For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் இந்த செயல்கள் உங்களுக்கு முன்னோர்களின் கோபத்தையும், சாபத்தையும் பெற்றுத்தரும் தெரியுமா?

இறந்தவர்களுக்கு முறையாக இறுதிச்சடங்குகள் செய்யவில்லை எனில் அவர்களின் ஆன்மா பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்.

|

இந்து மதத்தில் திதி கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் மரணத்தை நம்மால் தடுக்க இயலாது, ஆனால் மரணத்திற்கு பிறகான வாழ்க்கையை திதி கொடுப்பதன் மூலம் கஷ்டங்கள் இல்லாததாக மாற்றிக்கொள்ளலாம். இறந்தவர்களுக்கு முறையாக இறுதிச்சடங்குகள் செய்யவில்லை எனில் அவர்களின் ஆன்மா பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்.

Mistakes that provoke the wrath of ancestors

ஒவ்வொரு ஆண்டும் பத்ரபத மாதத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காகவே 16 நாட்கள் வரும். தங்களின் முன்னோர்களுக்கு பித்ரு கொடுக்க இந்துக்கள் கடுமையான வழிமுறைகளை பின்பற்றுவார்கள். ஆனால் நீங்கள் அப்போது செய்யும் சில தவறுகள் உங்களுக்கு முன்னோர்களின் சாபத்தை பெற்றுத்தரும். பித்ரு காலத்தின் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பித்ரு சேவை

பித்ரு சேவை

திதி கொடுப்பது என்பது உங்களின் இறந்த உறவினர்களுக்கும், உங்களின் அன்பான இறந்த உறவினர்களுக்கும் அவர்கள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தும் விதமாக நடத்தப்படுவதாகும். உஙக்ளின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்ளும்படி அவர்களை அழைப்பதற்கு செய்யப்படுவதாகும்.

தோஷம்

தோஷம்

இந்த சடங்கானது அனைத்து வேதங்களிலும், புராணங்களிலும் கூறப்படும் ஒன்றாகும். உங்கள் முன்னோர்களிடம் மன்னிப்பு கேட்கவும், அவர்களின் ஆசீர்வாதத்தை பெறவும் செய்யப்படும் ஒன்றாகும். அதேசமயம் இந்த சடங்கின் போது நீங்கள் செய்யும் தவறுகள் உங்கள் முன்னோர்களின் கோபத்தை அதிகரிப்பதோடு உங்களுக்கு பித்ரு தோஷத்தையும் ஏற்படுத்தும்.

பின்விளைவுகள்

பின்விளைவுகள்

உங்களுக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டுவிட்டால் எவ்வளவு நேர்மையாகவும், கடினமாகவும் உழைத்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. உங்களின் அனைத்து காரியங்களிலும் தடைகள் ஏற்படுவதை உங்களால் தடுக்க முடியாது.

MOST READ: உங்க நட்சத்திரத்த மட்டும் சொல்லுங்க... உங்களுக்கு வளமான எதிர்காலம் எதுல இருக்குனு நாங்க சொல்றோம்...!

கர்மவினை

கர்மவினை

இத்தகைய சூழ்நிலைகளை சந்திக்கும் போது நாம் கடந்த காலம் அல்லது நிகழ்காலத்தில் என்ன தவறுகள் செய்தோம் என்பதை நினைத்து பார்க்க வைக்கும். இது நமது கர்மவினையால் ஏற்படுகிறதா அல்லது பித்ரு தோசத்தாலா என்ற குழப்பம் நமக்குள் ஏற்படும்.

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

நமது முன்னோர்களின் கோபத்தை தூண்டுவதையோ அல்லது அவர்கள் சாபம் கொடுப்பதையோ தவிர்க்க எண்ணினால் திதி கொடுக்கும் சடங்கின் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் அந்த காலகட்டத்தில் நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

திதி கொடுக்கும் அன்று காலையில் எழுவதில் இருந்து, பூஜையின் போதும், சாப்பிடும் போதும், பொருட்களை வாங்கும்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். திதி தரும் நாளன்று என்னென்ன செய்யக்கூடாது ஏன்னு மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ: திடீரென வரும் அடிவயிற்று வலியை நொடியில் விரட்ட வீட்டுல இருக்கும் இந்த பொருளே போதும்...!

பூண்டு மற்றும் வெங்காயத்தை தவிர்க்கவும்

பூண்டு மற்றும் வெங்காயத்தை தவிர்க்கவும்

இந்து சாஸ்திரங்களின் படி வெங்காயம் மற்றும் பூண்டானது தசமிக் என்று அழைக்கப்படுகிறது. இது நமது உணர்வுகளை மாற்றக்கூடும் என்று நம்பப்படுகிறது. திதி கொடுக்கும் காலக்கட்டத்தில் திதி கொடுப்பவர் இந்த இரண்டையும் சாப்பிட வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

கொண்டாட்டங்கள் கூடாது

கொண்டாட்டங்கள் கூடாது

திதி கொடுக்கும் காலக்கட்டத்தில் ஒருவர் எந்த கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது, அனைத்திலிருந்தும் விலகியிருக்க வேண்டும். திதி கொடுப்பவர் அவரின் மனதை ஒருநிலைப்படுத்தி வைத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது உங்கள் மீதான உங்கள் முன்னோர்களின் கோபத்தை அதிகரிக்கும்.

புதிதாக எதையும் தொடங்கக்கூடாது

புதிதாக எதையும் தொடங்கக்கூடாது

இந்த காலகட்டமானது புனிதமற்ற காலமாக கருதப்படுகிறது, எனவே இந்த சமயத்தில் எதையும் புதிதாக தொடங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. வீட்டிற்கு எந்த பொருளும் புதிதாக வாங்கக்கூடாது, எந்தவொரு நல்ல செய்தியையும் வெளியில் கூறக்கூடாது. சடங்குகள் முடிந்த பின் தாராளமாக கூறிக்கொள்ளுங்கள்.

மது மற்றும் இறைச்சி

மது மற்றும் இறைச்சி

இந்த காலமானது உங்கள் முன்னோர்களுக்கானது எனவே அந்த சமயத்தில் மதுவும், அசைவ உணவுகளும் அறவேக்கூடாது. இது உங்களுக்கு முன்னோர்களின் சாபத்தை பெற்றுத்தரும். இதனால் திடீரென கடினமான சூழ்நிலைகளும், தொடர் தோல்விகளும் ஏற்படும்.

MOST READ: அகோரிகள் ஏன் பிணங்களுடனும், பிணங்களுக்கு மத்தியிலும் உடலுறுவு வைத்துக்கொள்கிறார்கள் தெரியுமா?

பாலியல் உறவு

பாலியல் உறவு

இந்த காலகட்டத்தில் நகம் வெட்டுவது, முடி வெட்டுவது, சவர்மா செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. முக்கியமாக இந்த காலகட்டத்தில் ஒருபோதும் பாலியல் உறவில் ஈடுபடக்கூடாது. தூமையில்லாத உடலும், மனதும் உங்களுக்கு முன்னோர்களின் சாபத்தை பெற்றுத்தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mistakes that provoke the wrath of ancestors

The mistakes which you commit during the time of Pitru Paksha will get you the wrath of the ancestors.
Desktop Bottom Promotion