உயிர்போற காரியமா இருந்தாலும் விருச்சிக ராசிக்காரங்க கிட்ட சொல்லிடாதீங்க... ஏன் தெரியுமா?

எவ்வளவு முக்கியமான விஷயமாக இருந்தாலும் அதை விருச்சிக ராசிக்காரர்களிடம் மட்டும் சொல்லிவிடக் கூடாது. அதற்கான காரணம் காரியங்கள் என்ன என்பது பற்றி இங்கே விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தங்கள் ராசியை பொருத்து வித்தியாசமான குணங்களை கொண்டிருப்போம். அந்த வகையில் விருச்சிக ராசிக்காரர்கள் ரொம்ப கோபமானவர்கள். பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள். இவர்களிடம் நீங்கள் எல்லாத்தையும் சொன்னால் அவ்வளவு தான்.

Scorpio

இவர்களிடம் மன்னிக்கும் பழக்கமே கிடையாது. எதிலும் தீவிரமாக இருப்பார்கள். எனவே இவர்களிடம் பார்த்து பழகுவது நல்லது. எனவே உங்கள் நட்புவட்டாரத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் இருந்தால் அவர்களிடம் இதையெல்லாம் சொல்வதை தவிர்த்து விடுங்கள். இதனால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மறப்பதில்லை மன்னிப்பதில்லை

மறப்பதில்லை மன்னிப்பதில்லை

இவர்கள் ஒரு இறுக்கமான மனநிலையை கொண்டவர்கள். எனவே இவர்கள் அகராதியில் மன்னிக்கும் பழக்கம் என்பதே கிடையாது. என்னைக்கோ செய்த செயலை ஞாபகம் வைத்து பழிவாங்கும் எண்ணம் உடையவர்கள். அவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைத்து விட்டால் அவ்வளவு தான் காலி நீங்கள். இனிப்பாக பேசும் நபர்கள் அப்படியே போரிட ஆரம்பித்து விடுவார்கள். பழிவாங்கின பிறகு தான் அவர்கள் கோபம் தணியும். பார்ப்பதற்கு அமைதியாக தெரியும், ஆனால் மனதிற்குள் பழிவாங்கும் உணர்ச்சியுடன் காத்திக் கொண்டு இருப்பார்கள்.

நம்பிக்கை

நம்பிக்கை

என்னை நம்புங்கள் என்று அவர்களிடம் கூறாதீர்கள். அது அவர்களுக்கு ஒரு போதும் பிடிக்காது. இதற்கு பதிலாக நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகு அவர்கள் மனதில் இடம் பிடிக்கலாம்.

எதிலும் தீவிரம்

எதிலும் தீவிரம்

அவர்கள் ஒருவரை விரும்பினாலோ அல்லது வெறுத்தாலோ தீவிரமாக யோசித்து தான் முடிவெடுப்பார் கள். உங்களைப் பற்றி அவர்கள் மூளையில் போட்டு அலசி ஆராயாமல் விடமாட்டார்கள். எனவே அவர்களிடம் ஏன் தீவிரமாக இருக்கிறீர்கள் என்று கேட்காதீர்கள். அது அவர்களுக்கு பிடிக்காது.

நான் சொல்வது தான் சரி

நான் சொல்வது தான் சரி

அவர்கள் வழியில் தான் எப்பொழுதும் செல்வார்கள். தாங்கள் சொல்வது தான் சரி என்று இருப்பார்கள். எனவே இவர்களிடம் உங்கள் கருத்துகள் செல்லுபடியாகாது. எனவே அவர்கள் கருத்துக்களை ஏற்க மறுத்தால் கோபம் அடைந்து விடுவார்கள். இதற்கு காரணம் இவர்களின் போட்டித்திறன், வெறித்தனம் தான். அதே நேரத்தில் இவர்கள் அக்கறை உள்ளவராகவும் இருப்பார்கள்.

ஈகோ

ஈகோ

விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்றே தனிக் கூற்று உள்ளது " இவர்களைத் தொட்டால் கொல்லாம விட மாட்டார்கள்" இந்த டயலாக் இவர்களுக்கு நல்லாவே பொருந்தும்.எனவே இவர்களிடம் வம்புக்கு போகாமல் இருப்பது நல்லது.

'நோ' சொல்லுதல்

'நோ' சொல்லுதல்

மற்றவர்கள் 'நோ' என்று அவர்களிடம் கூறிவிட்டால் அவர்களுக்கு பிடிக்காது. எனவே' நோ' சொல்லுபவர்களை விரோதிகளாகவே பார்ப்பார்கள். அவர்களுடைய பெருமை அவர்களை அதை ஏற்றுக் கொள்ள விடாது. இதனால் உறவிலிருந்து விலகவும் துளியளவும் யோசிக்க மாட்டார்கள். அதை நினைத்து கவலைப்படவும் மாட்டார்கள்.

பொறாமை

பொறாமை

அவர்கள் பொறாமை பட்டாலும் மறைக்கக் கூடியவர்கள். பொறாமை அவர்களிடம் கண்டிப்பாக இருக்கும். அவர்களிடம் பழகும் போது இந்த குணத்தை நீங்கள் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion