For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பப்ஜி கேம் விளையாடி தமன்னாவுக்கு நடந்த கொடுமைய நீங்களே பாருங்க...

பப்ஜி கேம் விளையாடி அதனால் சிலரது வீட்டில் நடந்த விபரீத சம்பவங்கள் பற்றி தான் இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கவிருக்கிறோம். பப்ஜி விளையாட்டால் நடந்த சில உண்மை விபரீத சம்பவங்கள் இரண்டைப் பற்றிய தொகுப

|

இப்போது எல்லாம் ஆன்ட்ராய்டு போன் இல்லாத கைகளையே பார்க்க முடியாது. அந்தளவுக்கு ஆன்ட்ராய்டு மோகம் தான் எங்கு பார்த்தாலும். டீக் கடையில் உட்கார்ந்து டீ கிளாஸூம் கையுமா பஜ்ஜி சாப்பிட்ட நாம எல்லாம் இப்போ போனும் கையுமா பப்ஜி விளையாடிக் கொண்டு இருக்கிறோம்.

PUBG

ஒருத்தன துரத்தி துரத்தி கொல்லுறதல நம்ம மக்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியல. அந்த அளவுக்கு பப்ஜி கேம் மக்களை ஆட்டி வித்து வருகிறது. வயசு வித்தியாசம் பார்க்காம எல்லாரும் விளையாடிக் கொண்டு வருகிறார்கள். இது ஒரு பொழுதுபோக்கு கேம்மாக இருந்தால் கூட இதனால் பெரிய ஆபத்துகளும் நேரவே செய்கின்றனர் என்று எச்சரிக்கை விடுவிக்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்ஜி கேம்

பப்ஜி கேம்

ஒரே நேரத்தில் ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டு விளையாட முடியும் என்பதால் பள்ளிக் குழந்தைகள், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், ஏன் ஆபிஸ் நண்பர்கள் கூட சேர்ந்து விளையாடி வருகிறார்கள். இங்க தான் வினையே ஆரம்பிக்கிறது. முதலில் ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்த கேம் போக போக அடிக்ஸனாக மாறுகிறது. எப்பொழுதும் போனும் கையுமாக திரிய வைத்து விடுகிறது. பக்கத்தில் இருந்து யாராவது கூப்பிட்டால், ஏன் அப்பா என்று குழந்தைகள் ஆசையா அருகில் வந்தால் கூட, மனைவி பேசினால் கூட, நண்பர்கள் கால் செய்தால் இப்படி எதற்கும் ரெஸ்பான்ஸ் செய்யாத நிலை தான் இந்த கேம்மால் உருவாகிறது.

MOST READ: உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க

என்ன பிரச்சினை?

என்ன பிரச்சினை?

இதனால் உறவுகளுக்கிடையே சிக்கல், படிப்பில் கவனம் செலுத்தாமல் போதல், மன உளைச்சல், மன அழுத்தம், கோபம், ஆக்ரோஷம், மற்றவர்கள் மேல் எரிச்சல், அதீத போட்டி மனப்பான்மை இப்படி நம்மளுக்கே தெரியாமல் ஏகப்பட்ட கெட்ட குணங்கள் நம்முள் குடியேறி விடுகின்றனர். கேம்ல இருக்கிற ஆள சுடுறத நிறுத்திட்டு நமக்குள்ள வர்ற கெட்ட குணங்கள எப்ப அழிக்க போறீங்க.இத விளையாடிட்டு வர்றவங்க நிறைய பேர்கள் பிரச்சினைகளை சந்தித்ததால் தான் இப்பொழுது 6 மணி நேரத்திற்கு மேல் இந்த விளையாட்டை விளையாடக் கூடாது என்று அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி விளையாட்டு

தடையை மீறி விளையாட்டு

ஆனா தப்புன்னு தெரிஞ்சு இருந்தும் நம்ம தான் திருந்த மாட்டோமே. 6 மணி நேரத்துக்கு மேலே எப்படி விளையாடலாம் என்று தான் யோசிக்கவே செய்வோம். உங்களை மாதிரி இந்த கேம்மை உட்கார்ந்து உட்கார்ந்து போனும் கையுமா விளையாண்டவங்க, இப்போ எப்படிப்பட்ட உடல் நல பிரச்சினைகளையும் மனநல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆபத்தான இந்த ஆன்ட்ராய்டு கேம்மின் அனுபவங்களை பற்றி அவர்கள் கூறுவதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.

