For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! இந்த குணங்கள் உள்ள ஆண்களை மட்டும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்...!

சிறந்த ஆண் என்பதற்கான தகுதிகளும், குணங்களும் என்னென்ன என்று நமது புராணத்தில் உள்ளது.

|

ஒரு உறவு நீடித்திருக்க வேண்டுமெனில் அதில் ஆண், பெண் இருவருமே விட்டுக்கொடுத்தும், ஒருவரையொருவர் விட்டு விடாமலும் இருக்க வேண்டும். இருவரில் ஒருவரின் குணம் சரியில்லை என்றாலும் அந்த உறவு நீடிக்காது. உறவு முறிவை தவிர்க்க ஒருவருடன் பழகும் முன் அவர்களின் குணங்களை நன்கு அறிந்துகொண்டு அதன்பின் உங்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதே ஆரோக்கியமான உறவிற்கு வழிவகுக்கும்.

never trust a man with these personalities

அந்த வகையில் சிறந்த ஆண் மற்றும் சிறந்த பெண் என்பவர்களுக்கான தகுதிகள் என்னென்ன என்று நமது புராணங்களிலும், வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சிறந்த ஆண் என்பதற்கான தகுதிகளும், குணங்களும் என்னென்ன என்று நமது புராணத்தில் உள்ளது. அதேபோல மோசமான ஆண் யார் என்பதற்கான அடையாளங்களும் அதில் உள்ளது. அப்படிப்பட்ட ஆணுடன் வாழ்வது என்பது பெண்களுக்கு மிகவும் கடினமானதாகும். மோசமான ஆணின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

ஆண்களிடம் இருக்கக்கூடாத அடிப்படை குணத்தில் முதல் இடத்தில் இருப்பது ஆக்ரோஷம் ஆகும். ஏனெனில் இப்படிப்பட்ட ஆண்கள் மூர்க்கத்தனமாக பெண்களை தாக்கக்கூடியவர்கள். ஒரு வீட்டில் ஆண் பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்தினால் அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்க மாட்டாள் என்று புராணங்கள் கூறுகிறது. பெண்களிடம் மட்டுமின்றி மற்றவர்களிடமும், பிற உயிரினங்களிடமும் மூர்க்கமாக நடந்து கொள்பவர்கள் உங்கள் உறவை எளிதில் சிதைக்கக்கூடியவர்கள்.

கட்டுப்படுத்துதல்

கட்டுப்படுத்துதல்

இது பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் ஒரு குணமாகும். ஒரு உறவில் கட்டுப்பாடுகள் என்பது இருபுறமும் சமநிலையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது அந்த உறவில் விரிசல் ஏற்பட தொடங்கும். ஆண்கள் பெண்களை அதிகம் கட்டுப்படுத்த விரும்பினால் அவர்களால் எந்த உறவிலும் நீடித்திருக்க இயலாது. இவர்கள் தங்களின் செயல்களை நியாயப்படுத்தினாலும் இந்த குணம் அவர்களின் ஆதிக்கத்தை மட்டுமே வெளிப்படுத்தும்.

பொஸ்ஸசிவ்

பொஸ்ஸசிவ்

பெரும்பாலான உறவுகள் சிதைய முக்கிய காரணமாக இருப்பது இந்த குணம்தான். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களுக்குத்தான் இந்த குணம் அதிகமாக இருக்கும். ஆனால் ஆண்களிடம் இந்த குணம் இருக்கும் போது அது ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். இந்த குணம் அதிகமுள்ள ஆண்கள் பெண்களை எளிதில் மனதளவில் காயப்படுத்திவிடுவார்கள். அவர்களின் வார்த்தைகளில் ஒருபோதும் கட்டுப்பாடுகள் இருக்காது.

