For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வண்டி ஓட்டும்போது மூக்க சொறிஞ்சதுக்காக அபராதமா?... டேய் இதுக்குலாமா அபராதம் போடுவீங்க...

வாகனம் ஓட்டும் முகத்தை சொரிந்ததற்காக அபதாரம் விதித்த சீன அரசு, இந்த கொடுமையைப் பற்றித் தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

|

வாகனம் ஓட்டும் போது போன் பேசுவது என்பது தவறான செயலாகும். இதற்கு கடுமையான தண்டனைகளையும் அபதாரத்தையும் எல்லா நாட்டிலும் விதிக்கத் தான் செய்கிறார்கள்.

Man Gets Fined for Scratching His Face While Driving

ஆனால் நம்ம சீன அரசு ச்சே... வாகன ஓட்டும் போது நிம்மதியா சொறியக் கூட கூடாதப்பா" என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. வாகனம் ஓட்டும் முகத்தை சொரிந்ததற்காக அபதாரம் விதித்த சீன அரசு, இந்த கொடுமையைப் பற்றித் தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறான குற்றச்சாட்டு

தவறான குற்றச்சாட்டு

ஒரு மனிதன் தன்னுடைய காரில் வரும் போது மொபைலை பயன்படுத்தியதற்காக இந்த குற்றச்சாட்டு சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு தவறான குற்றச்சாட்டு என்று அந்த மனிதர் கருதியுள்ளார். ஆமாங்க உண்மையில் அவர் முகத்தை தான் சொரிந்துள்ளார். அதுக்கு போய் நம்ம சீன போலீஸ் அபதாரம், கோர்ட்டு கேஸினு அவர ஒரு வழி ஆக்கிவிட்டதாம். இந்த வேடிக்கையான சம்பவம் சீனாவின் கிழக்கு சாண்டோங் மாகாணத்தில் உள்ள ஜினானில் நடந்துள்ளது

MOST READ: எண்ணெயை ஊசிமூலம் செலுத்தி இப்படி ஆகியிருக்கும் 50 வயசு பாடிபில்டர்... என்ன பன்றாரு பாருங்க...

வண்டி ஓட்டும்போது

வண்டி ஓட்டும்போது

வாகனம் ஓட்டும் போது அவர் தவறாக போன் பயன்படுத்தி உள்ளார் என்று சட்டத்தை மீறியதற்காக அவர் வீட்டுக்கே நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த லட்டருடன் அவர் காரில் உட்கார்ந்து இருந்த ஒரு போட்டோ க்ளிப்பையும் அனுப்பி உள்ளனர். அந்த புகைப்படத்தை பார்க்கும் போது அவரது வலது கை அவரது கன்னத்தில் இருந்துள்ளது. ஆனால் அந்த மனிதற்கு ஒன்னுமே புரியவில்லை.

என்ன கொடுமைடா

என்ன கொடுமைடா

படத்தை உற்று பார்க்கும் போது தான் அவருக்கு உண்மையே விளங்கியுள்ளது. அவர் அரிப்பிற்காக முகத்தை சொறியும் போது எடுத்த போட்டோ எடுக்கப்பட்டு உள்ளது. அது பார்ப்பதற்கு அவர் கையில் போன் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தவறாக குற்றம் சாட்டப்பட்ட பின்னரும், அவர் தனது உரிமத்தில் இரண்டு பெனால்டி புள்ளிகளைப் பெற்றார், மேலும் அவர் 7.25 டாலர் அபராதம் செலுத்த வேண்டியிருந்தது.

MOST READ: கோவிலுக்குள் புகுந்த முதலை... மக்கள் அத பார்த்து என்ன பண்ணாங்க தெரியுமா?

தனது கருத்து

தனது கருத்து

தனது பிரச்சனையை சீன போலிஸிடம் முறையிட்டு உள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு கொஞ்சம் கூட செவி சாய்க்கவில்லையாம். மேலும் இந்த பிரச்சனையை எங்களால் சரி பண்ண முடியாது என்றும் கைவிரித்து உள்ளனர். ஆனால் அந்த மனிதர் இதை சும்மா விடவில்லை. தான் பட்ட கஷ்டத்தை சோஷியல் மீடியாவில் போட்டு கிழித்துள்ளார். "நாம் வாகனம் ஓட்டும் போது எப்படி கை கால்களை தொடுவமோ அப்படித்தான் நான் என் முகத்தை சொறிந்தேன்.

ஆனால் அந்த நேரத்தில் போலீஸ் எடுத்த போட்டோவை வைத்துக் கொண்டு நான் மொபைலில் பேசி உள்ளேன் என்று என்னை தவறாக குற்றம் சாட்டியுள்ளது" என்று கவலையுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வைரலாக பரவி உள்ளது. இப்பொழுது தான் ஜினான் போக்குவரத்து அதிகாரிகள் தொழில்நுட்ப பிழையை ஏற்றுக்கொண்டு அவருக்கு உதவி உள்ளனர்.

ஆட்டோமேட்டிக் இமேஜ் கேப்சர்

ஆட்டோமேட்டிக் இமேஜ் கேப்சர்

இது குறித்து சீன அரசாங்கம் கூறியதாவது எங்கள் பாதுகாப்பு கேமராக்கள் எல்லாம் ஆட்டோமேட்டிக் தொழில் நுட்பம். வாகன ஓட்டுபவர்களின் அசைவை பொருத்து ஆட்டோமேட்டிக் ஆக இமேஜ் கேப்சர் செய்யக் கூடியது. இப்படித்தான் அவர் கன்னத்தில் சொறிந்தது தவறாக க்ளிக் செய்யப்பட்டு அவர் கையில் போன் இருப்பதாக ஒரு தவறான யூகத்தை ஏற்படுத்தி விட்டது. இனி இந்த மாதிரி தவறு நேராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சீன அரசு கூறியுள்ளது.

MOST READ: எப்ப பார்த்தாலும் எதாவது சாப்பிடணும்னு தோணுதா? அப்போ உங்களுக்கு இந்த மாதிரி இருக்குமே...

மக்களின் கருத்து

மக்களின் கருத்து

இந்த ஆட்டோமேட்டிக் சிஸ்ட முறையால் நாங்கள் ஒரு ரோபோ மாதிரி செயல்பட வேண்டியுள்ளது என்று மக்கள் தங்கள் கவலையை தெரிவித்து உள்ளனர்.

என்னங்க இத பத்தி நீங்க என்ன நினைக்கீங்க? அந்த ஊரே அப்படின்னா நம்ம ஊருல. உஷார் ஐயா உஷாரு .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Man Gets Fined for Scratching His Face While Driving

There is no doubt that artificial intelligence has come a very long way in the last few years, but unfortunately, it has not yet been successful to differentiate between minute things.
Desktop Bottom Promotion