Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
பத்ம புராணத்தின் படி சிவலிங்கத்தை இப்படி வழிபடுவது உங்களுக்கு மிகபெரிய பாவத்தை சேர்க்குமாம் தெரியுமா
பத்ம புராணத்தின் படி மகிழ்ச்சியான வாழக்கைக்கு நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத செயல்கள் என சில உள்ளது.
இந்து மதத்தின் முக்கியமான பதினெட்டு புராணங்களில் ஒன்று பத்ம புராணமாகும். விஷ்ணுவின் கையிலிருக்கும் தாமரை மலரால் இதற்கு இந்த பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. இந்த நூலில் விஷ்ணுபகவான் எக்காலத்திற்கும் கூறிய சிறந்த வாழ்க்கைக்கான ரகசியங்கள் உள்ளது.

பத்ம புராணத்தின் படி மகிழ்ச்சியான வாழக்கைக்கு நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத செயல்கள் என சில உள்ளது. மேலும் உங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான கருத்துக்களும் இந்த புராணத்தில் உள்ளது. இதன்படி வாழ்ந்தால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் எப்போதும் நிறைந்திருக்கும்.

திதி கொடுப்பது
பத்ம புராணத்தின் படி தங்களின் இறந்த உறவினர்களுக்கு திதி கொடுத்து வழிபடுபவர்கள் வாழ்வில் எப்பொழுதும் அமைதியும், செழிப்பும் நிறைந்திருக்கும். எனவே ஒருபோதும் உங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு திதி கொடுக்க தவறாதீர்கள்.

பாவங்களை போக்குவது
பத்ம புராணத்தின் படி உங்கள் வாழ்க்கையில் முக்தி அடைய உங்களுடைய பாவங்களை போக்க வேண்டியது அவசியமாகும். எனவே கங்கை நதி அல்லது அதுபோன்ற புனித நீரில் ஒருமுறையாவது குளியுங்கள்.

பசுவை வழிபடுவது
இந்து மதத்தில் பசு என்பது மிகவும் புனிதமான ஒன்றாகும். இதனை பற்றி பத்ம புராணத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளபடி பசுவை வழிபடுவது உங்களுக்கு செல்வம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

வைக்கவேண்டிய பொருட்கள்
நீங்கள் வீட்டில் வைக்கும் சில பொருட்கள் கூட உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்கும். அதன்படி சோழிகள், சங்கு மற்றும் துளசி இலைகள் மூன்றையும் ஒன்றாக வைப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

தரையில் வைக்காதீர்கள்
பத்ம புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி சிவலிங்கம், வைரம், தங்கம், துளசி இலைகள், மலர் மாலைகள், ருத்திராக்ஷ மாலை, கடவுள் படங்கள் போன்றவற்றை தரையில் வைக்கக்கூடாது. அவ்வாறு வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் பெரிய பாவமாக மாறும்.

மனைவி
பத்ம புராணத்தில் கூறியுள்ளபடி கணவனின் சொல்படி கேட்டு அவர் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் மனைவி நிச்சயம் சொர்க்கத்தை அடைவாராம். பத்ம புராணம் பற்றி தெரியாத தகவல்களை மேலும் பார்க்கலாம்.

பத்ம புராணம்
பத்ம புராணத்தில் மொத்தம் 5 பாகங்கள் உள்ளது. அவை முறையே சிருஷ்டி காண்டம், பூமிகாண்டம், ஸ்வர்க்க காண்டம், பாதல் காண்டம் மற்றும் உத்தர காண்டம். இதிலிருக்கும் ஒவ்வொரு காண்டமும் ஒவ்வொரு சிறப்பும், ஒவ்வொன்றை பற்றி விளக்குவதாகவும் உள்ளது.



Click it and Unblock the Notifications