கெளரவ்

கெளரவ்

கெளரவ் இவர் டெல்லியை சேர்ந்த 24 வயது இளைஞர். 6 மாதமாக உங்களை மாதிரியே இந்த பப்ஜி கேம் விளையாடி வந்தார். தன் மனநிலை பாதித்த நிலை கூட தெரியாமல் இருந்துள்ளார். ஆனால் அது அவரது குடும்பத்தாருக்கு தெரிந்தது. எதற்கெடுத்தாலும் கோபம், எரிச்சல் என்று குடும்பத்தினர் மீது தன் கோபத்தை காட்டி வந்துள்ளார். இந்த கேம் விளையாடுபவர்களுக்கிடையே ஒரு ஆக்கிரமிப்பு நடத்தையை உருவாக்குகிறது என்று மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதே தான் தற்போது அவரும் கூறியுள்ளார். "இந்த கேம் விளையாடும் போது சுற்றி என்ன நடக்கிறது என்பதை மறந்து விடுகிறேன்.

டார்க்கெட்டை நோக்கி விளையாடும் போது யாராவது குறுக்கே வந்தால் கோபம், டென்ஷன் வருகிறது. ஏன் சில நேரங்களில் என் அம்மாவிடம் கத்த கூட செய்துள்ளேன். இது ஒரு விதமான அடிக்ஸன் மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் போனும் கையுமா இருப்பதால் கண்கள், கைகள் வலிக்க ஆரம்பிக்கின்றன. சில சமயங்களில் உணர்வில்லாத தன்மை ஏற்படுகிறது என்று தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.

கெளரவ் இந்த கேம்மை தூங்காமல் செய்யாமல் விளையாண்டதால் என் தூக்கம் நிறையவே பாதிப்படைந்துள்ளது. தூங்கும் பழக்கமே மாறி விட்டது. இதனால் என் உடல் நலமும் பாதிப்படைந்து உள்ளது என்கிறார்.

MOST READ: தீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது?

ரோகன்

ரோகன்

ரோகன் தற்போது தான் கல்லூரியை முடித்த 21 வயது இளைஞன். கல்லூரியில் படிப்பு முடிந்த பிறகு தினமு‌ம் 6-7 மணி நேரம் பப்ஜி விளையாடி வந்துள்ளார். இதை விளையாடிய பிறகு எனக்கு தீவிர தலைவலி, கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம்மில் நான் ரெம்ப அடிக்ஸனாகி விட்டேன். என்னைப் போல் நிறைய இளைஞர்கள், குழந்தைகள் இந்த கேம்மில் அடிக்ஸனாகி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தமன்னா

தமன்னா

டெல்லியைச் சேர்ந்த இந்த பெண்ணும் பப்ஜி கேம் விளையாட ஆரம்பித்து உள்ளார். நாங்கள் எங்கள் வீட்டில் இதை குடும்பத்தோடு விளையாடுவோம். எங்கள் வீட்டு குழந்தைகள் கூட பள்ளி முடிந்து வந்ததும் பப்ஜி தான் அவர்களின் பொழுதுபோக்கு.

ஆனால் இப்பொழுது தான் எங்களுக்கு புரிகிறது. நாங்கள் யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக் கொள்வதில்லை. இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே புரிதல் குறைந்து வருகிறது.

குழந்தைகளும் இந்த கேம்மில் இருந்து வன்முறையை கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் சாதரணமாக பேசுகின்ற வார்த்தைகள் கூட உன்னை கொல்லனும், சுடனும் இப்படித்தான் இருக்கிறது. என்று தன் கருத்தை கூறியுள்ளார்.

