கடவுளை வழிபட பூக்கள் உபயோகப்படுத்துவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா?

இந்து வழிபாட்டு முறைகளில் பூக்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். எதற்காக என்றே தெரியாமல் இந்த பழக்கம் நம் சமூகத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

நாம் பிறந்தது முதலே கடவுள்களுக்கு பூக்களை வைத்து வழிபடுவதை பார்த்து கொண்டு இருக்கிறோம். ஆனால் எதற்காக பூக்களை வைத்து வழிபடுகிறோம் என்று இதுவரை நாம் சிந்தித்து பார்த்திருக்க மாட்டோம். நமது பெற்றோர்களை கேட்டால் அவர்களுக்கும் இதற்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கடவுளை பூக்கள் வைத்து வழிபடுவது என்பது யுகங்களை கடந்தும் இருக்கும் ஒரு பழக்கமாகும்,

flowers

வேதங்களிலும் கடவுளுக்கு புஷ்பாஞ்சலி என்ற பெயரில் பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்து வழிபாட்டு முறைகளில் பூக்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். எதற்காக என்றே தெரியாமல் இந்த பழக்கம் நம் சமூகத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இந்த பதிவில் அதற்கான பதிலை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகானவை

அழகானவை

பூக்கள் கடவுளுக்கு வைத்து வழிபடபடுவதற்கான முதல் காரணம் அவை அழகானவை என்பதுதான். அழகானவை என்பதையும் தாண்டி அவை தூய்மையானவை. தவறான இடத்தில பூக்கும் மலர் கூட அதன் தனித்தன்மையை இழக்காமல் அதனுடைய வாசனையைத்தான் தரும். அதுபோலத்தான் மனிதனும் இருக்க வேண்டும். பூக்களை கொண்டு கடவுளை வழிபடும்போது கடவுளின் அருளால் நாம் வேண்டியது கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

நறுமணம்

நறுமணம்

பூக்கள் ஒரு இடத்தின் சூழ்நிலையை சுகந்தமானதாக மாற்றக்கூடும். அமைதியாகவும், அழகாகவும், நறுமணத்துடன் இருக்கும் இது உங்கள் இல்லத்திற்கு கடவுளை அழைத்துவரும்.

பூஜை

பூஜை

பூஜை என்பதில் முதலில் இருக்கும் பூ என்னும் எழுத்து பூக்களை குறிப்பதாகும். பூக்களை தவிர்த்து கடவுளுக்கு பூஜை என்பது அர்த்தமில்லாத ஒன்றாகும். ஒரு பூஜையை முழுமை பெற வைப்பது என்பது அதில் வைக்கப்படும் பூக்கள்தான்.

நல்ல மண்

நல்ல மண்

ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு மலரை விரும்புபவராக இருப்பார்கள். வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி நல்ல மண்ணில் விளைந்த, நறுமணம் மிக்க மலர்களை மட்டுமே கடவுளுக்கு பூஜை செய்ய பயன்படுத்த வேண்டும். தகுதி இல்லாத மலர்களை வைத்து கடவுளை வழிபடுவது கடவுளின் கோபத்தைத்தான் பெற்றுத்தரும். காட்டில் வளர்நத பூக்களையோ அல்லது முட்கள் இருக்கும் பூக்களையோ கடவுளுக்கு வைத்து வழிபடக்கூடாது, இது கடவுளை அவமதிக்கும் செயலாகும்.

பக்தி

பக்தி

கடவுளுக்கு பூக்களை வைத்து வழிபடுவது என்பது கடவுள் மீது நமக்கிருக்கும் பக்தியை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வழியாகும். இவ்வாறு வைத்து வழிபடுவது நமது ஆன்மாவின் ஒருபகுதியை கடவுளுக்கு கொடுப்பது போன்றதாகும்.

பூக்களின் வகைகள்

பூக்களின் வகைகள்

வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி பூக்கள் சாத்வ, ராஜ மற்றும் தாம என்று மூன்று வகைப்படும். அவற்றின் வடிவம், வண்ணம் மற்றும் நறுமணம் கொண்டு பூக்கள் இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது. சாத்வ மற்றும் ராஜ மலர்களை கடவுளுக்கு தினமும் வைத்து வழிபடலாம் ஆனால் தாம மலர்களை சிறப்பான தருணங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சாத்வ மலர்கள்

சாத்வ மலர்கள்

சாத்வ மலர்கள் எளிதில் கிடைக்க கூடிய மலர்களாக இருக்கும். உதாரணத்திற்க்கு அரளி, மல்லிகை, பவள மல்லி, வெள்ளை தாமரை போன்றவை சாத்வ மலர்களாகும். இவற்றை தினமும் கூட கடவுளுக்கு வைத்து வழிபடலாம்.

ராஜ மலர்கள்

ராஜ மலர்கள்

ஊதுகொம்பு பூ, வெள்ளை நிற மலர்கள், முள் இல்லாத ரோஜா, சிவப்பு தாமரை போன்றவை ராஜ மலர்கள் வகையை சேர்ந்தவையாகும். இவற்றையும் தினமும் கடவுளுக்கு வைத்து வழிபடலாம்.

தாம மலர்கள்

தாம மலர்கள்

புற்கள், சீன ரோஜா, பருத்தி மலர், கேதகை மலர் போன்றவை தாம வகையை சேர்ந்தவையாகும். இந்த மலர்களை அதற்குரிய நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கவர்தல்

கவர்தல்

ஒவ்வொரு பூவிற்கும் அதன் வண்ணம், வாசனை பொறுத்து ஒவ்வொரு விதமான கவரும் ஆற்றல் இருக்கும். ஒவ்வொரு மலர்களும் வெவேறு தெய்வங்களை ஈர்க்கும், வெவ்வேறு பலன்களை வழங்கும்.

கடவுள்களுக்கு பிடித்த மலர்கள்

கடவுள்களுக்கு பிடித்த மலர்கள்

சிவபெருமானுக்கு வெள்ளை நிற மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சங்குப்பூ, செம்பருத்தி, எருக்கமலர் போன்றவை விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். இராமருக்கு அரளி மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அனுமனுக்கு சிவப்பு நிற மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion