Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சொந்த அறிவு என்பதே இருக்காதாம் தெரியுமா?
அதிகளவு கருத்துத்திணிப்புகள் ஏற்படும்போது நாம் நம்முடைய சுயமுடிவுகளை எடுக்க முடியாமல் தயங்குகிறோம். இதனால் யாரும் இல்லாத சூழ்நிலை ஏற்படும்போது நம்மால் எந்த முடிவையும் சொந்தமாக எடுக்க முடியாமல் போய் வி
மற்றவர்களின் பேச்சுக்களால் எளிதில் தாக்கப்படுவது இரண்டு வழிகளில் வேலை செய்யும். ஒன்று மற்றவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம், இன்னொன்று நம் மீது அனைவரும் அவர்களின் கருத்துக்களை திணிக்க தொடங்கிவிடுவார்கள். மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு நடக்கும்போது நாம் எதார்த்ததுடன் நெருக்கமாக வாழ்கிறோம்.

ஆனால், அதிகளவு கருத்துத்திணிப்புகள் ஏற்படும்போது நாம் நம்முடைய சுயமுடிவுகளை எடுக்க முடியாமல் தயங்குகிறோம். இதனால் யாரும் இல்லாத சூழ்நிலை ஏற்படும்போது நம்மால் எந்த முடிவையும் சொந்தமாக எடுக்க முடியாமல் போய் விடுகிறது. பல கோணங்கள் சரியான முடிவை எடுக்க உதவினாலும் நமது சுயத்தை அவை அழித்துவிடும். இதனை சில ராசிக்காரர்களால் எப்பொழுதும் தடுக்க முடியாது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் கருத்துக்களால் எளிதில் பாதிக்கப்படுவார்கள் என்று பார்க்கலாம்.

விருச்சிகம்
உங்களை உற்சாகப்படுத்தும் ஒரு குணம் என்றால் அது எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதுதான். இதனை கடைபிடிக்க உங்களுக்கு எப்பொழுதும் உங்களுடைய அறிவு மட்டும் போதாது. பிறரை பின்பற்றுவது உங்களுக்கு இயற்கையாகவே இருக்கும் குணமாகும். உங்களின் ராசி பெரும்பாலும் ஆதிக்கமிக்கதாகவும், ஆக்ரோஷமானதாகவும் அறியப்பட்டாலும் நீங்கள் எப்பொழுதும் பிறரை பின்பற்றுபவர்தான். சூழ்நிலைகள் உங்களை அழுத்தும்போது நீங்கள் உங்கள் பேச்சை கேட்கமாட்டிர்கள்.

கும்பம்
நீங்கள் உங்களை வழிநடத்திப்பவராக நினைக்கலாம் ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு பின்பற்றுபவர்தான். பிற ராசிகளை காட்டிலும் நீங்கள் அதிகம் மற்றவர்களின் கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்படுவீர்கள். உங்கள் மனதில் ஒரு சிறந்த எண்ணம் தோன்றும் ஆனால் அது மற்றவர்களின் எண்ணமாக இருக்கும். எப்போதும் உங்களுக்கு இப்படித்தான் நடக்கும். நீங்கள் மற்றவர்களின் கருத்தை கேட்டு நடப்பீர்கள், ஆனால் அதனை உங்கள் கருத்தென நம்புவீர்கள். அதன்படியே நடக்கவும் செய்வீர்கள்.

மிதுனம்
உங்களுக்கு எப்பொழுதும் சரியான திசையை காண்பிக்க ஒருவர் வேண்டும் இல்லையெனில் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள். உங்களின் சொந்த முடிவுகள் மீது உங்களுக்கே எப்பொழுதும் சந்தேகம் இருக்கும், அதனாலேயே நீங்கள் விரைவான முடிவுகளை எப்போதாவதுதான் எடுப்பீர்கள். நீங்கள் உங்களுடைய பழைய வழிகளிலேயே தடுமாறி கொண்டிருக்கும்போது மற்றொருவர் அதைவிட சிறப்பான வழியோடு வரும்போது நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ள தயங்கமாட்டிர்கள்.

துலாம்
நீங்கள் எப்பொழுதும் அதிகமான நபர்கள் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள், நீங்கள் ஒரு தனிவழியில் அதை பார்த்தாலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பில் மற்றவர்களின் கருத்தையே ஏற்றுக்கொள்வீர்கள். உங்களை பற்றி உங்களுக்கே நிறைய சந்தேகங்கள் இருக்கும், அதனால் உங்களின் சொந்த கருத்துக்களை நீங்களே எப்பொழுதும் நம்பமாட்டிர்கள். இதனாலேயே நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களால் எளிதில் பாதிக்கப்படுபவர்களாக மாறிவிடுகிறீர்கள்.

கடகம்
உங்களை மற்றவர்கள் வந்து அவர்களின் கருத்தை கூறி குழப்ப வேண்டுமென்ற அவசியமே இல்லை. ஏனெனில் நீங்கள் எப்பொழுதுமே மற்றவர்களின் கருத்துக்களை கேட்பதற்கு தயாராகத்தான் இருப்பீர்கள். அதிலிருந்து உங்களுக்கு தேவையானவற்றை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்கள் உங்களை குழப்பாது மாறாக அது உங்களுக்கு நன்மையை செய்யும் என்று நம்புவீர்கள்.

மீனம்
நீங்கள் முடிவெடுக்க வேண்டுமென்று விரும்பினால் எப்பொழுதும் ஒரு துணையை தேடுவீர்கள். ஏனெனில் உங்களின் கருத்துக்கள் மீது உங்களுக்கு எப்பொழுதும் நம்பிக்கை இருக்காது அதனால் அனைத்திற்கும் மற்றவர்களின் கருத்தை நாடுவீர்கள். நீங்கள் எப்பொழுதும் குறைவாகவே நம்புவீர்கள் அது உங்களையே இருந்தாலும் சரி, அதனால்தான் மற்றவர்களின் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அப்போதுதான் நீங்கள் பாதுகாப்பாகவும் உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications