Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
திங்கள்கிழமை அன்று விநாயகரை இப்படி வழிபடுவது உங்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்து செல்லும்...!
உங்களுக்கு எவ்வளவுதான் திறமை இருந்தாலும் கடவுளின் அருள் உடனிருப்பது உங்களுக்கு கூடுதல் பலம்தான்.
ஒவ்வொரு வியாபாரத்தின் வெற்றி என்பதும் பல்வேறு காரணங்களை சார்ந்தது. உங்கள் தொழிலில் சிலவற்றை மட்டும்தான் நீங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும், பலவற்றை கட்டுப்படுத்த இயலாது. ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்த திறமையும், அதிர்ஷ்டமும் கண்டிப்பாக வேண்டும்.

உங்களுக்கு எவ்வளவுதான் திறமை இருந்தாலும் கடவுளின் அருள் உடனிருப்பது உங்களுக்கு கூடுதல் பலம்தான். கடவுளின் அருளை பெறுவதற்கு சிறந்த வழி அவர்களுக்கு பிடித்த சக்திவாய்ந்த மந்திரங்களையும் கூறி பூஜை செய்து வழிபடுவதுதான். இந்த பதிவில் உங்கள் வியாபாரத்தை வெற்றிகரமானதாக மாற்றும் சக்திவாய்ந்த மந்திரங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஆஞ்சநேய மந்திரம்
இந்த மந்திரத்தை செவ்வாய் கிழமையில் கூறி வழிபடுவது நல்லது. அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பூஜையறையையும், ஆஞ்சநேயரின் சிலையையும் சுத்தம் செய்யவும். தட்டில் மஞ்சள், குங்குமம் மற்றும் அரிசி வைத்து ஆஞ்சநேயரை வழிபடவும்.

எப்படி கூற வேண்டும்?
நெய் விளக்கேற்றி வைத்து மனதை ஒருமுகப்படுத்தி ஆஞ்சநேயரை நினைத்து 25 நிமிடம் மந்திரத்தை கூறவும். உங்களின் தொழில் போட்டிகள் எல்லாம் குறைந்து விரைவில் உங்கள் தொழில் நல்ல முன்னேற்றத்தை அடையும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் என்னவெனில் " ஓம் எங் ஹ்ரிங் ஹனுமதே ராமதூதாய லங்காவித்வாஸ்னாய் அஞ்சனி கரம் சம்பூதா ஷகினி டாகினி டாகினி வித்வான்சான்ய கிளிக்கிளி புபுகரேன் விபீஷணாய ஹனுமத்தேவாயா ஓம் ஹ்ரிங் ஷ்ரிங் ஹாங் ஹா பாத் ஸ்வாஹா "

தொழில் வெற்றிக்கான பிள்ளையார் மந்திரம்
தடைகளை நீக்கி வளங்களை அள்ளி தருபவர் வினை தீர்க்கும் விநாயகர். விநாயகரை வழிபடுவதற்கு மிகசிறந்த நாள் திங்கள் கிழமை ஆகும். அதுமட்டுமின்றி சங்கடஹர சதுர்த்தியன்று பிள்ளையார் மந்திரங்களை கூறி வழிபடுவதும் வெற்றியையும், செல்வத்தையும் பெற்றுத்தரும்.

எவ்வாறு செய்ய வேண்டும்?
திங்கள் கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு விநாயகரை தயார் பண்ணவும். சிவப்பு நிற துணி மற்றும் பிள்ளையாருக்கு பிடித்த மலர்களை வைத்து " ஓம் ஷ்ரீம் கம் சவ்பாக்ய கணபதயே வர்வார்த்த சர்வஜன்ம மெய்ன் வஷாமன்ய நமஹ " என்ற மந்திரத்தை 108 முறை கூறவும். விநாயகருக்கு தேங்காய் படைத்து பூஜையின் இறுதியில் அதில் சிறுபகுதியை பிரசாதமாக எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பார்க்கலாம்.

லட்சுமி மந்திரம்
இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை கூறி வழிபடுவது உங்களுக்கு சிறந்த பலன்களை தரும். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்துவிட்டு இரு வெள்ளித்தட்டில் கொஞ்சம் அரிசிகளை எடுத்து கொள்ளவும். அதில் லக்ஷ்மி படம் அல்லது சிலையை வைத்து அதனுடன் 9 நாணயங்களையும் வைக்கவும்.

எப்படி செய்ய வேண்டும்?
அனைத்து நாணயங்களிலும், லஷ்மி படத்திலும் மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனம் வைக்கவும். ஒரு தேங்காயில் குங்குமத்தால் ஸ்ரீ என்று அதனையும் லக்ஷ்மிக்கு முன்னால் வைக்கவும். மந்திரத்தை 108 முறை கூறி ஆரத்தி காட்டவும். நீங்கள் நினைத்து பார்க்காத உயரத்திற்கு இந்த வழிபாடு உங்களை அழைத்து செல்லும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் " ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் ஷ்ரீம் கமலே கமலாலய ப்ரஸீத் ப்ரஸீத் ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் ஷ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ ".

பாலாஜி மந்திரம்
வெங்கடேஸ்வரா என்று அழைக்கப்படும் பாலாஜி திருமாலின் சக்தி வாய்ந்த அவதாரங்களில் ஒருவர் ஆவார். வியாழக்கிழமையில் இவரை வழிபடுவது மிகவும் சிறப்பாகும். அதிகாலையில் குளித்து விட்டு வெங்கடேஸ்வரை அலங்கரித்து மந்திரத்தை 108 முறை கூறவும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் " வினா வெங்கடேஷம் நனதோ நனதா சதா வெங்கடேஷம் ஸ்மாரமி ஸ்மாரமி - ஹரே வெங்கடேஷ ப்ரசீத ப்ரசீத பிரியம் ப்ரயாச்சா ப்ராயாச்சா ".



Click it and Unblock the Notifications