Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம்
மைக்கல் ஜாக்சன் மாதிரி மாறுவதற்காக $30,000 செலவு செய்த மனிதர்... இப்படி ஒரு ரசிகரா?
$30,000 செலவு செய்து மைக்கல் ஜாக்சன் போல் மாறிய நபர் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.இது பற்றிய தொகுப்பு தான் இது.
நம்மில் பலர் பல பிரபலங்களின் தீவிர விசிறியாக இருப்போம். இன்னும் சிலர் விசிறி என்ற நிலையில் இருந்து சற்று அதிகரித்து வெறியர்கள் என்னும் நிலையில் இருப்பார்கள். தான் விரும்பும் பிரபல நபருக்காக எதையும் செய்யும் துணிவும் தைரியமும் அவர்களுக்கு உண்டு.

ஆனால் ஒரு நபர், தான் விரும்பும் அந்த பிரபல நபரின் முகத்தைப் போலே தன்னுடைய முகத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இதனைக் கேட்கவே விநோதமாக இருக்கிறது அல்லவா? வாருங்கள் இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

மைக்கல் ஜாக்சன்
மறைந்த மைக்கல் ஜாக்சன் ஒரு சிறந்த பாடகர் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். உலகம் முழுக்க இவருக்கு விசிறிகள் உண்டு. இவர் மீது பற்று கொண்ட ஒரு நபர் இவரைப் போலவே முக அமைப்பு வேண்டும் என்று விரும்பி பல முறை அவரது முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவே இந்தப் பதிவு.

ஒப்பனை வழி முறை
லியோ ப்லங்கோ என்பவர் அர்ஜென்டினாவை சேர்ந்தவர். இவருக்கு வயது 22. இவர் இதுவரை $30,000/- செலவு செய்து பல்வேறு விதமான பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை மைக்கல் ஜாக்சன் போல் மாற்றி அமைத்திருக்கிறார். தனது 15 வயது முதல் இன்னும் பல்வேறு ஒப்பனை வழி முறைகளையும் பின்பற்றி வருகிறார்.
மைக்கல் ஜாக்சன் போல் முக அமைப்பு பெறுவதே தன்னுடைய விருப்பம் என்று லியோ கூறுகிறார். அவரது இந்த செயல் புகழ்பெற்ற பாப் மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் செயல் என்றும், அதனால் தான் அவர் தனது ஹீரோவைப் போலவே தோற்றமளிக்க விரும்புகிறார் என்றும் அவர் வெளிப்படுத்தினார்

தீவிர ரசிகர்
ஆனால் இவருடைய இந்த செய்கையால் இவரின் தாயார் மிகவும் வருந்துகிறார். பல நேரங்களில் தன்னுடைய மகன் லியோவா இது என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அவருடைய முக மாற்றம் இருப்பதாக அவர் கூறுகிறார். லியோவிற்கு தனது சிறு வயது முதல் மைக்கல் ஜாக்சன் மீதான ஒரு பிடிப்பு இருந்து வந்தது.
தனது ஹீரோவைப் போல் தானும் இருக்க வேண்டும் என்று அவர் அப்போதே முடிவு செய்திருந்தார் அது முதல் 11 பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் இதர வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார் லியோ. ஆனால் அவருடைய இந்த மாற்றத்தில் இதுவரை அவருக்கு முழுமையான திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கவில்லை. முற்றிலும் மைக்கல் ஜாக்சன் போல் தான் தோற்றமளிக்கவில்லை என்ற உணர்வு அவருக்கு இருப்பதாகவும் இன்னும் சில சர்ஜரிகள் செய்து அதனை முழுமை படுத்த வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் தெரிவிக்கிறார் .

வலைத்தளங்களில்
வலைத்தளங்களில் லியோவைப் பின்தொடரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உண்டு. மேலும் தெருக்களில் நடனம் புரிவதைப் பலரும் பார்த்து பாராட்டுவதாகவும் லியோ தெரிவிக்கிறார். இருப்பினும் பிளாஸ்டிக் சர்ஜரி மீது லியோவிற்கு இருக்கும் மோகம் குறித்து அவன் தாய் அவனைக் கண்டித்திருக்கிறார்.
முகத்தின் வடிவத்தை திருத்திக் கொள்வது என்பது முடி திருத்தம் செய்து கொள்வது போன்று எளிதானதல்ல, இதில் பல்வேறு ஆபத்துகள் நிறைந்துள்ளது என்றும் அவன் தாய் கூறி இருக்கிறார். பார்க்க பெருமளவில் மைக்கல் ஜாக்சன் போல் தோற்றமளிக்கும் லியோ, இன்னும் நிறைய மாறுதல்களை மேற்கொள்வதால் மட்டுமே முழுமையாக மைக்கல் ஜாக்சன் போல் மாற வேண்டும் என்ற கனவு நினைவாகும் என்றும் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
