Latest Updates
-
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
மிதுன ராசிக்கு வக்ர நிலையில் சென்ற புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அதிக செலவழிக்காமல் எடையை குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட்' ஃபாலோ பண்ணுங்க.. -
Varalakshmi Vratham 2026: வரலட்சுமி விரதம் 2026 எப்போது? பூஜை நேரம், கலசம் அமைப்பது எப்படி போன்ற தகவல்கள் இதோ! -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
கொங்குநாடு சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப்போகுதாம் -
சனிபகவான் வக்ர நிலை அடைவதால் டிசம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் இவங்கதான்
இந்த மாவீரர்கள் தங்கள் தந்தையின் மரணத்திற்கு அவர்களே காரணமாக இருந்தார்களாம் தெரியுமா?
இந்த உலகில் மிகவும் ஆபத்தான இரண்டு அன்பும், அதிகாரமும். இந்த இரண்டும் ஒருவரை என்ன வேண்டுமென்றாலும் செய்ய வைக்கக்கூடும்.
அன்பு இருக்கும் இடத்தில் கண்டிப்பாக வலியும் இருக்கும். வலியை ஏற்படுத்தாத அன்பு உண்மையான அன்பாக இருக்க வாய்ப்பேயில்லை. அளவிற்கு மீறினால் நஞ்சாவது அமிர்தம் மட்டுமல்ல அன்பும்தான். அந்த வகையில் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்த அன்பினால் மட்டுமே முடியும்.

இந்த உலகில் மிகவும் ஆபத்தான இரண்டு அன்பும், அதிகாரமும். இந்த இரண்டும் ஒருவரை என்ன வேண்டுமென்றாலும் செய்ய வைக்கக்கூடும். அதற்கு சாதாரண மனிதர்கள் முதல் கடவுளின் அவதாரம் வரை யாருமே விதிவிலக்கல்ல. இந்த பதிவில் வரலாறு மற்றும் இதிகாசங்களின் படி தங்களின் தந்தையின் மரணத்திற்கு காரணமான மாவீரர்கள் யாரென்று பார்க்கலாம்.

தந்தையின் மரணம்
வரலாறு எப்பொழுதும் ஒரு மறைக்கப்பட்ட புத்தகமாகவே இருக்கிறது. ஏனெனில் நாம் படிக்கும் வரலாற்றில் பல நிகழ்வுகள் மறைக்கப்பட்டிருக்கிறது. நாம் மாவீரர்கள் என்று நினைக்கும் பலரும் அவர்களின் தந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்தார்கள் என்பது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

இராமர் - தசரதர்
இராமபிரான் அன்பு ,இரக்கம், கருணை, நேர்மை, அமைதி என அனைத்து நல்ல குணங்களும் நிறைந்தவராக இருக்கிறார். ஆனால் அவர் தந்தையான தசரதரின் மரணத்திற்கு அவர்தான் காரணமாக இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் தன் சகோதரன் மற்றும் மனைவியுடன் வனவாசத்திற்கு செல்வதற்கு முன் துயரத்தில் இருந்த தன் தந்தையை சந்திக்காமல் சென்றார்.

தசரதர் மரணம்
இராமர் அயோத்தியை விட்டு சென்று பிறகு இராமரின் பிரிவு அவரை துன்புறுத்தியது. அந்த தருணத்தில் அவருக்கு ஷ்ராவனின் பெற்றோர்கள் கொடுத்த சாபம் நினைவிற்கு வந்தது. அவர்கள் அளித்த சாபத்தின் படியே மகனின் பிரிவால் தசரதர் துடித்தார். புத்திர சோகத்தால் உயிரையும் விட்டார்.

நானா சாஹேப் - பாஜிராவ் பேஷ்வா
நானா சாஹேபின் தந்தை பாஜிராவ் பேஷ்வா யுத்தத்தின் போது மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், அவரின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது இதுதான் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவரின் உயிர் பிரிய காரணமாக இருந்தது அவருடைய குடும்பம்தான்.

பாஜிராவ் பேஷ்வா மரணம்
மரணப்படுக்கையில் இருந்த போது பாஜிராவ் தனது இரண்டாவது மனைவி மஸ்தானியை பார்க்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அவர் நானா சாஹேபால் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். பாஜிராவ் எவ்வளவோ கெஞ்சியும் நானா சாஹேப் அவரை மஸ்தானியை சந்திக்க அனுமதிக்கவில்லை. நானா சாஹேப் மரணம் வரை அவர்கள் இருவரையும் சந்திக்க அனுமதிக்ககூடாது என்று முடிவெடுத்த பிறகு அந்த சோகத்திலேயே பாஜிராவ் மரணித்தார்.

ஔரங்கசீப் - ஷாஜகான்
முகலாய பேரரசர் ஷாஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜின் பிரிவால் மனமுடைந்து இறந்தார் என்று நாம் அறிவோம். ஆனால் அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது அவரின் மகன் ஒளரங்கசீப் தன்னுடைய சகோதரர்களிடம் நடந்து கொண்ட முறைதான் என்பது நாம் அறியாத ஒன்று. தனது மகன் டாரா ஷிக்கோஹ் மற்றும் தன்னுடைய பேரன் ஒளரங்கசீப்பால் கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி கேட்டவுடன்தான் அவர் மரணப்படுக்கையில் விழுந்தார்.

அசோகர் - பிந்துசாரர்
மன்னர் பிந்துசாரர் தன் மகன் அசோகர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தன் மகன் வருங்காலத்தில் உன்னதமான தலைவராக வருவார் என்று அவர் நன்கு அறிந்திருந்தார். ஆனால் ராஜ்ஜியத்தின் நடைமுறை விதிகளின் படி அவரின் மூத்த மகன் சுஷீம்தான் அடுத்த அரசனாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதை அசோகரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் சுஷீம் தனது ராஜ்ஜிய மக்களுக்கு செய்த கொடுமைகளை அசோகர் நன்கு அறிவார்.

பிந்துசாரர் மரணம்
இதனால் அசோகர் சுஷீமுடன் போரிட்டு அவரை கொன்று ராஜ்ஜியத்தை அடையும்படி அனைவராலும் தூண்டப்பட்டார். சுஷீமால் இந்த போரில் வெல்ல முடியாது என்று என்று பிந்துசாரர் நன்கு அறிவார். சுஷீமீன் மரண செய்தி பிந்துசாரரை அடைந்த உடனேயே அவர் மாரடைப்பால் மரணித்தார்.



Click it and Unblock the Notifications