கவனத்தில் வைக்க வேண்டியவை

கவனத்தில் வைக்க வேண்டியவை

இந்த பப்ஜி கேம் உங்கள் தூக்கத்தை கெடுத்து விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் உபாதைகள் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அதிக நேரம் மொபைலில் விளையாடுவதால் அதிக கதிர் வீச்சால் சீக்கிரமே கண்பார்வை பறி போகும் நிலை ஏற்படலாம்.

அடிக்ஸன் மற்றொரு அவல நிலை. சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாமல் விளையாடுவது சமூக உறவை பாதிக்கும். குறிப்பாக குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாடுவதை தவிர்க்கலாம்.

MOST READ: இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க... இப்படி சரிபண்ணுங்க

மனநல மருத்துவர் ஆலோசனைகள்

மனநல மருத்துவர் ஆலோசனைகள்

இந்த பப்ஜி கேம் குறித்து மன நல மருத்துவரான டாக்டர் குணல் குமார், சாரதா மருத்துவ கல்லூரியிலிருந்து கூறுகையில் இந்த பப்ஜி கேம் மக்களிடையே ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை எண்ணத்தை பதியச் செய்கிறது. குறிப்பாக குழந்தைகள் கேம்மில் அடிக்ஸனாகி தங்கள் கல்வி எதிர்காலத்தை தொலைத்து விடுகிறார்கள். இது குழந்தைகளை ஆன்டி சோஷியல் நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது. அதே மாதிரி பெரியவர்களும் அடிக்ஸனாகுவது அவர்கள் குடும்ப பிணைப்பை பாதிக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

உடனே அந்த விளையாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர முடியாது. உடனே முட்டுக்கட்டை போடுவது அவர்களுக்கு அனிஸ்சிட்டி பிரச்சினையை உண்டாக்கி விடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளை இந்த கேம் விளையாடாமல் படிப்படியாக குறைக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் பொறுப்பு காட்ட வேண்டும். உங்கள் குழந்தைகளுடன் ஒவ்வொரு அம்மாவும் அப்பாவும் போதுமான நேரம் செலவழித்தாலே போதும் இந்த மாதிரி கேம் அடிக்ஸனிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்து விடலாம். இந்த அடிக்ஸன் பிறகு தொல்லையாக மாறிவிடும். பிறகு உங்கள் குழந்தைக்கு மனநல தெரபி கொடுக்கும் நிலை உருவாகலாம் என்று கூறுகிறார் மனநல மருத்துவர்.

MOST READ: ஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்?

இப்படியும் செய்யலாமே?

இப்படியும் செய்யலாமே?

உங்களைப் பார்த்து தான் உங்கள் குழந்தை வளரும். உங்களுடைய கையில் இருப்பது ஆன்ட்ராய்டு போன் மட்டுமல்ல உங்கள் குழந்தையுடைய எதிர்காலம். போனை கையில் எடுப்பதை நிறுத்தி விட்டு குழந்தையை தூக்கி கொஞ்சுங்கள். விளையாடுங்கள். பப்ஜியை விட்டு விட்டு உறவுகளுடன் பேசுங்கள். அன்பு பாராட்டுங்கள். உறவும் வளரும் சமுதாயமும் சிறக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல ஆன்ட்ராய்டு கேம்மும் நஞ்சு தான். தெரிந்தே போய் விழாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is PUBG Addiction Harmful For Kids? Here Are Some Real Life Incidents

PlayerUnknown's Battleground popularly known as PUBG has made some major headlines in the past few days. A lot of people have highlighted various health concerns due to the increased involvement in the game. The popular game is a multiplayer game in which you can connect with your friends and enjoy the game. But according to recent responses due to the extreme addiction, the players have faced many health issues
Story first published: Friday, April 12, 2019, 15:59 [IST]
Desktop Bottom Promotion