறிஞ்சி உங்களை எப்போதும் சோர்வாக உணரவைக்கும்.

பாதசுவடுகள்
நீங்கள் வீட்டில் இருக்கும்போது பாதசுவடுகளின் ஒலியை கேட்டால் நீங்கள் கேட்பது பேயின் சத்தத்தை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த பாத ஒலிகள் யாரோ நடப்பதை போன்ற உணர்வை தரும் சத்தமான ஒலியாகவும் இருக்கலாம் அல்லது மிகவும் மென்மையாக உங்களின் பயத்தை தூண்டுவதாகவும் இருக்கலாம்.

சத்தங்கள்
நீங்கள் ஹாலில் அமர்ந்திருக்கும் போது வீட்டின் பின்பக்க கதவிலோ அல்லது சமையலறையிலோ கதவுகளில் கீறல் சத்தங்களை கேட்டால் உங்கள் வீட்டில் பேய் உள்ளது என்று அர்த்தம்.

வெப்பநிலையில் திடீர் வீழ்ச்சி
இதன் பின்னால் இருக்கும் கோட்பாடு என்னவென்றால் ஆவிகள் ஒரு இடத்தில் இருக்க வேண்டுமெனில் அவற்றிற்கு அதிக வெப்பம் தேவை. எனவே அவை உங்கள் அறையில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சிக்கொள்ளும். திடீரென உங்கள் அறையில் வெப்பநிலை குறைவதை நீங்கள் உணர்ந்தால் நிச்சயமாக அந்த அறையில் ஆவிகள் இருப்பது உறுதி.

செல்லப்பிராணிகளின் விசித்திர செயல்கள்
உங்கள் நாய் திடீரென ஒரு இடத்தை பார்த்து குறைத்தால் உங்களால் பார்க்க இயலாத ஒன்றை அவை பார்க்கிறது என்று அர்த்தம். விலங்குகளுக்கு மனிதர்களை விட சில கூடுதல் சக்திகள் உள்ளது, அதன்மூலம் அவை மனிதர்களால் பார்க்க இயலாத ஆன்மாக்களை பார்க்க முடியும்.

இடம்பெயர்தல்
நீங்கள் வைத்த பொருட்கள் திடீரென வேறு இடத்தில் காணப்பட்டாலோ அல்லது சிறிது இடம் நகர்ந்து காணப்பட்டாலோ அந்த இடத்தில் ஆவிகள் இருப்பது உறுதியாகிறது. குறிப்பாக புத்தங்கள் மற்றும் தண்ணீர் பாத்திரங்கள் இடம் நகர்ந்து காணப்பட்டால் நிச்சயம் அங்கு ஆவி இருக்கிறது.

வாசனைகள்
சிலசமயம் ஆவிகள் தங்களின் இருப்பை சில வாசனைகளின் மூலம் வெளிப்படுத்தக்கூடும். எனவே திடீரென வித்தியாசமான ஒரு வாசனையையோ, வாசனைத்திரவியங்களின் வாசனையையோ, சிகரெட்டின் வாசனையயையோ உணர்ந்தால் அங்கு ஆன்மா நிச்சயம் இருக்கும்.

தொடுதல்
ஆவிகளால் உங்களை நேரடியாக தொட முடியாது என்று ஒரு கோட்பாடு உள்ளது. ஆனால் சில அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் ஆவிகளால் உங்களை தீண்ட கூடும் என்று கூறுகிறார்கள். திடீரென உங்கள் முடி இழுக்கப்படுவது போலவோ, தள்ளப்படுவது போலவோ, தீண்டப்பட்டது போலவோ உணர்ந்தால் உங்கள் அருகில் ஆவி உள்ளது என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications