Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
கடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது என்பது ஈசனின் அன்பையும், ஆசீர்வத்தையும் பெறுவதற்கான எளிய வழி ஆகும்.
இந்து மதத்தின் மிகவும் முக்கியமான கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். " அவனின்றி ஒரு அணுவும் அசையாது " என்று கூறுவது பரம்பொருள் சிவபெருமானுக்காகத்தான். அழித்தலை தொழிலாக கொண்ட ஈசன் மனிதர்களின் நலனுக்காகவே இருப்பவர் ஆவார். அழித்தல் என்றால் மனிதர்களின் மனதில் இருக்கும் தீய எண்ணங்களை அழித்து அவர்களை நல்வழிப்படுத்தவுது என்றும் ஒரு பொருள் இருக்கிறது.

பெரும்பாலான கோவில்களில் சிவபெருமான் லிங்க வடிவத்தில்தான் வழிபட படுகிறார். சிவலிங்கம் என்பது உலகத்தை பிரதிபலிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது என்பது ஈசனின் அன்பையும், ஆசீர்வத்தையும் பெறுவதற்கான எளிய வழி ஆகும். எந்தெந்த பொருளை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பால் அபிஷேகம்
பால் அபிஷேகம் என்பது பொதுவாக அனைத்து கடவுள்களுக்கும் செய்யப்படுவதாகும். ஆனால் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யும்போது உங்களுக்கு சிவபெருமான் நீண்ட ஆயுளை வழங்குவார்.

தேன் அபிஷேகம்
தேன் அபிஷேகம் மிகவும் மகிமை வாய்ந்ததாகும். ஆனால் அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படும் தேன் சுத்தமானதாக இருக்க வேண்டும். சுத்தமான தேனை கொண்டு அபிஷேகம் செய்யும்போது ஈசன் உங்கள் வாழ்வில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும், தடங்கல்களையும் நீக்குவார்.

நெய் அபிஷேகம்
வாழ்க்கையில் பணத்தை சம்பாரிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியமானது ஆரோக்கியத்தையும் சம்பாரிப்பது ஆகும். ஆரோக்கியமான வாழ்விற்கு சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்யுங்கள்.

பஞ்சாமிர்த அபிஷேகம்
ஐந்து பொருட்களின் கலவையான வாழைப்பழம், வெள்ளம், சர்க்கரை, பேரீச்சை மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்த அபஷேகம் உங்களுக்கு செல்வம் மிகுந்த செழிப்பான வாழ்க்கையை பெற்றுத்தரும்.

பஞ்சகாவ்ய அபிஷேகம்
பஞ்சகாவ்யம் என்பது பால் , தயிர், நெய், பசுமாட்டின் கோமியம் மற்றும் சாணி ஆகியவை கலந்த கலவையாகும். இதனை கொண்டு சிவலிங்த்திற்கு அபிஷேகம் செய்வது உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும்.

தயிர் அபிஷேகம்
உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றால் அது நல்ல குழந்தைகள்தான். உங்களுக்கு நல்ல குழந்தைகள் வேண்டுமென்றும், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்பினால் சிவபெருமானுக்கு தயிரை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்.

நல்லெண்ணெய் அபிஷேகம்
வாழ்க்கையில் வெற்றிக்கும் புத்திக்கூர்மை என்பது மிகவும் அவசியமாகும். உங்களின் அறிவாற்றலை அதிகரிக்க சிவபெருமானுக்கு நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்.

சந்தன அபிஷேகம்
உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்றாலும், நல்ல ஆரோக்கியம் வேண்டுமென்றாலும் சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யுங்கள். வாழ்க்கையில் அணைத்து நலங்களும் கிடைக்க மஞ்சளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்.

அரிசி மாவு அபிஷேகம்
வாழக்கையில் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே கடன் பிரச்சினைதான். கடன் பிரச்சினை நீங்க அரிசி மாவை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுங்கள். இளநீரை கொண்டு அபிஷேகம் செய்வது உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த நலனையும் பாதுகாக்கும்.

கரும்பு சாறு அபிஷேகம்
கடனையும், பகையையும் ஒருபோதும் மிச்சம் வைக்கக்கூடாது. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பகை விலக கரும்பு சாறு கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யுங்கள்.

விபூதி
உங்கள் வேலை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பதவி உயர்வு போன்ற வேண்டுதல்களுக்கு சிவனுக்கு விபூதியால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.

எலுமிச்சை சாறு அபிஷேகம்
அனைவருக்குமே மரணத்தை நினைத்து பயம் இருக்கும். ஆனால் அதை நினைத்து பயந்து கொண்டே இருந்தால் நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக வாழமுடியாது. எனவே மரணம் பற்றிய பயம் போக வேண்டுமெனில் எலுமிச்சை சாறை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். சர்க்கரை கொண்டு அபிஷேகம் செய்வது எதிரிகள் பற்றிய பயமின்றி வாழவைக்கும்.



Click it and Unblock the Notifications
