Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா?
மொத்தமிருக்கும் 18 புராணங்களில் பிரம்மதேவரால் உருவாக்கப்பட்ட பத்ம புராணம் மிகவும் முக்கியமானதாகும்.
மொத்தமிருக்கும் 18 புராணங்களில் பிரம்மதேவரால் உருவாக்கப்பட்ட பத்ம புராணம் மிகவும் முக்கியமானதாகும். இந்த புராணம் முழுக்க முழுக்க விஷ்ணு-லக்ஷ்மி மற்றும் சிவன்-பார்வதியை பற்றி கூறுவதாகும். பின்னாளில் இது இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவின் கிழக்கு பகுதிக்கும், மற்றொரு பகுதி மேற்கு பகுதிக்கும் உண்டானதாக மாற்றப்பட்டது.

பத்ம புராணத்தில் லக்ஷ்மி தேவியின் அருளை பெறுவது எப்படி என்று பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த புராணத்தில் கூறியுள்ளபடி செல்வத்தின் கடவுளாக லக்ஷ்மி பிர்கு முனிவருக்கும் அவரது மனைவி க்யாதிக்கும் மகளாக பிறந்தவர். இதில் லக்ஷ்மியின் அருளை பெறுவதற்கு பக்தர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டள்ளது. லக்ஷ்மியின் அருளை பெறுவதற்கு என்னென்ன பண்ண வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அரசமரம்
பத்ம புராணத்தின் படி பௌர்ணமி நாளன்று காலை நேரத்தில் லக்ஷ்மி தேவி அரச மரத்திற்கு வருவார் என்று கூறப்படுகிறது. எனவே லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் பௌர்ணமி நாளன்று அதிகாலையில் அரச மரத்தை வழிபடுவது நல்லது.

வாழை மரம்
ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் வாழை மரத்திற்கு கங்கை அல்லது வேறு புனித நதியின் நீரை ஊற்றுவது உங்களுக்கு லக்ஷ்மியின் அருளை பெற்றுத்தரும். மேலும் வாழை மரத்திற்கு முன் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.

நெய் விளக்கு
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்திற்கு பால் ஊற்றி, வெல்லம், இனிப்பு நீர் மற்றும் நெய் விலகற்றி வழிபட வேண்டும். இது உங்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவதுடன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

லக்ஷ்மி சாதனா சடங்கு
மஹலக்ஷ்மி பூஜை எப்பொழுதும் புதன் கிழமை இரவில்தான் செய்ய வேண்டும். புதன் கிழமை லக்ஷ்மி தேவிக்கான சிறப்பு நாளாகும். இந்த நாளில் குளித்து விட்டு எப்பொழுதும் சுத்தமான உடைகளை அணிய வேண்டும்.

பூஜை ஆசனம்
கிழக்கு நோக்கி ஆசனம் அல்லது துணியின் மீது அமரவும். ஒருவேளை உங்களிடம் மரப்பலகை இருந்தால் அதனை மஞ்சள் துணியால் மூடி அதன்மீது அமரவும்.

ஸ்ரீ லக்ஷ்மி எந்திரம்
ஒரு ஸ்டீல் தட்டில், குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து அதன்மீது லக்ஷ்மி எந்திரத்தை வைக்கவும். ஒருவேளை லக்ஷ்மி எந்திரம் கிடைக்கவில்லை என்றால் ஒரு பேப்பரில் லக்ஷ்மி எந்திரத்தை வரைந்து அதனை ஸ்வஸ்திக் சின்னத்தின் மீது வைக்கவும்.

சுற்றுசூழலை சுத்தம் செய்தல்
அதன்பன் நெய், பால், தேன், குங்குமம், வெள்ளை அரிசி மற்றும் மஞ்சள் நிற மலர்களை லட்சுமி எந்திரத்தின் மீது வைக்கவும். நெய் விளக்கேற்றி அதனபின் ஊதுபதிகளை ஏற்றி வைக்கவும்.

வேண்டுதல்
உங்களின் பெயரைக் கூறி எனது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க வேண்டும் லக்ஷ்மி என்று வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும், நல்ல வாழ்வையும் வழங்குமாறு வேண்டிக்கொள்ளுங்கள். பூஜை முடிந்த பிறகு பிள்ளையார் மற்றும் சிவபெருமான் மந்திரத்தைக் கூறி பூஜையை முடிக்கவும்.



Click it and Unblock the Notifications