For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமான் உடலில் மறைந்துள்ள இந்த ரகசியங்களை இதற்கு முன் கவனித்துள்ளீர்களா?

சிவபெருமானின் உடலில் எந்தவித ஆபரணங்களும் இருக்காது மேலும் ஜடாமுடியுடனும், கழுத்தில் பாம்பு, இடுப்பில் புலித்தோல் என அவரின் உருவமே ஒரு துறவி போல காட்சியளிக்கும்.

|

இந்து மதத்தின் மிகவும் முக்கியமான கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். ஆதியும், அந்தமும் அற்ற ஈசன்தான் பரம்பொருளாக இருந்து அனைத்தையும் தீர்மானிப்பவராக இருக்கிறார். அதனால்தான் அவர் ஆதிமூலன் என்று அழைக்கப்படுகிறார். மொத்தத்தில் சிவபெருமான் என்பவர் ஞானம், சக்தி, சமநிலை, சுயஉணர்வு போன்ற பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தின் வெளிப்பாடாவார்.

Life Lessons Should Learn From Lord Shivas Body

மற்ற கடவுள்களை போல சிவபெருமானின் உருவம் மிகவும் வித்தியாசமானது. சிவபெருமானின் உடலில் எந்தவித ஆபரணங்களும் இருக்காது மேலும் ஜடாமுடியுடனும், கழுத்தில் பாம்பு, தலையில் கங்கை, இடுப்பில் புலித்தோல் என அவரின் உருவமே ஒரு துறவி போல காட்சியளிக்கும்.ஆனால் அவரின் உடலில் இருக்கும் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கையின் ரகசியங்களை குறிப்பது ஆகும். இந்த பதிவில் சிவபெருமானின் உடல் நமக்கு கூறும் வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படர்ந்த ஜடா முடி

படர்ந்த ஜடா முடி

மனது, உடல் மற்றும் ஆன்மா மூன்றுமே ஒருநிலையில் இருக்க வேண்டும். இதுதான் உங்கள் வாழ்க்கையின் அனைத்து செயல்களின் வெற்றிக்கான முதல் மந்திரம் ஆகும். அமைதியான மனதின் நன்மைகளில் முக்கியமான ஒன்று இது உங்கள் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்கிறது, இது உங்களின் மனஅழுத்தம், தலைவலி, வயிற்றுவலி என அனைத்திலிருந்தும் பாதுகாக்கும். எனவே அமைதியாக உங்கள் பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.

மூன்றாவது கண்

மூன்றாவது கண்

ஈசனின் மூன்றாவது கண் உணர்த்துவது என்னவெனில், எந்தவொரு செயலையும் மனக்கண்ணால் பார்க்கும்போது அது சாத்தியமற்றதா அல்லது செய்ய முடியாததா என்ற தெளிவிருக்கும். இதைத்தான் சிவனின் மூன்றாவது கண் உணர்த்துகிறது. எந்தவொரு பிரச்சினையையும் மனக்கண்ணால் பார்ப்பதே அதனை எளிதில் சமாளிக்க உதவும்.

திரிசூலம்

திரிசூலம்

ஈசனின் சக்தியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவரின் கையில் இருக்கும் திரிசூலம்தான். அது உங்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால், உங்கள் மனது,அறிவு மற்றும் ஈகோ இந்த மூன்றையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே நீங்கள் எப்பொழுதும் தனித்துவத்துடன் இருப்பீர்கள். நீங்கள் இவற்றை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டு விட்டால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

தியான நிலை

தியான நிலை

சிவபெருமான் பெரும்பாலான நேரத்தில் தியான நிலையில்தான் இருப்பார். அதற்கு காரணம் தியான நிலையில் இருக்கும்போது நீங்கள் அமைதியாக இருப்பதுடன் கவனமாகவும் இருப்பீர்கள். போராட்டம் நிறைந்த சூழ்நிலைகளில் அமைதியாக இருந்து நீங்கள் எடுக்கும் முடிவு எப்பொழுதும் தெளிவானதாக இருக்கும், இது உங்களை எளிதில் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும். உங்கள் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது.

MOST READ: வெளியே செல்லும் போது பிணத்தை பார்த்தால் நல்ல சகுனம் என்று கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

உடலில் இருக்கும் சாம்பல்

உடலில் இருக்கும் சாம்பல்

ஈசனின் உடலில் இருக்கும் சாம்பல் உணர்த்துவது என்னவெனில் இந்த உலகத்தில் அனைத்துமே தற்காலிகமானதுதான். மக்கள் எப்பொழுதுமே தங்களின் அழகு, தங்களிடம் இருக்கும் பணம், சொத்து விஆற்றை நினைத்து பெருமைபட்டுக் கொள்வார்கள். ஆனால் இவை அனைத்துமே உங்களுடன் இறுதிவரை வரை போவதில்லை, கடைசியில் மிஞ்சுவது என்னவோ வெறும் சாம்பல்தான்.

நீலநிற தொண்டை

நீலநிற தொண்டை

ஈசனின் தொண்டை எப்போதும் நீல நிறத்தில் இருப்பதால்தான் அவருக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்தது. கோபத்தை அடக்கும் பொழுது அது உங்கள் நரம்புகளில் ஆத்திரத்தை உண்டாக்கும். ஆனால் இந்த கோபத்தை ஆக்கபூர்வமான செயலுக்கு பயன்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்படுவது எப்பொழுதும் உங்களுக்கு நல்லதல்ல, குறிப்பாக கோபத்தை வெளிப்படுத்துவது உங்களுக்கு சேதத்தைத்தான் உண்டாக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உடுக்கை

உடுக்கை

சிவபெருமானின் உடுக்கை ஆசைகள் மற்றும் தீயசக்திகளை உலகில் இருந்து விரட்டுவதாகும், அது போல உங்களின் மனதில் இருக்கும் ஆசைகளையும், வக்கிரங்களையும் விரட்ட உங்களுக்கென தனிவழி வைத்துக்கொள்ள வேண்டும். அது எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

MOST READ: இந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்கள் பெண்களை முதல் சந்திப்பிலேயே கவர்ந்து விடுவார்களாம் தெரியுமா?

பாம்பு

பாம்பு

சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் பாம்பு உணர்த்தவுது என்னவெனில் நமக்குள் இருக்கும் ஈகோவை கட்டுப்படுத்துவது. நமது ஈகோதான் நம்மை அழிக்கும் முதல் எதிரி ஆகும். உங்களுக்குள் கோபம், பகையுணர்வு, வஞ்சம் போன்ற எண்ணங்களை வளர்ப்பது இதுதான். எனவே உங்கள் ஈகோவை உடலாலும், மனதாலும் கட்டுப்படுத்த வேண்டுமென்பதே ஈசன் உணர்த்தும் பாடம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life Lessons Should Learn From Lord Shiva's Body

It is believed that Lord Shiva’s body is the school for mankind in itself. Here’s how his entire body symbolises true meaning of life.
Desktop Bottom Promotion