தற்பெருமை

தற்பெருமை

நம் அனைவருக்குமே நம்மை பற்றிய சுயமதிப்பீடு எப்பொழுதும் சற்று அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அது மற்றவர்களை காயப்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது. பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்கள் சுயநலமிக்கவர்களாத்தான் இருப்பார்கள். அவர்கள் தங்களின் நலனை பற்றி யோசிப்பார்களே தவிர மற்றவர்களை பற்றி ஒருபோதும் சிந்திக்கமாட்டார்கள். மேலும் தன் சிறப்புகளை காரணம் காட்டி மற்றவர்களை சிறுமைப்படுத்துவதில் அவர்களுக்கு அலாதி இன்பம் இருக்கும். தன்னம்பிக்கை உள்ள ஆணை மதியுங்கள், நேசியுங்கள். தற்பெருமை பேசும் ஆணை திரும்பி கூட பார்க்காதீர்கள்.

MOST READ: மஞ்சளுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

மூளைச்சலவை செய்பவர்கள்

மூளைச்சலவை செய்பவர்கள்

மற்றவர்களின் மனதை எளிதில் மாற்றக்கூடிய ஆண்கள் நீங்கள் செய்ய விரும்பாத செயலை மிகவும் லாவகமாக நீங்களே செய்யும்படி உங்களின் மீது அழுத்தத்தை திணிப்பார்கள். உங்களுக்குள் குற்ற உணர்வை தூண்டி தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்து கொள்வார்கள். ஒருவேளை நீங்கள் பழகும் ஆண்களில் யாராவது இதனை செய்பவராக இருந்தால் அவர்களிடம் இருந்து விலகுவதே உங்களுக்கு நல்லது.

தொடர்ந்து விமர்சிப்பவர்கள்

தொடர்ந்து விமர்சிப்பவர்கள்

விமர்சனங்கள்தான் நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவியாக இருப்பவை. ஆனால் தொடர்ச்சியாக ஒருவர் விமர்சனம் செய்து கொண்டே இருப்பது ஒருவருடைய தன்னம்பிக்கையை குலைக்கும். இத்தகைய குணம் ஆண்கள் விமர்சனம் என்ற பெயரில் தொடர்ந்து உங்களை அவமானப்படுத்தி கொண்டே இருப்பார்கள். நியாயமான விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான், ஆனால் தேவையற்ற விமர்சனங்கள் செய்பவர்களை தவிர்ப்பதே நல்லது.

மாறும் மனநிலை கொண்டவர்கள்

மாறும் மனநிலை கொண்டவர்கள்

கணிக்கமுடியாத மனநிலையும், மாறும் மனநிலையும் கொண்டவர்கள் நம்பிக்கைகுரியவர்கள் அல்ல. இப்படிப்பட்டவர்களின் மனநிலையை கவனிப்பது மிகவும் கடினமாகும். இவர்கள் ஒரு நிமிடம் கோபமாக இருப்பார்கள், அடுத்த நிமிடமே சிரிப்பார்கள். இதனால் உங்களுக்கு அதிருப்திகள் தொடர்ந்து ஏற்படலாம். மனநிலை சமநிலையில் இல்லாதவர்கள் உறவுகளில் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறானதாகத்தான் இருக்கும்.

நேர்மையின்மை

நேர்மையின்மை

ஆரோக்கியமான உறவிற்கு முதல் எதிரியே நேர்மையின்மைதான். நேர்மையின்மை தவறான குணம் மட்டுமல்ல அது உங்களுக்கு இடையே இருக்கும் நம்பிக்கையையும் சிதைக்கும். நீங்கள் கூறும் பொய் சின்னதோ, பெரியதோ ஆனால் நேர்மையில்லை என்ற குணம் உங்கள் மீதான மதிப்பை குறைக்கும். நேர்மையில்லாதவர்கள் தங்களை நியாயப்படுத்தி கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். நேர்மையில்லாதவர்களிடம் ஆரோக்கியமான உறவை எதிர்பார்க்க முடியாது.

MOST READ: 2019 ஆண்டு வருகிற சூரிய கிரகணத்தால் பாதிக்கப்போகும் ராசிகள் எவை? என்ன பரிகாரம் இருக்கு?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual relationship
English summary

never trust a man with these personalities

According to ancient scriptures a man with these qualities are extremely dangerous.
Desktop Bottom Promotion